Related posts

Breaking News

Coolie Movie Review

 


முதல்தடவை early morning show பார்க்கும் படம் கூலி, எக்கசக்கமான promotions செய்து படத்திற்கு hype ஏத்தி இருந்தார்கள், ஏற்கனவே Leo படத்திற்கும் சென்று, செமத்தயாக அடி வாங்கி இருந்ததால், அதைவிட கம்மியான எதிர்பார்ப்புடன்தான் சென்றிருந்தேன். 


Mild Spoilers Ahead…


முதல் பாதி மிக மிக மெதுவாக சென்றது, இடைவேளையில் ஏதோ செய்ய போகிறார்கள் என்று பார்த்தால், அதிலும் ஒன்றுமில்லை. இரண்டாம் பாதி தூக்கம் வராத அளவுக்கு பார்த்துக்கொண்டது. 


காட்டடி அடித்து கொன்றவன் தீடீரென்று உயிரோடு வருதல், தன் அப்பாவை கொன்றவனின் முகம் கூட ஞாபகம் இல்லாத பையன், தன்னை சுற்றி யார் இருக்கிறார்கள் என தெரியாத வில்லன், ஹீரோ தனியாக சண்டை போடும் போது, ரூமுக்குள் ஜாலியாக இருந்து கொண்டு, ஹீரோ கூப்பிட்டால் மட்டும் வரும் மட்டமான கேமியோ, பின் முதுகில் கோடாரியால் குத்து வாங்கிக் கொண்டு, கிளைமேக்ஸில் பாலைவனத்தில் அமீர்கானை கூட அசல்டாக சந்திக்க செல்லும் ஹீரோ, என்னய்யா எழுதுறீங்க???


இத்தனை பெரிய நடிகர்கள், நல்ல மேக்கிங், சூப்பரான இசை என அத்தனையும் உயிரோட்டமில்லாத திரைக்கதையால் வீணடிக்கப்பட்டுள்ளது. ரஜினி அவர்கள் ஒற்றை ஆளாக படத்தை தாங்கி பிடிக்கிறார், அதோடு ஷோபினின் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம் அருமை. Rest is waste!!!


அனிருத் இசை நன்றாக இருந்தாலும், அதற்கேற்ற சீன்கள் இல்லை, “அரங்கம் அதிரட்டுமே…….” என அவர் மட்டும் கத்தினால் போதாது, ரசிகர்களும் கத்த வேண்டும்.


மேலும் ஆரம்பத்தில் ஒரு சீனில் மது அருந்துவதை தவறாக காட்டிவிட்டு, அதன்பின், அது ஏதோ ஸ்டைலான விஷயம் போல project செய்துள்ளார்கள்.யார் குடிச்சாலும், எப்ப குடிச்சாலும், குடி தப்புதான். 


ஆக மொத்தத்தில், கொஞ்சம் பணமும், காலை தூக்கத்தில் பாதியும் தண்டம். 


#Coolie #CoolieReview

No comments

//]]>