Related posts

Breaking News

எந்திர இதயம் - Episode 2


இது எந்திர இதயம் என்ற எனது தொடர்கதையின் இரண்டாவது அத்தியாயம். முதலாவது அத்தியாத்தின் லிங்க் இதோ https://www.timesofkavi.com/2020/02/episode-1.html

முதல் அத்தியாயம் படித்திருந்தால்தான் இந்த அத்தியாயம் முழுமையாக விளங்கும். உங்கள் மேலான கருத்துக்களை கீழே பகிரவும் மக்களே. அதைக் கொண்டுதான் மேற்கட்ட மேம்பாடுகளை முன்னெடுக்க முடியும். முதலாவது அத்தியாயத்தை கிட்டதட்ட 1000 பேர் வாசித்துள்ளனர். உங்கள் ஆதரவுக்கு நன்றி. கீழே நிறைய கமண்டுகள் வருவதை பொறுத்தே அடுத்த அத்தியாயம் சீக்கிரம் வெளியிடப்படுவதா, இல்லாயா என்பது தீர்மானிக்கப்படும்.

*******

“என்னது! நீங்க கொன்னுடீங்களா?” என்றான் சத்தமான தொனியில், ஏனெனில் அவன் இதை எதிர்பார்க்கவில்லை. 

“ ஆமா சேர், நான்தான் கொன்னேன்”

“ நான் சொல்லியிருக்கனா இல்லையா? இப்படி கொல்லாதீங்கனு, என்கிட்ட சொல்லிட்டு செய்திருக்கலாம்ல, இப்ப பாருங்க இப்படி ஆகிருச்சு” 

“ சாரி சேர், இனிமே இப்படி பண்ண மாட்டேன்” 

“இனிமேனா? அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே, இன்னைக்கு மார்னிங் என்ன பார்க்க கிளையண்ட் வாராங்கனு சொன்னேன்தானே, அப்பறம் எதுக்கு நேத்து ஸ்டோர் ரூம்ல எலி மருந்து வச்சி எல்லா எலியையும் கொன்னீங்க?  இப்ப இந்த நாத்தத்துல எப்படி நான் கிளையண்ட கூட டிஸ்கஸ் பண்றது மூர்த்தி?”

“ நான் மருந்து வச்ச பிறகுதான் எனக்கு உங்க மெசேஜ் கிடைச்சுச்சு, கவலபடாதீங்க, அதுக்குதான் சேர் நான் எயார் ஃப்ரெஷ்னர கையோட எடுத்துட்டு வந்தேன். அடிச்சு விடவா சேர்? என்று சொல்லிவிட்டு, பதிலை எதிர்பார்க்காமல் வாசனை திரவியத்தை தெளித்தார் மூர்த்தி.

வெளியில் ஏதோ சத்தம் கேட்க, அவன் கதவு வழியாக பார்த்தான். டின்டட் கிளாஸ் வழியே ஒரு உருவம் தெரிந்தது.

“ மூர்த்தி, கிளையண்ட் வந்துட்டாரு போல உள்ள அனுப்பி விடுங்க” 

“ஓகே சார்” என்றவாறு வெளியே சென்றார் மூர்த்தி. 

பின்னர் ஒரு 40 வயது மதிக்கத்தக்க மனிதர் உள்ளே வந்தார். முகத்தில் ஆங்காங்கே சுருக்கங்கள், கருத்துக்கொண்டிருக்கும் உதடு தேவையான அளவு நரைமுடி என பார்ப்பதற்கு சாட்ஷாத் மிடில் கிளாஸ் போலவே இருந்தார். 

“ வணக்கம் சேர், இருங்க” 

“ வணக்கம் சேர், என்னோட பேரு கமல், நேத்து நைட் ஃபோன்ல சொன்னனே” என்றவர் தயங்கிக் கொண்டே “இங்க நாமா கதைக்கிறத ரெகார்ட் பண்ற மெஷின்ஸ் எதுவும் இருக்கா சேர்?” என்றார். 

