Related posts

Breaking News

Devil May Cry 5- Game Review


ஜப்பானை சேர்ந்த Capcom நிறுவனமானது, Street Fighter, Marvel vs Capcom, Resident Evil, Dead Rising என்ற பிரபல்யமான பல கேம்களை தயாரித்த நிறுவனமாகும். இந்த அத்தனை கேம்களுமே பல லட்சம் பிரதிகள் விற்பனையான கேம்களே. இவர்களின் இன்னுமொரு successfulன படைப்புதான் இந்த Devil May Cry franchise கேம்கள். Devil May Cry சீரிஸ் கேம்கள் 2001ம் ஆண்டிலிருந்து வெளிவருகின்றன. ஆரம்பத்தில் இந்த கேம் விளையாடுவதற்கு கடினமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. எனினும் பின்னர், பல ரசிகர்களின் வேண்டு கோளுக்கிணங்க விளையாட இலகுவானதாக இருக்குமாறு கேம்கள் ப்ரோக்ராம் செய்யப்பட்டன. 

Devil May Cry, இது ஒரு Hack and Slash ரக கேமாகும். Hack and Slash கேம்கள் ஓபன் வேர்லட்  போல இல்லாமல், எடுத்த கையோடு ஆக்‌ஷனில் இறங்குவதாக இருக்கும். Devil May Cry  கேம்களின் கதையை பொறுத்தவரை, ஸ்பார்ட்டா மற்றும் முண்டஸ் என்று இரண்டு ராட்சதர்கள் இருப்பார்கள். இதில் ஸ்பார்ட்டா என்னும் அரக்கன் நல்லவன் (அதாவது நம்ம தமிழ் சினிமால வரும் நல்ல தாதா போல). முண்டஸை, ஸ்பார்ட்டா வீழ்த்துவதோடு, அசுரர்களிடம் இருந்து பூமியையும் காப்பாற்றுகிறான். அசுரர்கள் பூமிக்கு ஒரு போர்டல் வழியாக வருவார்கள். அதனையும் மூடி விடுகிறான். 

போர்டலை மூடி விட்ட ஸ்பார்ட்டா, பூமியிலேயே தங்கி விடுகிறான். மேலும் எவா என்ற பெண்ணை திருமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுக்கிறான். இப்போது, நம்ம தெறி திரைப்பட வில்லன் மகேந்திரன் மாதிரி, “ஸ்பாரட்டாவுக்கு சாவை விட பெரிசா எதுனா கொடுக்கனும்” என நினைக்கும் முண்டஸ், ஸ்பார்ட்டாவின் மனைவியை போட்டுத் தள்ளி விடுகிறான். இதன் பின்னர் ஸ்பார்ட்டாவின் மகன்கள் இருவரும் பிரிந்து விடுகின்றனர். Vergil மற்றும் Dante ஆகிய இரு சகோதர்ர்களில், Vergil தீய சக்திகளின் பக்கம் சேர்ந்து விடுகிறான். ஆனால் டாண்டே டீமன்களை வேட்டையாடும் Devil May Cry என்னும் நிறுவனத்தை ஆரம்பிக்கிறான்.  ஆரம்பத்தில் வந்த கேம்கள், Vergil மற்றும் Danteவின் பகையையும், டாண்டே அரக்கர்களை வேட்டையாடுவதை மையப்படுத்தியும் இருக்கும். 

இதில் லேட்டஸ்டாக வரும் Devil May Cry கேம்களில் Nero என்ற கதாபாத்திரமே, மெயின் ப்ரோட்டகனிஸ்டாக வருகிறது. Order of the Sword என்ற அமைப்பை சேர்ந்தவனாக வரும் நீரோவும், Devil May Cry என்ற பேனரின் கீழ் அரக்கர்களை வேட்டையாடுவான். சரி, இனி Devil May Cry 5 பற்றி விரிவாகப் பாரப்போம். 

