Related posts

Breaking News

எந்திர இதயம் - Episode 3

எந்திர இதயம், எபிசோட் 3


இதை போன்ற விஞ்ஞான புனைகதைகள் இப்போது தமிழில் வருவதே இல்லை. இது என்னாலான ஒரு சிறு முயற்சி, படித்து விட்டு மறக்காமல் உங்கள் பொன்னான கருத்துக்களை பகிருங்கள்.

எந்திர இதயம், எபிசோட் 1:- https://www.timesofkavi.com/2020/02/episode-1.html

எந்திர இதயம், எபிசோட் 2:- https://www.timesofkavi.com/2020/03/episode-2.html

*******

சிறுவயதில் நானும் அப்பாவும், அவ்வப்போது வாக்கிங் செல்வோம். ஒரு முறை அப்படி சென்றுக் கொண்டிருக்கும் போது எதிரில் என் வகுப்பாசிரியர் வந்து கொண்டிருந்தார். அவர் எங்களை பார்த்து கையசைத்து விட்டு அருகில் வந்தார். எனக்கு தெரிந்த நாளிலிருந்தே அப்பா மிகவும் செல்வாக்கு மிக்கவர். அவரை யார் கண்டாலுமே புன்னகையுடன்தான் அவரை எதிர் கொள்ளவார்கள். என் அப்பாவுமே, எந்த ஒரு பொய் பந்தாவும் இல்லாமல் வருபவர்களை உபசரிப்பார். அப்போது அவர் மிகவும் ஓப்பன் மைண்டோடுதான் சக மனிதர்களோடு பழகினார். அத்தோடு, எதிரில் வந்த ஐங்கரன் ஆசிரியர், எங்கள் குடும்பத்திற்கு ஏற்கனவே பழக்கமானவர்தான். அதனால் என் ஆசிரியர் எங்கள் இருவரையும் கண்டவுடன், எங்களோடு உரையாடுவதற்காக வந்தார், 

“குட் மார்னிங் புரோபசர்”

என் அப்பா ஒரு விஞ்ஞானி, அத்தோடு பல பல்கலைகழகங்களில் விசேட விரிவுரையாளராகவும் இருப்பதனால், அவரை பொதுவாக எல்லோருமே புரோபசர் என்றுதான் அழைப்பார்கள்.

“குட் மார்னிங் மிஸ்டர்.ஐங்கரன், என்ன புதுசா வாக்கிங்லாம் வாரீங்க அதுவும் லீவு நாள்ல, வீட்டுல மிஸஸ் தொந்தரவு தாங்க முடியலையா?”

“உங்களுக்கு என்ன சார்? இந்த கஷ்டமெல்லாம் இல்ல, அருமையான வாழ்க்கை” என்றார் ஐங்கரன்.

அப்பாவுக்கு இது போன்ற சிலேடைகள் பிடிக்காது. அப்பாவும் அம்மாவும் இப்போது ஒன்றாக இல்லை, அதைதான் அவர் கிண்டலாக சொல்கிறார் என்பது சிறுவனான எனக்கே புரிந்தது. அப்பா எதை மறக்க நினைக்கிறாரோ அதையே மீண்டும் மீண்டும் ஞாபக மூட்டும் எல்லோருமே ஞாபக மூட்டுகிறார்கள். வாழ்க்கையில் கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்களை யார்தான் மறக்க நினைக்கவில்லை. அப்பா மெதுவாக பேச்சை மாற்றினார்.

“அப்புறம், என்னோட  சன் எப்படி பர்வார்ம் பண்றான். ரிப்போர்ட் கார்ட் பார்த்தேன், எல்லா பாடத்துக்கும் நல்லா ஸ்கோர் பண்ணிருக்கான் இல்லையா..?

அவருக்கு கதைப்பதற்கு வேறு டாபிக் கிடைக்கவில்லை போலும்.

“ம், நல்ல பையன்தான். டீச்சர்ஸ் சொல்றத கேக்குற ரேர் ஆன பையன்கள்ல ஒருத்தன், ஆனா சின்னதா ஒரு விஷயம் மாத்துனான்னா நல்லாருக்கும்”

சற்று இடைவெளிவிட்டு அவரே தொடர்ந்தார்.

“இவன் பாடத்துல நல்லாதான் ஸ்கோர் பண்றான், ஆனா ப்ராக்டிகல் விஷயங்களுக்கு தயங்குறான். குறிப்பா மேடையேறி ஏதும் பர்வார்ம் பண்ணனும்னா, ரொம்ப பயப்புடுறான். ஸ்டேஜ் ஃபியர் போல.” என்றார்.

