Related posts

Breaking News

ரிட்லர்-புதிர் நாள்(A day of Riddle)

வணக்கம் 'சகோ'க்களே!
கோடைக்கால வேளைதனில் வியர்வை துளிகளுக்கு பஞ்சமிருக்காது.அதனால் 'ஜில்' என ஒரு பதிவை எழுதவதற்காக ஓடோடி வந்துவிட்டேன்(ரொம்ப ஓவராத்தான் போறாப்புல).காமிக்ஸில் சூப்பர் பவர்களே இல்லாத சூப்பர் ஹீரோ என்றால் 'அவன் முதல் அது வரை' அனைவருக்குமே நினைவுக்கு வருவது பேட்மேன்தான்.பகலில் பணவானாகவும் இரவில் கனவானாகவும் செயற்படும் இவரது கதைகளில் விறுவிறுப்புகளுக்கு பஞ்சமிரா.இம்முறையும் இவரது கதைகளில ஒன்றைப்பற்றியே பார்க்கப்போகிறோம்.

Riddler #1-A Day of Riddle(2015)


பேட்மேனின் கதைகளில் தலையாய வில்லன் ஜோக்கர்.ஜோக்கரின் ஒரு சில குணவியல்புகளை ஒத்த இன்னுமொரு கதாப்பாத்திரம்(வில்லன்)தான் ரிட்லர்(Riddler).யாரையாவது கடத்தி வைத்துக் கொண்டு,பேட்மேனை புதிர்களால் சூழ வைத்து அப்புதிர்களை விடுவிக்க பேட்மேனுக்கு வாய்ப்பு வழங்குவான்.பேட்மேன் தவறினால் கடத்தப்பட்ட நபர் க்ளோஸ்!

கிட்டதட்ட இதே கருவை மையமாக வைத்து வெளிவந்த இன்னுமொரு கதைதான் இது.சிறையில் இருக்கும் மாபெரும் திருடியான செலினா எனப்படும் கேட்வுமன் தப்பித்து விடுகிறாள்.அவளைக் கண்டுபிடிக்கச் செல்லும் காவல் துறையினருக்கு மேலும் அதிரச்சி.காரணம் அவள் சிறையில் இருந்து தப்பிக்கவில்லை கடத்தப்பட்டிருக்கிறாள்.பல கட்ட தேடல்களுக்கு பின்னும் அவளையோ அவளைக் கடத்தியவர்களையோ அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை காவல் துறையை விட குற்றவாளிகளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருப்பவர் பேட்மேன்.அதனால் போலிஸ் கமிஷ்னர்.கோர்டான் பேட்மேனின் உதவியை நாடுகிறார்.தன் frienemyயான செலினாவைக் காப்பாற்ற புறப்படுகிறார் பேட்மேன்.அதே நேரம் காவற்துறையினரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் மர்ம மனிதன் ஒருவன்(வேற யாரு ரிட்லர்தான்),தான் தான் செலினாவைக் கடத்தியதாக கூறி கோதம் நகரின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தால் தன்னை சந்திக்கலாம் எனவும் தன்னை சந்திக்க பேட்மேன் மட்டுமே வரவேண்டும் என கூறி தொடர்பை துண்டிக்கிறான்.சம்பவ இடத்திற்கு பேட்மேன் செல்கிறார்.அவருக்கு துணையாக ஒரு போலிஸ் படையும் செல்கிறது.பேட்மேனை தொடர்ந்து போலிஸீம் வந்திருப்பதை அறியும் ரிட்லர் கோர்டானிடம் "தாங்கள் இவ்வாறு செய்வீர்கள் என எனக்கு ஏற்கனவே தெரியும் அதனால்தான் முன்னரேயே இடத்தை காலி செய்துவிட்டேன்"எனவும் "செலினாவை காப்பாற்ற வேண்டுமானால் பேட்மேன் அவ்வரங்கத்திறகுள்(குறிப்பிட்ட இடம்) தனியாக சென்று,அங்கு நான் பேட்மேனுக்கு வைத்துள்ள இரு புதிர்களை அவன் விடுவிக்க வேண்டும்" எனவும் கூறுகிறான்.உள்ளே செல்லும் பேட்மேனுக்கு அதிரச்சியளிக்கும் சம்பவம் ஒன்று இடம் பெறுகிறது.


