Related posts

Breaking News

GOAT Greatest of All Time

“லியோ படத்தை விடவா இந்த படம் திராபையாக இருக்கப்போகிறது?” என்ற நம்பிக்கையில்தான் டிக்கெட் புக் செய்தோம். அதற்கு இது சற்றும் சளைத்ததல்ல என்று படம் பார்த்த பின்னர்தான் தெரிந்தது. 


Spoiler Ahead 

இந்த சரி வர பயன்படுத்தப்படாத Deep Fake, Deaging technolgies, மனதை கொள்ளையடிக்காத இசை, கோபத்தை உண்டாக்கும் காமெடி காட்சிகள் இதையெல்லாம் கூட விட்டுவிடலாம், ஆனால் இந்த திரைக்கதை..? 


ஹீரோ Special Anti Terrorism Squadல் வேலை செய்வதாக சொல்கின்றனர், ஒரு சாதரண மனிதனுக்குரிய common sense கூட இல்லாமல் எழுதப்பட்டுள்ளது அவரது கதாபாத்திரம். 


எல்லா senseகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால் கூட, ஹீரோ கதாபாத்திரத்தால் எதையையுமே சரி வர செய்ய முடியவில்லை. தன் குழுவில் உள்ள நசீரை, கண் முன்னாலேயே கொல்ல, இவரால் தடுக்க முடியவில்லை, தன்னோடு வந்த இன்னொரு squad member அஜயையும் காவு கொடுத்துவிடுகிறார், தன் நண்பரின் மகளையும் காப்பாற்ற முடியவில்லை, அட தன் கையில் ஒப்படைக்கபட்ட பிள்ளையை கூட கொஞ்ச நேரம் பாரத்துக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு மோசமாக எழுதப்பட்ட ஹீரோ கதாபாத்திரத்தை நான் சமீபத்தில் பார்க்கவில்லை. 


இங்குதான் இதே விஜய் அவர்கள் நடித்த துப்பாக்கி திரைப்படம் நியாயபகம் வந்தது. அந்த நாயை வைத்து தீவிரவாத கும்பலை பிடிப்பார், தியேட்டரே சிதறும், and அந்த ரூபி கியூபை சரி செய்து கொண்டே குண்டு வைத்த இடத்தை கண்டு பிடிப்பது, இத்தனைக்கும் அந்த காட்சியில் ஒரு வசனம் கூட இருக்காது. 


சரி, வில்லனாவது ஏதாவது smart ஆக செய்கிறாரா? என பார்த்தால், அதுவும் இல்லை. எங்கேயாவது மாட்டிக் கொள்ள போனால் யாரையாவது கொன்றுவி்ட்டு தப்பித்து விடுவது. சத்தியமாக சொல்லுங்கள், இது நன்றாக எழுத்தப்பட்டுள்ளதா? 


கற்பனா திறன் அற்ற விதத்தில் வரும் காட்சிகள் தொடர்ந்து அயர்ச்சியளிக்கின்றன. இதில் நிறைய காட்சிகளில், ஏனைய படங்களில் இருந்து reference வேறு, எல்லாமே reference என்றால் “நீங்கள் சொந்தமாக என்ன எடுத்தீர்கள்?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 


பழைய டெம்ளேட் காட்சிகள், வீணாக்கப்பட்ட நடிகர் விஜய் அவர்களின் நல்ல உழைப்பு, லொஜிக் மட்டுமல்லாமல் இந்த பூமியிலேயே எங்கும் நடை பெற முடியாத, வேறு பிரபஞ்சங்களில் கூட சாத்தியப்படாத சீன்கள், Insta Reels/Youtube Shorts முதற் கொண்டு  ஆங்கில படங்கள் வரை உருவப்பட்ட காட்சிகள் என மகாமட்டமாக உள்ளது படம். இந்த படத்தில் நடிகர் விஜய் இல்லாம அடுத்த கட்டத்தில் உள்ள நடிகர்களில் எவரேனும் நடித்திருந்தால், இந்தியன் 2க்கு அடுத்து அதிகமா troll செய்யப்பட்ட படமென ரெக்கார்ட் செய்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை (இங்கு “ப்” ன்னா வருமா, வராதா? தெரிந்தவர்கள் சொல்லவும்).


One of the Greatest of All Time ஆன விஜய் அவர்களின் One of the Worst Movie All Time ஆக வந்துள்ளது இந்த G dot O dot A dot T. 

No comments

//]]>