அப்பாவும் அதை ஆமோதிக்கும் விதமாக தலையசைத்து கொண்டிருந்தார். பின்னர் இருவரும் சில அரசியல் நடவடிக்கைகளையும் டெக்னிகல் விஷயங்களையும் பற்றி கலந்துரையாடி விட்டு தம் சம்பாஷனைகளை முடித்துக்கொண்டனர். நானும் அப்பாவும் அவருக்கு விடை கொடுத்து விட்டு மீண்டும் நமது நடை பயிற்சியை தொடர்ந்தோம்.

அப்பா கண்டிப்பாக இன்று ஒரு லெக்‌ஷர் எடுக்கப் போகிறார் என்பது அவரின் முக இருக்கத்தைக் கொண்டே எனக்கு தெரிந்து விட்டது. அத்தோடு ஜங்கரன் ஆசிரியரும் விடுமுறை நாட்களில் இந்த குறை கூறும் பணியைதான் முழுமையாக செய்து கொண்டிருக்கிறார் என்பதும் புரிந்தது. நாமிருவரும், நடந்து கொண்டே வீட்டிற்கு அருகில் இருந்த பூங்காவிற்குள் நுழைந்தோம். அங்கே மரங்களின் நிழலில் போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் அவர் அமர்ந்து கொண்டார்.

“தம்பி, இப்படி உட்காரு” என்றார்.

நானும் அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டேன். அவருடன் அமர்ந்து இருக்கும் போது அன்றைய நாள் என் வாழக்கையில் எத்தனை அருமையானது என்பதை என்னால் உணர முடியவில்லை. ஆனால் பின்நாட்களில் இந்த அற்புமான தருணத்தை நினைத்துப் பார்த்திருக்கிறேன், கண்ணை மூடிக் கொண்டு அதிலேயே வாழ்ந்திருக்கிறேன். ஆண் பிள்ளைகளுக்கு, அப்பாக்கள் சொல்லும் அறிவுரைகள் அந்தந்த தருணத்தில் காகித குப்பைகளாகவும், தனது தந்தை வயதை அடையும் போது வேத வாக்குகளாவும் மாறுவது இயற்கையே. நானும் இதற்கு விதிவிலக்கல்ல.

அப்பா உரையாட தொடங்கினார்;

“காட்டுல எவ்வளவோ மிருகங்கள் இருக்கு, கம்பீரமா வேட்டையாடுற புலிகள், பருத்த உடலை வச்சிருக்க யானைகள், எந்த மிருகத்தையும் வேட்டையாட துணிந்த ஓநாய் கூட்டங்கள்னு ஏகப்பட்ட மிருகங்கள் இருக்கு, ஆனா ஏன் சிங்கத்த மட்டும் காட்டுக்கு ராஜானு சொல்றாங்க தெரியுமா? என்றார். அவர் ஏன் இப்படி தொடங்குகிறார் என்பது அப்போது எனக்கு புரியவில்லை.

“ஏன்னா சிங்கத்துக்குதான் பிடரி இருக்கு, பார்க்க ராஜாவுக்கு கிரீடம் வச்ச மாதிரி இருக்கும். அதுனாலதான் அத காட்டுக்கு ராஜானு சொல்றாங்க” என்றேன் நான்.

அப்பா மெதுவாக சிரித்தார்.

“அதுதான் கிடையாது, அது ஒரு கிம்மிக். வழக்கமா எல்லோரும் சொல்றது அதுதான். ஆனா சிங்கங்கள ராஜாவா கருதுறத்துக்கான காரணம் என்ன தெரியுமா?...அதனுடைய வாழ்க்கை முறைதான்”.

“அப்படின்னா?”

“சிறுத்தைகளும், சில புலிகளும் சிங்கங்கள விட வேகமாக ஓடி தன் இரைகள பிடிக்கும், வேட்டையாடும். ஆனா, அவை எல்லாமே வெளில பெருசா தலை காட்டாது. மரங்களிலையும் மழைக்காடுகள்லயும் பதுங்கி பதுங்கி வாழும்...ஆனா பொதுவா சிங்கங்கள், ஒரு போதும் பதுங்கி வாழாது. அது வெட்ட வெளியா இருக்குற இடங்கள்ல, தன் கூட்டத்தோட கம்பீரமா வாழும். எந்த வேங்கையும் வேழமும் அத நெருங்கவே பயப்படும். இத நேர்ல பார்த்த மக்கள்தான், சிங்கத்த காட்டுக்கு ராஜானு சொன்னாங்க. ஒரு மான், மானா இருக்கத நெனைச்சி பயப்படும், ஒரு புலி, தான் புலியா இருக்கத நெனச்சு பயப்படும். ஆனா சிங்கங்கள், எப்பையுமே பயமில்லாம தான் சிங்கமா இருக்கத நெனச்சி பெருமையா திரியும்.”

