Related posts

Breaking News

Lucifer (Netflix)


இன்றைய காலகட்டமானது, டீவி சேனல்களை விட netflix, amazon prime video போன்ற ஒளிபரப்பு சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலமாகிவிட்டது. பல டிவைஸ்களில் பாவிக்கக் கூடிய தன்மை, பிடித்த நேரத்தில் பிடித்த நிகழ்ச்சியை பார்க்க முடிதல் போன்ற காரணங்களால் மட்டுமன்றி தரமான தொடர் நாடகங்களை பார்க்க முடிவதாலும், இன்றைய தலைமுறையினர் மத்தியில் இந்த netflix மற்றும் amazon prime video ஆகியன பிரபல்யம் அடைந்துள்ளன. தமிழில் அழுவாச்சி காவியங்களை தொடர் நாடகங்களாக எடுக்கத் தொடங்கிய காலத்திற்கு முன்னர் இருந்தே ஆங்கிலத்தில் நல்ல தரமான கதையம்சம் கொண்ட வித்தியாசமான தொடர்களை எடுக்கத் தொடங்கி விட்டனர். அப்படி ஒரு தரமான தொடர்தான் இந்த Lucifer(லூசிஃபர்).

Lucifer(லூசிஃபர்) என்பது பைபிளின் அடிப்படையில், தேவதையாக இருந்து டெவிலாக மாறியவன். தேவதையான இவன் தன் பிழையான எண்ணங்களாலும் நடவடிக்கைகளாலும், அவனது சிறகுகள் வெட்டப்பட்டு கீழே தள்ளப்பட்டான். Los Angeles (லாஸ் ஏஞ்சல்ஸ்) என்ற நகரத்துக்கு, அந்த பெயர் வர இதுதான் காரணம். இதை டீசி காமிக்ஸ் நிறுவனத்தின் உப நிறுவனமான வெர்டீகோ காமிக்ஸ், கற்பனையின் அடிப்படையில், இந்த Lucifer(லூசிஃபர்) என்பவன் ரெஸ்ட் எடுப்பதற்காக இந்த  உலகத்திற்கு வந்தால் எப்படியிருக்கும், என்ற அடிப்படையில் ஒரு காமிக்ஸ் தொடரை வடிவமைத்து வெளியிட்டிருந்தனர். இதை அடிப்படையாகக் கொண்டே இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல் நகரத்திற்கு ஓய்வை கழிக்க வருகிறான் Lucifer. இவன் ஓய்வெடுக்க வரும் முன்னர் செய்து கொண்டிருந்த வேலை என்ன வெனில், நரகத்திற்கு வரும் ஆன்மாக்களை சித்திரவதை செய்வதுதான். நகரத்தில், அவன் சில நபர்களை சந்திக்கிறான், குறிப்பாக க்ளோயி டெக்கர் என்ற பெண் ( Chloe என்ற பெயரை அந்த டீவி சீரிஸிலேய பலரும் பல விதமாக உச்சரிப்பர்). இவளது வருகைக்கு பின் Luciferன் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதே கதை.போலிஸில் துப்பறியும் பிரிவில் இருக்கு க்ளோயிக்கு Lucifer, வழக்குகளில் இருக்கும் முடிச்சுக்களை அவிழ்க்க உதவிசெய்வான். பெரும்பாலும் எல்லா எபிசோடிலும் ஒரு கொலை நடந்துவிடும். அதை தீர்க்க க்ளோயி மற்றும் லூசிபர் ஆகியோர் செல்வார்கள். இந்த சீரிஸின் எல்லா இதழ்களுமே கிட்டதட்ட இதே பாணியில் இருந்தாலும் போரடிக்காமல் கதை செல்லும். இதில் லூசிபராக நடித்திருக்கும் டொம் எலியாஸின் நடிப்பு, குறிப்பாக முக பாவனைகள் எனக்கு பிடிக்கும்.

Luciferரிடம் சில சக்திகள் உள்ளன. அவனால் மனிதர்களை வசியம் செய்து உண்மைகளை கக்க வைக்க முடியும். அதனோடு இவனுக்கு மரணம் கிடையாது, இவனொரு immortal. ஆனால், இந்த immortal சங்கதி நிலையானது கிடையாது. அது ஏன் என்று சொன்னால் சீசன் 1 எபிசோடுகள் ஸ்பாய்லராகி விடும்.

ஆரம்பத்தில் Fox சேனலில்தான் Lucifer ஒளிபரப்பு செய்யப்பட்டது. மூன்று சீசன்களுக்கு பின் Fox லூசிபரை “சுபம்” போட்டு முடித்து விட, Luciferன் ரசிக கண்மணிகள் கொதித்தெழ தொடங்கிவிட்டார்கள். #savelucifer என ஹாஷ் டேக்குகள் போட்டு டிரண்டிங் செய்தனர். லூசிபருக்கு இருக்கும் கிராக்கியினால், Netflix லூசிபரை வாங்கி, நான்காவது சீசனை எடுத்தது. இப்போது netflixல் நான்கு சீசன்களுமே காணக்கிடைக்கின்றது. அடுத்த சீசனையும் netflix அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான சீரிஸ் பார்க்க விரும்புபவர்கள் இந்த லூசிபரை netflix செய்து பார்க்கலாம். மேலும் இந்த சீரிஸ் சிறுவர் கூட்டத்திற்கு உகந்ததல்ல என்பதையும் தெரிந்து கொள்க.No comments

//]]>