Related posts

Breaking News

ரிப்போர்ட்டர் ஜானியின் தலைமுறை எதிரி



காமிக்ஸுகளை பற்றி எழுதிதான் எத்தனை காலம் ஆகி விட்டது. நீண்ட.....இடைவேளைக்கு பின் இன்று ஒரு காமிக்ஸ் கதை பற்றி பார்ப்போம். முத்து காமிக்ஸ் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே ரிப்போர்ட்டர் ஜானி என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட கதைகளை தமிழில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவரை நமது வட்டாரத்தில் இடியாப்ப சிக்கல் ஜானி எனதான் அழைப்பார்கள். காரணம், இவரது கதைகள், ஏனைய துப்பறியும் கதைகளை போல இல்லாமல், சுத்திச் சுழற்றியடித்துக் கொண்டிருக்கும் என்பதுதான். ஒன்றிரண்டு கதைகளை தவிர, ஏனையவைகளில் யார் வில்லன் என கண்டே பிடிக்க முடியாது. நான் சும்மா சொல்லவில்லை. ஒரு தடவை வாசித்து பாருங்கள், தலை எப்படி சுற்றுகிறது என்பது விளங்கும். 

இந்த கதையும் அப்படிதான். மெதுவாக, பெரிய சஸ்பென்ஸ் இல்லாமல் தொடங்கி, பிறகு எங்கெங்கேயோ சுற்றி அழகாக அதே இடத்தில் வந்து முடிவடைகிறது. கிட்டதட்ட ரோலர் கோஸ்டரில் பயணித்தது போல. கதைப்படி, ஜானி ஒரு சுற்றுலா தளத்தை சுத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு கிழவர், ஏதேதோ உளறிக் கொண்டு ஜானியை தாக்க முற்பட, அந்த கிழவரை கட்டுபடுத்தி அழைத்து செல்கிறார், அவரது டாக்டர். அந்த கிழவரோ, தன்னை யாரோ தாக்க வருகிறார்கள், பல ஜென்மங்களாக தான் அவனால்தான் கொல்லப்படுகிறேன் என சொல்லுகிறார். இப்படியிருக்கையில், ஒரு நாள் ஜானியும், அந்த கிழவரின், ஜென்ம விரோதியினால் தாக்கப்படுகிறார். அவர்களை தாக்கியது யார்? உண்மையிலேயே, அது போன ஜென்ம பகையா? அல்லது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலாபமீட்ட நினைக்கும் யாரேனுமா? என்பது மிச்சக் கதை.
நினைவு தெரிந்த நாள் முதல் ஜானி கதைகளை படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த கதாபாத்திரத்தின் தன்மை கொஞ்சம் கூட மாறவில்லை. முத்து காமிக்ஸில், தமிழ் மொழி பெயர்ப்பு எல்லாமே, பெரும்பாலும் பழைய ஸ்டைலில்தான் இருக்கும். இது  ஜானி கதைகளில் ஒரு ப்ளஸ் பாயிண்ட். காரணம் ஜானி கதைகளை எப்போது படித்தாலும் அந்த nostalgic feelஐ திரும்ப பெறலாம். கண்டிப்பாக இந்த காமிக்ஸ், கொஞ்ச நேரமேனும் உங்களை வேறு உலகுக்கு கூட்டிச் செல்லும். 80’மற்றும் 90’ களில் பிறந்தவர்கள் இருந்தவர்கள், இன்னும் கொடுத்து வைத்தவர்கள். தங்களின் சிறுவயது ஞாபகங்களையும் சற்று மீட்டிப் பார்க்கலாம்.

இதைவிட டீடெய்ல்டான லெந்தியான புத்தக விமர்சனங்கள் வேண்டுமா? கமண்ட் செய்யுங்கள்.

ரிப்போர்ட்டர் ஜானி பற்றி நான் இன்னொரு நீண்ட கட்டுரையும் எழுதியுள்ளேன். கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து அதை வாசிக்கலாம்.

ரிப்போர்ட்டர் ஜானி- பற்றிய கட்டுரை  https://kavinthjeev.blogspot.com/2016/06/ric-hochet.html

No comments

//]]>