“புலிகளும் திறமையா வேட்டையாடும், சிங்கங்களும் திறமையா வேட்டையாடும். ஆனா யாரு கம்பீரத்தோட வாழறாங்க அப்படிங்குறதுதான் முக்கியம். அப்படி வாழ்றவன்தான் ராஜா. அதே மாதிரிதான் நீயும், நல்லா படிச்சா மட்டும் போதாது. நீ வெளில வரணும், இந்த சமூகத்துல நீ ஒரு தனி அடையாளமா கம்பீரத்தோட இருக்கணும், உன் பேர சொன்னா, ஒரு தனி மரியாதை இருக்கணும்.”

என்றவர் சிறிய மௌனத்திற்கு பின் கேட்டார்.

“நீ காட்டுல புலி மாதிரி வாழப் போறியா? இல்லா சிங்கம் மாதிரி வாழப்போறியா? நீதான் யோசிச்ச முடிவெடுக்கணும்” என்றார்.

இன்று

இப்போது அப்பாவை பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். அவரது முகத்தில் எந்த வித சலனமுமே இல்லை. நான் இவரை போல தைரியசாலி இல்லை. சிங்கம் போல வாழ்ந்த மனிதர் இவர். இன்று உறைந்து போயிருந்தார். அவரை நான் அப்படி பாரத்ததில்லை. எனக்கு வெடித்து கொண்டு அழுகை வந்தது. சில மனக்கசப்புகளால், சில காலமாகவே அவரை நான் புறக்கணித்திருந்தேன். சீக்கிரமே ஒரு நாள் இருவருக்கும் உள்ள இடைவெளி சரியாகும் என நினைத்திருந்தேன். ஆனால், அவர் இப்படி இறப்பார் என நினைத்துக்கூட பாரக்கவில்லை.

நான் கண்ணீர் சிந்துவதை பார்த்து விட்டு அப்பாவின் பர்சனல் செகரட்டரி, நிலா என் அருகில் வந்தாள்.

நான் சற்றே கண்களை துடைத்துவிட்டு “எப்படி?” என்றேன் தழும்பிய குரலில்.

அவள், “புரோபசர் நேத்துதான், எந்திர இதயம் அப்படிங்குற தன்னோட புதிய கண்டுபிடிப்பை அறிவிச்சார். நேத்து நைட் ஏதோ ஒரு பரிசோதனைல இருக்குறப்ப இப்படி ஆகி இருக்கு. நான் கமரால இருந்து ஃபோன் கால்ஸ் வர எல்லாம் செக் பண்ணிட்டேன். அதோட அவரோட நெஞ்சு பகுதி துளைச்சு உள்ள இருந்த இதயத்த தனியா பிச்சு எடுத்து ரொம்ப கொடூரமா கொல பண்ணிருகாங்க, அதுவும் எந்த சுவடும் இல்லாம”

எனக்கு இதை கேட்கும் போதே உடம்பெல்லாம் சில்லிட்டது. என் அப்பா, நான் சிறு வயதில் இருந்த போது பார்த்த மனிதராக அவரது கடைசி காலத்தில் இருக்கவில்லைதான். அவர் மனிதர்களை வெறுக்க தொடங்கிவிட்டார், பணம் என்னும் மாயைக்குள் சிக்கிக் கொண்டிருந்தார், ஆனால் யார் இவரை இப்படி கொல்லத் துணிந்திருப்பார்கள்..!

“எங்க இறந்து கிடந்தாரு? நான் பார்க்கணுமே” என்றேன்.

“ லேப்லதான், இதுல ஒரு வித்தியாசமான விஷயம் என்ன தெரியுமா?”

“என்ன”?

“ கைரேகைகளை ஆராய்ந்ததுல, நம்ம பார்பியோட கைரேகையோட ஒத்து போற ஒரு கைரேகை லேப்ல கிடைச்சுச்சு”

“பார்பியோடதா?”

“ம்ம்ம்...நம்ம பார்பியோடது” என்றாள்.

“பார்பியின் கைரேகை இதில் எப்படி வந்திருக்கும்...என யோசித்துக் கொண்டிருந்தேன்”. உலகத்தில் யார் வேண்டுமானாலும் இந்த கொலையை செய்திருக்கலாம், ஆனால் அது பார்பியாக மட்டும் இருக்கவே முடியாது. ஏனென்றால், அவள் இப்போது உயிருடனேயே இல்லையே...

- தொடர்ந்து துடிக்கும்...






No comments

//]]>