“இல்ல மிஸ்டர்.கமல்”

“ Are you sure? ஏன்னா நான் இப்ப சொல்ல போறது ரொம்பவுமே சென்சிடிவ்வான மேட்டர் அதான்”

அவரது தயக்கத்தின் காரணம் நியாயமானது, 2035ல், பொதுவாக எல்லா இடங்களிலுமே, முன்பிருந்த சிசிடிவி கமராக்கள் போல, இப்போது பறக்கும் ட்ரோன் (Drone)கள் மூலம் அனைவரும் கண்காணிக்கபடுகின்றனர். அத்தோடு, பல இடங்களிலும் ரகசிய கமராக்களும், ரகசிய ஆடியோ ரெக்கார்டர்களும், இலகுவில் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் பொருத்தப்பட்டிருக்கும். இதனால், பெரும்பாலும் யார் என்ன கதைத்தாலும், அதை அரசாங்கம் ரெகார்ட் செய்து வைத்துக்கொண்டு, தேவையான போது அதைப் பயன்படுத்தும். தேசத்தின் பாதுகாப்புக்காக அவர்கள் இதை எல்லாம் செய்வதாகதான் சட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் கூட, இதை மக்கள் வசிக்கும் வீடுகள், குறிப்பிட்ட சில பல்கலைகழகங்கள், அரசாங்க அலுவலகங்கள், மூடிய முறையில் செயற்படும் நீதிமன்றம், வக்கீல்களின் அலுவலகம், பாராளுமன்றம் மற்றும் இன்னும் பல  இடங்களில் இதனை செயற்படுத்த முடியாது. இவை Privacy Protection Act 2025 மூலமாக பாதுகாக்கப்படுகின்றன. இந்த சட்டமும் இல்லையென்றால் சாதாரண மக்களின் வாழ்வு அதோகதிதான்.“ பயப்படாதீங்க, இது லாயர் ஆபிஸ். ப்ரைவசி ப்ரோடெக்‌ஷன் ஆக்ட் 2025, செக்‌ஷன் 32 உப சரத்து 3 படி, லாயர் ஆபிஸ்ல கிளையண்ட் அனுமதி இல்லாம, கிளையண்ட் கதைக்கிறத ரகசியமாக ஒட்டு கேக்குற எந்த உபகரணங்களையும் பாவிக்க முடியாது. ஆனா, டெரரிசம் அல்லது நேஷனல் எமர்சன்ஸினா ரெகார்ட் பண்ணலாம்? அந்த அளவுக்கு சீரியஸா மேட்டர் ஏதும் நீங்க சொல்லப்போறதில்லையே? 

“ச்சே, இல்லல்ல சேர், இது அந்த அளவுக்கு சீரியஸ் இல்ல” இது வேற. 

“எதுனாலும் தயங்கமா சொல்லுங்க சேர்”

“ நான் நேத்து நைட் ஒரு கொல பண்ணிட்னேன் சேர், அதுவும் என்னோட மனைவிய கொன்னுட்டேன். இது நீங்க சொன்ன அளவுக்கு சீரியஸ் இல்லையே?”

“என்னது! நீங்க கொன்னுடீங்களா?” என்றான் சத்தமான தொனியில், ஏனெனில் அவன் இதை எதிர்பார்க்கவில்லை. 

******

“என்ன சார் சொல்றீங்க, மனைவிய கொல பண்ணிடீங்களா? கொல பண்ணிட்டு எப்படி இங்க வந்தீங்க? அவங்களோட ஸ்மார்ட் வாட்ச்ல மூலமா, பாடி டெம்பரேச்சர அண்ட் ஹார்ட் பீட் ரேட்ட ட்ராக பண்ணி போலிஸ் வந்துருக்குமே”

“இப்போதைக்கு வர மாட்டாங்க, அவங்க ஸ்மார்ட் வாட்ச் சார்ஜ்ல இருக்கு, ஆனா இன்னும் கொஞ்சதுல வரலாம். அவங்க என்ன கைது பண்றதுக்கு முதல் உங்ககிட்ட எல்லாத்தையும் நான் சொல்லிரனும். அண்ட் யெஸ் நான்தான் கொலை பண்ணேன், ஆனா நானா செய்யல சேர், என்னால கட்டுபடுத்த முடியல, ஆனா என்னோட உடல் என்னோட பேச்சையும் மீறி அவள கொன்னுருச்சி சேர்” 

