Related posts

Breaking News

Oh My Kadavule Review

Oh my Kadavule Review


நல்ல ரொமான்டிக் காமடி படங்கள் படங்கள் பார்த்து நாளாகிவிட்டது என இருந்த வேளையில்தான், இன்று நண்பர்களுடன் இந்த படம் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஒரு நல்ல படத்துக்காக நாங்கள் மட்டுமல்ல, இப்படத்தின் நாயகன் அசோக் செல்வனும் காத்துக்கொண்டிருந்தார் என்பதே உண்மை. திரை ரசிகர்களாகிய எங்களுக்கும், நடிகர் அசோக் செல்வனுக்கு ஒரு நல்ல படம் கிடைத்ததா? பார்ப்போம். 

இந்த படம் ஒரு ரொமாண்டிக் + ஃபேண்டஸி வகைப்படம். கதைப்படி, அசோக் செல்வன், சூழ்நிலை காரணமாக தனது தோழியை மணந்து கொள்கிறார். அப்படியே மாமனாரின் நிறுவனத்திலும் ஒரு வேலைக்கு சேர்ந்துவிடுகிறார். ஆனால், திருமணம் ஆனாலுமே கூட தனது தோழியை தன் மனைவியாக எண்ணிப்பார்க்க முடியாமலும், பிடிக்காத வேலையை செய்து வேண்டிய கட்டாயத்தினாலும் சோர்ந்துவிடும் அசோக், ஒரு கட்டத்தில் மனைவியுடன் விவாகரத்து வாங்கும் நிலைக்கும் வந்துவிடுகிறார். இப்படியான ஒருவருக்கு தனது வாழ்க்கையை மீண்டும் முதலில் இருந்து வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்ன நடக்கும்? இப்படியான ஒரு சுவாரஸ்யமான கதைக்கருவை எடுத்து படமாக செய்துள்ளார்கள். 


படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் அதன் திரைக்கதைதான். கொஞ்சமாக சொதப்பினால் கூட முற்றாக போரடித்து விடக்கூடிய கதையை, அருமையான திரைக்கதை கொண்டு படமாக்கியுள்ளார், பாராட்டுக்கள். நடிப்பை பொறுத்தவரை, நாயகனான அசோக் செல்வன் சில இடங்களில் சற்று தடுமாறினாலும், பெரும்பாலும் சமாளித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ரித்விகாவுக்கு மீண்டும் ஒரு நல்ல படம்+ நல்ல கேரக்டர். தெய்வமகள் தொடரின் நாயகி வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஷா ரா ஆகியோரும் தங்கள் பங்கை நிறைவாகவே செய்துள்ளனர். இப்படத்தின் இன்னுமொரு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம்தான். கொஞ்ச நேரமே வந்தாலுமே, கிட்டதட்ட படம் முழுவதுமே வருவது போன்று இவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டதால், இப்படத்தின் ஸ்டார் வேல்யூ இன்னுமே அதிகரித்தை காண முடிந்தது. 

படத்தின் முதல் பாதி படு வேகமாக செல்கிறது. அசோக்-ரித்விகாவின் வாழ்க்கை, அசோக்கின் வேலை, இதனை சுற்றி வரும் சீரியஸ் + காமடி காட்சிகள் எல்லாமே படத்தை தாங்கி பிடிக்கின்றன. படத்தின் இரண்டாம் பாதி சற்றே நீளம்தான், ஆனாலும் செண்டிமன்ட் காட்சிகளுக்கு அந்த நீளம் அவசியம் என்பதால் பெரிதாக சிக்கலில்லை. மேலும், படத்தின் ஒளிப்பதிவு இவை எல்லாவற்றையுமே நல்ல கலர்வுல்லாக நமக்கு காட்சிபடுத்துவதால், இவற்றினை ஆர்வத்துடன் ஒன்றி பாரக்க முடிகிறது. மேலும் படத்தில் நிறைய இடங்களில் கவுதம் மேனன் சாயல் தெரிந்தே பயன்படுத்தப்பட்டுள்ளதும் அருமையாக உள்ளது. ஆனால் அதற்காக “அச்சம் என்பது மடமையடா+விண்ணைத்தாடி வருவாயா” படங்களின் காட்சிகள் அப்படியே எடுக்காமல் புதுசாக ஏதேனும் செய்திருக்கலாம்.


படத்தின் மைனஸ்களென்றால், முதலில் இசைதான். படம் ஒரு பக்கமும் இசை வேறு ஏதோ ஒரு பக்கமும் செல்கிறது. இப்படியான படங்களுக்கு இசை மிகவும் முக்கியம். இப்படத்திற்கு இசை பெரிதாக எந்த இடத்திலுமே உதவவில்லை. அடுத்து, அசோக் செல்வன் அடிக்கடி கத்திக்கொண்டிருப்பது போல் இருக்கும் காட்சிகளை குறைத்திலுக்கலாம். மேலும் எமோஷன் காட்சிகளில் இன்னுமே கவனம் தேவை. மற்றபடி பெரிதாக மைனஸ்கள் இல்லை. 


படத்தின் மைய இழையே, உங்களிடம் இருக்கும் விடயங்களின் அருமையை சில நேரங்களில் நீங்களே உணரமால் இருப்பீர்கள். அது இல்லாதபோதுதான் அதன் பெறுமதியை நீங்கள் உணர்வீர்கள். இந்த கருத்தை வைத்து, சூப்பரான ஒரு எண்டர்டெயினிங் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து. இதைப் போன்ற படங்கள் பெரும்பாலும் யூத்களுக்கே செட்டாகும், புரியும். இந்த valentines’ டேக்கு வெளிவந்த Oh My Kadavule ஒரு நல்ல கருத்தைக் கொண்ட அருமையான படம். தியேட்டரில் இப்படம் ஓடும் போதே பாரத்துவிடுங்கள், ஏன் என்றால் இது போன்ற நல்ல படங்கள் இப்போதெல்லாம் அடிக்கடி வெளியாவதில்லை. So இதை ஒரு now or never படமாக சொல்லலாம். Must watch it!
No comments

//]]>