Related posts

Breaking News

வெளியானது சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தின் டீசர்

சூரரைப் போற்று


சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து நின்ற, சூரரைப் போற்று திரைப்படத்தின் டீசர் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 2D Entertainment மற்றும் குனித் மொங்காவின் Sikhya Entertainment ஆகியன இத்திரைப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன. இறுதிச் சுற்று திரைப்படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்க ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு  இசையமைக்கிறார். 

ஏப்ரல் 07ம் திகதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அதே மாதம் 13ம் திகதி இப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. ஜீ.வி.பிரகாஷ் இப்போது இசையமைப்பின் பக்கமும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அவ்வகையில் சமீபத்தில் அசுரன் படம், அதன் இசையமைப்புக்காக பெரிதும் பாராட்டப் பட்ட நிலையில் இத்திரைப்படமும் இசையில் ஜொலிக்கலாம் என நம்பலாம்.


இந்த திரைப்படமானது, உண்மைச் சம்பவங்களை தழுவியே எடுக்கப்பட்டுள்ளது. எயார் டெகானின் நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படமானது இந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளது. டீசரைப் பார்க்கும் போதே, சூர்யா உயிரைக் கொடுத்து நடித்துக் கொடுத்துள்ளார் என தெரிகிறது. டீசரைப் பாரக்கும் போது ஒரு பக்கம் இறுதிச் சுற்று படம் போல இருந்தாலும் இன்னொரு பக்கம் என்.ஜி.கே திரைப்படமும் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

என்.ஜி.கே, காப்பான. என தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சூர்யாவிற்கு, இப்படத்தின் வெற்றி மிக அவசியமானதாக உள்ளது. சூர்யா, நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதரும் கூட அவரது சூரரைப் போற்று திரைப்படமானது பெரு வெற்றி பெற வாழ்த்துகிறேன். 

Latest updatesஐப் பெற நமது வலைத்தளத்தை subscribe செய்ய அருகில் உள்ள பாக்ஸில உள்ள follow buttonஐ க்ளிக் செய்து follow செய்க



No comments

//]]>