அங்கு அவருக்கு இரண்டு புதிர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இரு புதிர்களில் ஒரு புதிருக்கான விடையை மட்டுமே கூற வேண்டும்.கேள்விகள் இலகுவானவைதான்.ஆனால் முதலாவது புதிரை தெரிவுசெய்து சரியான பதிலளித்தால் செலினா காப்பாற்றப்படும் அதே நேரம் பேட்மேன் இருக்கும் அவ்வரங்கம் வெடித்து சிதறிவிடும்.இரண்டாவது கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் பேட்மேன் காப்பாற்றப்படுவான் ஆனால் செலினாவின் கதை கதம் கதம்.கேள்விகளுக்கு பிழையான பதிலைச் சொன்னால் அரங்கம் வெடிப்பதுடன் செலினாவும் கொல்லப்படுவாள்.
இறுதியில் பேட்மேன் என்ன செய்தார்?செலினாவைக் காப்பாற்றினாரா? அல்லது தன்னைக்காப்பாற்றிக்கொண்டார அல்லது இருவரையுமா?என்பதே 'திடுக் திடுக்' மீதிக்கதை.

ஜோனதனின் கைவண்ணத்தில் ஓவியங்கள் கிறுக்கல்களைப்போல இருந்தாலும் நன்றாக இருக்கிறது.எதிர்பார்ப்பின்றி எடுத்த கதையின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்த வைக்கிறார் கதாசிரியர்.வெப்ப காலத்தில் உங்களை இக்கதை நிச்சயம் உள்ளம் குளிர்விக்கும்.இப்புத்தகத்தைப்பற்றி மேலும் காண இங்கே கிளிக்கவும்.

A.P:-  அவசியம் படிக்கவும்

கதை சுமாராக இருந்தாலும் இத்தருணத்தில் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும்.இத்தலைப்பில்,இக்கதையில் சித்திர நாவல்களும் எதுவும் வெளிவரவில்லை.இது முட்டாள்கள் தினத்திற்காக நானே எழுதி 'பட்டி டிங்கரிங்' பார்த்து வெளியிட்ட பதிவு.இக்கதையைப் படித்து சிலர் ஏமாந்திருக்கலாம்,ஒரு சிலர் உஷாராகியிருக்கலாம்.ஆனால் முக்கால்வாசி பேருக்கு இது ஒரு Surpriseசாக இருக்கும் என்பது உறுதி. உங்கள் பொன்னான நேரத்தை நான் மண்ணாக்கியிருந்தாலோ,உங்கள் எதிர்பார்ப்புகளை நான் வீணடித்திருந்தாலோ மன்னித்துவிடவும்.செய்த பாவத்திற்கு பிராயச்சிதமாய் டின்டின் பாகம் இரண்டை இம்மாதமே வெளியிட்டு விடுகிறேன்.
மன்னிச்சிருங்க மக்கா..!

8 comments

mayavi.siva said...

ஹாஹா...ஆகட்டும்..! எப்படியோ கடைசி நியூஸ் உண்மையா இருந்தா சரி..!

T K AHMED BASHA said...

ஹா ...ஹா

Kavind Jeeva said...

உண்மையாகும்..!

Kavind Jeeva said...

;)

Ram said...

na nalla kathaikera bro (apr 1)
munnar pathivetta batman, joker- the killing joke, arumai

Kavind Jeeva said...

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி bro..!

Paranitharan.k said...

நல்லது என்றும் தாமதமாக தான் நிறைவேறும் ..அது போல இதுவும் நிஜமாகட்டும்

Kavind Jeeva said...

நிச்சயமாக..!

//]]>