Related posts

Breaking News

Morbius - Trailer Breakdown


Morbius, இந்த கதாபாத்திரம் மார்வலை சார்ந்ததாக இருந்தாலும், இது மார்வல் ரசிகர்களுக்கே பெரிய பரீட்ச்சயம் இல்லாத கதாபாத்திரம்தான். MCU, DCEU போல Sony Picturesசானது ஸ்பைடர் மேனின் வில்லன்களை வைத்து ஒரு யுனிவர்ஸை உருவாக்குகிறது. இதன், முதல் திரைப்படமாகதான் வெனம் வெளிவந்தது. ஆனால், இந்த மொர்பியஸ் டிரெய்லரில் MCU வின் Spiderman- Homecoming மற்றும் Spiderman- Far from home ஆகியன பற்றியும் டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு திரைப்படங்களின் தொடர்ச்சியாக Morbius இருப்பது போலதான் டிரெய்லரில் காட்டியுள்ளார்கள். இப்போதைக்கு ஸ்பைடர் மேனின் உரிமம் Sony Picturesசிடம்தான் உள்ளது. MCUக்கு ஒப்பந்த அடிப்படையில்தான், இந்த கதாபாத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. நாம், இந்த வணிக வியாபார இத்யாதிகளையெல்லாம் விட்டு விட்டு Morbius பற்றி பார்ப்போம்.



Morbius சில உடற் சார்ந்த குறைபாடுகளோடு வளருபவன். பெரும்பாலும் நமது சமூகம் குறைபாடு உள்ளவர்களை ஆதரிப்பதுதான் கிடையாதே. இவனையும் சிறு வயது முதல், சித்திரவதை செய்கிறது சமூகம். ஜெரட் ஹாரிஸின் கதாபாத்திரம் இவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. அவருடன், அனாதைகள் இல்லம் போன்ற ஒன்றில் வளர்கிறான் மோர்பியஸ். சிறு வயது முதலே அறிவுக் கூர்மை அதிகமாக உள்ள Morbius, வளர்ந்து பெரியவனாகி மருத்துவ துறையில் சிறந்தவனாக ஆகிறான். மருத்துவ துறையில் நோபல் பரிசும் பெறுகிறான். ஆனால், தனது உடலில் இரத்தம் சம்மந்மாக குறைபாடு உள்ளதையும் அறிந்து கொள்கிறான். அதிலிருந்து தப்பித்து உயிர் வாழ பல சோதனை முயற்சிகளை மேற்கொள்கிறான். 

இறுதியில் வேம்பயர் ரக வௌவால்களின் குருதி மற்றும் அதன் எச்சங்களை தன் இரத்தத்திற்குள் புகுத்தி தன் நோயை குணமாக்கிக் கொள்கிறான். இதன் மூலம் நோய் குணமாவது மட்டுமன்றி இவனுக்கு பல சூப்பர் பவர்ஸும் கிடைக்கின்றன. அதீத உடற்பலம், வேகமாக இடம் பெயரும் திறன் என பல திறன்கள் இவனுக்கு கிடைக்கிறது. நாட்கள் செல்ல செல்ல ஒரு கட்டத்தில் வம்பயராகவே மாறி விடுகிறான் மோர்பியஸ். வேம்பயர்கள்தான் ரத்தம் குடிக்குமே, அதானே வழக்கம். இவன் Anti-Hero என்பதால் கெட்டவர்களின் ரத்தத்தை குடிப்பதாக இப்படத்தில் காட்டுவார்கள் போலும். மேலும், எந்தேரமும் வேம்பயராக இல்லாமல், வெனம் போலவே, தேவையான நேரங்களில் மாத்திரம் இவன் வேம்பயராக மாறுவதாக்க் காட்டலாம். 



பெரும்பாலும் திரைப்படங்களில் ஹீரோவின் முகத்தை அடிக்கடி காட்டியே தீருவார்கள். ஹீரோவின் face value என்பதும் ஒரு மார்க்கடிங் தந்திரம்தானே. மேலும் ஸ்பைடர் மேன் homecomingல் வந்த Vultureரும் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளான். ஆக இது ஹோம் கம்மிங்கின் ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அதே நேரம், ஸ்பைடர் மேனின் போஸ்டரை காட்டி, அதில் Murderer எனவும் எழுதியுள்ளதால் இது far from home படத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கும் என எதிர்பாரக்கலாம்.


No comments

//]]>