Related posts

Breaking News

Best Tamil Movies 2019



கடந்த காலங்களைப் போலவே இந்த ஆண்டும் கிட்ட தட்ட 150க்கு மேற்பட்ட தமிழ் படங்கள் வெளியாகியிருந்தது. உண்மையை சொல்ல போனால் இதில் எனக்கு பிடித்த நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுக்க நான் கஷ்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் என்னால் பத்து படங்களை கூட பட்டியலிட முடியவில்லை, காரணம், முக்கால்வாசி படங்கள் மொக்கையாக இருந்தன, மிகுதி கால்பங்கில் பல படங்கள் மோசம் என்று சொல்ல முடியாவிட்டாலும், கண்டிப்பாக அவை சூப்பரும் இல்லை. ஆக நல்ல படங்களை தேர்ந்த்தெடுப்பது இந்த வகையில்தான் கடினமாயிருந்தே ஒழிய நிறைய நல்ல படங்களை வைத்துக் கொண்டு எவற்றை விடுவது என்ற தடுமாற்றம் இருக்கவில்லை. 

இந்த லிஸ்டில் உள்ள படங்கள் அவை வெளியான கால வரிசையிலேயே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், உங்களின் கவனத்தை ஈர்த்த, உங்களுக்கு பிடித்த படங்கள் இந்த லிஸ்டில் இல்லாமல் இருக்கலாம். இது என்னுடைய தனிப்பட்ட லிஸ்ட் மட்டுமே. உங்களுக்கு பிடித்த படங்களை கீழே Comment செய்யுங்கள். அத்தோடு, காளிதாஸ் மற்றும் தம்பி, இந்த இரண்டு படங்களையும் நான் பார்க்கவில்லை. ஆகையால் அவை இந்த பட்டியலில் இல்லை. சரி, இனி பட்டியலுக்கு செல்வோம். 

பேட்ட


நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் பொங்கல் அன்று வெளியானது பேட்ட. FDFSல் மீண்டும் பல நாட்களுக்கு பின், அந்த குறும்புத்தனமான ரஜினி காந்தை பார்க்க முடிந்ததே பெரிய ஆறுதலாக இருந்தது. கபாலி, காலா என புரட்சி செய்ய முயன்று தோற்று போனவருக்கும் இது நல்ல comeback. படமும் போரடிக்காமல் சுமூகமாகவே சென்றது thanks to கார்த்திக் சுப்புராஜ். 

விஸ்வாசம்


அந்த பக்கம் தலைவர் தரிசனம் இந்த பக்கம் தல தரிசனம் என்றுதான் போனது போன பொங்கல். “மீண்டும் சிவாவா”? என்ற வாய்களை, வாயடைக்க செய்தார் சிவா. தந்தை-மகள் பாசத்தை அழுத்தமாக காட்டியது விஸ்வாசம். கார்ப்பரேட் வில்லன் என பழைய மாவை அரைக்காமல், வில்லனுக்கென நல்ல கதையை அமைத்து நியாயம் செய்தனர் சிவா&டீம். இந்த படத்தில் இம்புரூவ் செய்ய நிறைய விடயங்கள் உள்ளன. ஆனால் இதுவே நன்றாகத்தான் இருந்தது. வீரம், வேதாளம், விவேகம் இந்த மூன்று திரைப்படங்களுமே எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காத படங்கள்.  ஆனால் விஸ்வாசம் ஒரு விதிவிலக்கு. 

சர்வம் தாள மயம்



சர்வ தாள மயம், துவண்டு போன ஜீ.வி.பிரகாஷுக்கு தோள் கொடுத்த படம். இசையை பற்றிய படம் என்பதால் ஒன்றித்து நடித்திருந்தார். ஆனால் ரஹ்மான் அவர்களின் இசை அந்தளவுக்கு எடுபடவில்லை. இருப்பினும் “வரலாமா உன் அருகில்...” பாடல் தந்த தெய்வீக இசை அருமையானது. சாதிக்க துடிக்கும் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தை சேர்ந்த இளைஞனின் கதையை சொல்லிய படம். குறிப்பாக நெடி முடி வேணுவின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. 

தடம்



சமீப காலமாகவே அருண் விஜய் நல்ல படங்களில் நடித்து வருகிறார். அதில் தடம் மிக முக்கியமானது. கிளைமேக்ஸ் டிவிஸ்ட்+ சோகம் படத்தின் அச்சாணி. இயக்குனர் மகிழ் திருமேனியின் one of the best. இசையும் ஹீரோயின் தன்யாவின் நடிப்பும் படத்தின் மைனஸ். மற்றபடி எல்லாமே ப்ளஸ். 

சூப்பர் டீலக்ஸ்


இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு நன்றாக இருந்தது என்று பொய் சொல்ல மாட்டேன். அல்லது எனக்கு அது நன்றாக இருக்கவில்லை. படத்தில் இருந்த கதைகளுள், பொடியர்கள் மூன்று பேரின் கதையும் பகத் ஃவாசலின் கதையும் நன்றாக எழுதப்பட்டிருந்தது. ஏலியன் கதையை அநாவசியமாக கொண்டு வந்தது ஏன் என்று இயக்குனருக்கே வெளிச்சம். மற்றபடி நல்ல எண்டர்டெயினிங்கான படம்.

மான்ஸ்டர்



இந்த சீனை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வீட்டிற்கு உங்கள் காதலி வந்திருக்கிறாள். அவளுக்காக வாங்கி வைத்திருந்த சோவா எறிந்து நாசமாகிவிட்டது. இதை அவள் பார்த்து விடாமல் சமாளிக்க வேண்டும். இந்த சீனை திரில்லர் படத்தில் வருவது போல பதை பதைப்புடன் காட்ட வேண்டும்+ கொஞ்சம் காமெடி. இந்த சீனை சாத்தியமாக்கியது மான்ஸ்டர். சமீப காலமாக நல்ல கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இப்படத்திற்கும் அந்த வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியே. 

கோமாளி



இன்னுமொரு வித்தியாசமான கதைக்களம். ஜாலியான திரைப்படம். நல்ல என்டர்டெயினர், ஆனால் கடைசியில் திரைக்கதையை குழப்பிடித்திருப்பார்கள். 90’s கிட்ஸின் ஞாபகங்களை மீட்டெடுத்ததற்காகவே இந்த படத்திற்கு ஒரு லைக் போடலாம்.

அசுரன்



சர்வம் தாள மயம் ஜாதி கொடுமைகளை சொவ்டான டோனில் பேசியது. ஆனால் அசுரன், ஜாதி வன்கொடுமையை அழுத்தமாக பதிவு செய்தது. அடுத்தடுத்து நல்ல நூல்களை தெரிவு செய்து அதில் இருந்து திரைப்படங்களை கட்டமைத்து கொண்டிருக்கிறார் வெற்றி மாறன், அந்த வரிசையில் பூமணியின் வேட்கை நாவலை மூலத்தின் சாரம் கெடமால் திரைப்படமாக கொண்டு வந்த வெற்றிமாறனுக்கு நன்றிகள். மனதை மிகவும் பாதித்தான் இந்த அசுரன். 






No comments

//]]>