“ சத்தியமா புரியல, கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க”

“ சேர், நான் ஒரு சாப்ட்வேர் இன்ஞினியர். நான், என்னோட மனைவி, அப்பறம் என்னோட 6 வயசு பொண்ணுனு ஒரு சின்ன குடும்பம் என்னோடது, நல்லதான் லைஃவ் போய்க்கிட்டிருந்துச்சு சேர், தீடிர்னு ஒரு நாள், எனக்கு நெஞ்சுவலி, என்னனு பார்த்தா, ஹார்ட்ல ப்ராப்ளம்னு சொல்லிடாங்க. செய்துட்டு இருந்த வேலையையும் விட்டுட்டு, சேத்து வச்சிருந்த கொஞ்ச நஞ்ச காசயும் எடுத்துகிட்டு, ட்ரீட்மண்டுகாக பல நாடுகளுக்கு போனோம். யாராலயும் சரி பண்ண முடியல, இந்த நோய குணப்படுத்த முடியாதுனு சொல்லிடாங்க. அப்புறம் கொஞ்ச காலம் வீட்லயே இருந்தேன். வீட்ல பணப்பிரச்சன வேற, வைவ்ட காசுலதான் செலவுகள சமாளிச்சோம். அவக்கு யோசன கூடி, விரக்தியில குடிப்பழக்கத்துக்கு ஆளாகிட்டா. ஒரு கட்டத்துக்கு மேல அவ என்ன வெறுக்க தொடங்கிட்டா. டெய்லி சண்ட. அது ஏன் சேர் இந்த மனுஷங்க எல்லாம் இப்படி? சந்தோஷத்துலயும் சொத்துலயும் பங்கு கேப்பாங்க, ஆனா கஷ்டம்னு வந்தாலோ கடன்னு வந்தாலோ திரும்பி கூட பார்க்க மாட்டங்க?

“ அது மனிதர்களின் பொதுவான குணம் கமல், அத மாத்துறது கஷ்டம். ஒரு சிலர்தான் அன்புக்காக எதையும் செய்வாங்க, நீங்க மேல சொல்லுங்க”

“ இப்படி வாழ்க்கைய நினைச்சு நொந்து போன நேரத்துலதான், நான் ஒருத்தர சந்திச்சேன். செயற்கையான இதயங்கள தயாரிக்கிற பணியில, கடைசி கட்டத்துல அவங்க இருக்குறதாகவும், அதற்கான டெஸ்டிங் பண்ணுறத்துக்காக ஒரு நபர் தேவைனும் சொன்னாங்க. ஒரு வேளை, இந்த டெஸ்டிங்ல் பாசிடிவ் ரிசல்ட் கிடைச்சா, நீங்க அதிக நாட்கள் வாழலாம், இல்லைனா இறந்திடுவீங்க அப்படினு வெளிப்படையா சொன்னாங்க. ஆரம்பத்துல என்னோட மகளோட கொஞ்ச நாள் சரி இருக்கலாம், அதனால இது வேணாம்னுதான் நினைச்சேன். ஆனா, ஒரு வேளை, எனக்கு சரியாகிட்ட அவள பிரிய தேவையில்லனு தோணுச்சு. அதான் ஒத்துகிட்டேன். ஆபரேஷனும் நடந்துச்சு”

“செயற்கை இதயமா? ஆமா நேத்து ஈவ்னிங் இதபத்தி எதுலயோ பார்த்தேன். சரி கமல் இதுக்கும் கொலைக்கும் என்ன சம்மந்தம் இருக்கு?”

