Related posts

Breaking News

தர்பார் - திரை விமர்சனம்



இந்த குதிரை இன்னும் ஒடுமா, இதை நம்பி இன்னமும் பந்தயம் கட்டலாமா என கேட்டவர்களை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பேட்ட திரைப்படத்தின் மூலம் அக்கேள்விக்கு பதில் சொன்னார். போன பொங்கலுக்கு பேட்ட திரைப்படத்தை FDFSல் பார்த்தது இன்னும் கண்களில் அப்படியே உள்ளது. பேட்ட திரைப்படத்தை விட ஒருபடி அதிக எதிர்பார்ப்புடன்தான் இந்த படத்திற்கு சென்றேன். காரணம் ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதை என்பதால். எப்படி இருந்தது தர்பார் அனுபவம், வாருங்கள் விரிவாக பார்க்கலாம். 

திரைப்பட அனுபவத்தை பாதிக்காத, மைனர் ஸ்பாய்லர்ஸ் இக்கட்டுரையில் உள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ், கடந்த நேர்காணல்களிலெல்லாம் சொல்லியது போல இது ஒரு பழிவாங்கும் கதைதான். தர்பார் படத்தின் முக்கிய அம்சமே, சூப்பர் ஸ்டார்தான். 80களில் இருந்த அதே எனர்ஜியுடன்தான் இருக்கிறார் ரஜினிகாந்த், அதே வேகமான நடை, அதிவேகமான வசன உச்சரிப்பு என எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணிக்கிறார். சில கடினமான ஸ்டன்டுகளை அவரே சொந்தமாக வேறு செய்துள்ளார். கண்டிப்பாக இந்த வயதிலும் இவர் இவ்வளவு உழைப்பைக் கொட்டி நடிப்பதை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. ஆனாலும் பல இடங்களில் அவர் வசனங்களை உச்சரிக்கும் போது தசைகள் அதிகமாக இழுபடுவதும், தளர்ந்த குரலில் பஞ்ச் டயலாக் பேசுவதையும் அப்பட்டமாக காண முடிகிறது. இருப்பினும் இவை திரைப்படத்தில் பெரிய குறையாக தெரியவில்லை. படத்திலேயே இவற்றை குறிப்பிடும்படியாக சில காட்சிகள் உள்ளன. இது ஏ.ஆர்.முருகதாஸின் முதிர்ச்சியான, அனுபவம் மிக்க எழுத்திற்கு சான்று.

உண்மையிலேயே இந்த திரைப்படத்தின் மிக முக்கியமான highlight நிவேதா தாமஸின் கதாபாத்திரம்தான். ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை விட இவரது கதாபாத்திரத்திற்குதான் நிறைய நல்ல காட்சிகள் உள்ளன. அதை நிவேதிதாவும் நன்றாகவே நடித்துக் கொடுத்துள்ளார், ஆக (thanks to ஸ்டாலின்), இவருக்கு இன்றுமுதல் பல ஆர்மி, நேவி, ஏயார் வோர்ஸ் படைகள் ஆரம்பிக்கப்படலாம்.

சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில், காமடி பண்ணுகிறேன் பேர்வழி என கழுத்தறுப்பவர்களை பாரக்கும் போது,  யோகி பாபுவின் காமெடி “எவ்வளவோ தேவலாம்” என்றுதான் இருந்தது. துப்பாக்கி, ஸ்பைடர், சர்கார் கதாநாயகிகளை போல, இதிலும் கதாநாயகி கதாபாத்திரத்தினால், திரைக்கதைக்கு பெரிதாக எந்த ஒரு பங்களிப்புமே இல்லை. ஒரு சின்ன விஷயத்தை உணர்த்த மட்டுமே இவரது கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் நிறைய நல்ல மொமண்டுகள் உள்ளன. உதாரணத்திற்கு, தாய்லாந்து போலிஸ்காரர் ஒருவர் சூப்பர் ஸ்டார் போல கண்ணாடியை சுழற்றி மாட்டுவார். அந்த காட்சிக்கு தியேட்டரே தெறித்தது. போலவே, “தரம் மாறா சிங்கிள்...” என்ற பாடலும் அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. மேலும் ரயில்வே ஸ்டேஷனில் நடப்பது போன்றதொரு சண்டைக்காட்சி வருகிறது. தூள் திரைப்படத்தின் “சிங்கம் போல நடந்து வாரான்” என்ற பாடலோடு வரும் சண்டைக்காட்சி போல இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கதையில் போதை பொருட்களை பாவிப்பதால் வரும் விளைவுகள், பெண்கள் மற்றும் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்தல் என்பன பற்றி விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் ஆழமாக இருப்பதுடன், இக்காட்சிக்காக படக்குழுவினர் செய்த ஆராய்ச்சியானது, திரையில் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இசையை பொருத்த மட்டில், சில இடங்களில் நன்றாகவும் பல இடங்களில் அலறலாகவுமே இருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசையில், இரைச்சல் அதிகமாக இருக்காது. வாசிக்கப்படும் இசைக் குறிப்புகள் தெள்ளத் தெளிவாக இருக்கும். மேலும் இவர்களது கோரஸ்கள் அருமையாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அனிருத்தின் கோரஸ், மற்றும் “தனிவழி” ஆகிய பாடல் எல்லாம், யாரோ கன்னாபின்னா என கத்துவது போலதான் இருந்தது. பெரும்பாலான இடங்களில் இவரது இசை, படத்திற்கும் நமக்கும் சரியான டிஸ்டர்ப்.

படத்தின் திரைக்கதை ஓரளவுதான் நன்றாக உள்ளது. ரொம்ப laaaaaaaaaaagகான திரைக்கதை. மேலும் எந்த ஒரு கதாபாத்திரமுமே முழுமையாக எழுதப்படவில்லை. உதாரணத்திற்கு, நிவேதாவின் கதாபாத்திரம், எந்த நேரமும் ரஜினியை சார்ந்தே உள்ளது. அவளுக்கேன்ற தனித்தன்மையான விஷயங்கள் எழுதப்படவில்லை. ரஜினி கதாபாத்திரமும் இப்படிதான், ஆழமான நடை இல்லை. அதிலும் வில்லன் கதாபாத்திரம், அது எப்படியான கதாபாத்திரம் என ஒரு விளக்கமுமே இல்லை. முதலில் புத்திசாலி போலவும் கடைசியில் படத்தை முடித்து அனுப்பவதற்காகவே முட்டாள் போன்றும் நகை முரணாக இதன் பாத்திரம் எழுதப்பட்டுள்ளது. தர்பார் திரைப்படத்தின் திரைக்கதை ஏன் சறுக்கியது என்பதை பிறகு,  விரிவாக வேறொரு கட்டுரையில் பார்க்கலாம்.

தர்பார் படம் கண்டிப்பாக மோசமான திரைப்படம் இல்லை. ஆனால் பாட்ஷா, படையப்பா, பேட்ட போல செம்ம எண்டர்டெயினிங்காகவும் இல்லை. ஆக (மீண்டும் thanks to ஸ்டாலின்) மொத்ததுல  சொல்வதானால், தர்பாரு கொஞ்சம் போரு.

நீங்கள் தர்பார் திரைப்படம் பார்த்து விட்டீர்களா, உங்கள் கருத்து என்ன? கீழே உள்ள comment பாக்ஸில் உங்கள் கருத்துக்களை post a comment என்பதை க்ளிக் செய்து comment செய்க

No comments

//]]>