Devil May Cry 5, பெயரில் உள்ளது போல DMC கேம்களின் ஐந்தாவது பதிப்பாகும். இதன் கதையை பொறுத்தவரை, ஒரு மர்ம நபர், நீரோவின் கையை துண்டித்து அதை யமாட்டோ எனப்படும் சக்தி வாய்ந்த வாளாக மாற்றி விடுகிறான். பின்னர் அந்த வாளைக் கொண்டு தன்னைத் தானே குத்திக் கொள்கிறான். இந்த வாளின் மூலமாக யார் குத்தப்பட்டாலும் அவர்கள் இரண்டு நபர்களாக மாறி விடுவார்கள். அதாவது, குத்தப்பட்ட நபரின் கெட்ட எண்ணங்களைக் கொண்டு அரக்கன் ஒருவனும், அதே நேரம் நல்ல குணங்களைக் கொண்ட மனிதன் ஒருவனும் வெளியே வருவார்கள். அந்த அரக்கன், மேலும் சக்தி வாய்ந்த கொடிய அரக்கனாக மாறும் பொருட்டு, பூமியில் உள்ள ஜீவராசிகளின் இரத்தத்தை உறிஞ்சும் ஒரு வித தாவரத்தை உருவாக்கி விடுகிறான். இந்த தாவரம் அத்தனை ரத்தத்தையும் உறுஞ்சிய பின்னர், ஒரு கனியை உருவாக்கும். இந்த கனியை உண்டு, சக்தி வாய்ந்த அரக்கனாவதே அவனது திட்டம். இதை நீரோ ஒரு புறம் நின்று தடுக்க, மற்றொரு புறம், அந்த நல்லவன், டாண்டேயிடம் சென்று உதவி கேட்கிறான். ஆக டாண்டேயும் களத்தில் இறங்குகிறான். ஆக யார் அந்த மர்ம நபர், நல்லவனாக இருப்பவன் உண்மையிலேயே நல்லவனா, நீரோவும் டாண்டேவும் எப்படி உலகை காப்பாற்றுகிறார்கள் என்பது மீதிக் கதை.

இந்த கேமின் ஹைலைட்டே, இதன் கிராபிக்ஸ்தான். அவ்வளவு அருமையாக கிட்டதட்ட ஜேம்ஸ் கேமரூனின் அவதார் போல இருந்தது. மேலும், இதன்  கண்ட்ரோல்கள் மற்றும் கேம் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் தொடர்ந்து விளையாடுவதற்கு ஏதுவாக இருந்தது. ரோல் ப்ளே கேம்களை போன்று, மெது மெதுவாக abilitiesஐ அதிகப்படுத்தி, அதன் பிறகுதான் ஆக்‌ஷனில் இறங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எடுத்தவுடனேயே படபட என எதிரிகளை போட்டுத் தள்ளிக் கொண்டு போகலாம். இதில் நீரோவுக்கு ஒரு கை இல்லையென்பதால், அதனை இயந்திர கைகளை கொண்டு ரீப்கிளேஸ் செய்யலாம். ஒவ்வொரு விதமான கைக்கும் ஒவ்வொரு விதமான ஸ்பெஷல் பவர்ஸ் இருக்கும்.



நீரோ, டாண்டே மற்றும் அந்த நல்லவன் என மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டும் விளையாடலாம். விதவிதமான டீமன்கள், எதிர்பார டிவிஸ்ட்டுகள், fun moments என கேம் விறுவிறுப்பாக இருந்தது. அதிலும் டாண்டே, மைக்கல் ஜாக்சன் போல நடனமாடுவது, எதிர்பாரா சர்ப்ரைஸ். Playstation 4, Xbox One என இரண்டிலுமே இதை விளையாடலாம். உங்களுக்கு யார் மேலாவது கடுங்கோபம் உண்டெனில், அவர்களை டீமனாக நினைத்துக் கொண்டு அடிப்பிண்ணி எடுக்கலாம். அதிலும், கேம் பிருநர்கள் தவறவே விடக்கூடாத கேம்.

Bestbuy linkயை கீழே கொடுக்கிறேன், விருப்பமானவர்கள் வாங்கி தெறிக்க விடலாம். கீழே உள்ள imageஐ க்ளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம். 


No comments

//]]>