“இருக்கு சார், அந்த ஆபரேஷன்ல நான் பொழைச்சுட்டேன், முன்ன இருந்தத விட என்னால வேகமாக இயங்க முடிஞ்சது, அதோட என்னோட சாப்ட்வெயார் இன்ஞினியரிங் ஸ்கில்சயும் அவங்க டெஸ்ட் பண்ணாங்க, முன்னய விட என்னால நல்லா யோசிக்கவும் முடிஞ்சது. எல்லா சோதனைகளும் முடிஞ்ச பிறகு, நான், என்னோட மகள பார்க்குற ஆர்வத்துல வீட்டுக்கு வந்தேன். அங்க என்னோட பொண்ண பார்த்ததும் எனக்கு அவ்வளவு சந்தோஷம் சார், அவளும் “அப்பா, அப்பா”னு என்ன கட்டி பிடிச்சுகிட்டு விடவே இல்ல. ஆனா, என்னோட மனைவி என்னை பெரிசா வெல்கம் பண்ணல ஒரு மாதிரி இருந்தா, ஒரு கப் டீ கூட கொடுக்காம அவ ரூம்கு போய்ட்டா..”

“அதுனாலதான் நீங்க அவள கொன்னுடீங்களா?”

“கண்டிப்பா அதுனால கிடையாது, எனக்கு எதோ விவகாரமா பட்டுச்சு, நான் முந்தியே அவளோட மொபைல என்னொட டிவைஸ்ல கனக்ட் பண்ணியிருந்தேன், அத மூலமா அவளோட மேசேஜஸ் பார்த்தேன், அவ இன்னொருத்தனோட அஃவ்வயார்ல இருக்கானு தெரிஞ்சுகிட்டேன். அவன் இன்னைக்கு, நான் வந்தனால அவன் வரலனும், அதுதான் அவளோட கோபத்துக்கு காரணம்னு புரிஞ்சிகிட்டேன். அதோட என் பொண்ணோட உடம்புலயும் நிறைய தழும்பு, இவதான் தன்னோட இயலாமைய என் பொண்ணு மேல காட்டியிருக்கா, நான் என்ன ஏதுனு அவள கூப்டு கேட்டேன். பெரிய சண்ட, தீடீர்னு அவ என்ன தாக்க வந்தா, நான் பதிலுக்கு தாக்குனேன், அவ இறந்துட்டா”

“ஒ, செல்ஃப் டிவன்ஸா, தண்டனை காலத்த குறைச்சிரலாம் அப்ப”

“ஆனா சார், அவளோட இதயத்த பிச்சி தனியா எடுத்துட்டேன், இதுக்கும் self defense அப்ளை பண்ணலாமா சேர்?”

“வாட்?????” என்று கத்தினான் ஒரு மடங்கு அதிர்ச்சியுடன்.

மூர்த்தி, அவசர அவசரமாக கதவை பிளந்து கொண்டு மூச்சிரைக்க உள்ளே ஓடி வந்தான்.

“சார், அப்பாவ லேப்ல வச்சி யாரோ கொன்னுடாங்களாம், அதொட அவரோட ஹார்ட்ட வேற தனியா பிச்சி எடுத்து, அவரோட கையிலய வச்சிட்டு போயிருக்காங்க சார்” என்றான்.

“வாட்?????” என்று மறுபடியும் கத்தினான் பன்மடங்கு அதிர்ச்சியுடன்.  2 comments

Anonymous said...

I've said the same thing for the first episode as well. Some of the words are kind of odd. Like "Ser".. Is it the Tamil translation of Sir? Please sir. Don't mess up the language and too many mistakes. I've read many many books, but the language flow needs to be corrected. I am not demeaning the effort, but please take is constructively. The language has to be in a particular style. Simple and easy to understand. Broken down to simple sentences, etc., and don't try to colloquialize the words just for the sake of it. It sure feels odd. Never had the feeling when I read other books. Please try to correct it and I'm sure it'll be a fantastic story!!

Kavind Jeeva said...

Thanks for the feedback, in Indian English, people say சார் for sir. but original pronunciation is சேர் as to British accent, and one more thing, I am repeating it, I didn’t make too many mistakes as you said. These are the original accents, but if readers wish to read in Indian English accent. I’ll reconsider it. Once again, thank for your valuable feedback

//]]>