Related posts

Breaking News

The Witcher: Season 1 (Netflix)



Netflix ஆனது வருங்காலங்களில் Disney+, HBO Max என தனது துறையில் புதிய போட்டியாளர்களை சந்திக்கவுள்ளது. அதனால், இன்னுமே, நல்ல புதிய seriesகளை வெளியிட்டாக வேண்டிய காட்டயமும் உள்ளது. அதன் தாக்கமாக Netflix, The Witcher என்னும் புதிய சீரிஸை வெளியிட்டுள்ளது. சரி, இனி The Witcherஐ பற்றி பார்ப்போம். Andrzej Sapkowski என்ற போலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளரின் கை வண்ணத்தில் உருவாகிய கதாபாத்திரம்தான் இந்த Witcher. Witcher, ஒரு மியூடண்ட். சண்டை செய்வதில் வல்லவன். இவனது தொழில், அரக்கர்களையும் கொடூர ஜந்துக்களையும் வேட்டையாடுவது. இது போன்ற ஒரு கதாபாத்திரம் வீடியோ கேம்களுக்கு ஏற்றதல்லவா? அதனால், வெளிநாட்டு நிறுவனமான CD Projekt Red நிறுவனமானது, இக்கதாபாத்திரத்திற்கான உரிமைகளை வாங்கி, வீடியோ கேம்களை தயாரித்தது.

வீடீயோ கேம்கள் நினைத்ததை விட ஹிட்டடித்தன. அதிலும் இறுதியாக வந்த, The Witcher: The Wild Hunt, தாறுமாறு ஹிட். மேலும், இந்த கதாபாத்திரத்தை வைத்து ஒரு திரைப்படமும் 2001ல் வந்தது. மறந்தும் கூட அதை பார்த்து விடாதீர்கள். Witcher கதாபாத்திரத்தை அடியோடு வெறுத்து விடுவீர்கள். இப்போது, Netflix, நமது சூப்பர் மேன் Henry Cavilஐ வைத்து இந்த சீரிஸை உருவாக்கியுள்ளது.உண்மையை சொல்லப் போனால் இந்த சீரிஸ் அதி அற்புதமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, Game of Thrones முடிந்து விட்டதே, என கையை பிசைந்து கொண்டு நிற்கும் என் போன்ற ரசிக கண்மணிகளுக்கு. அவ்வளவு பிரமாண்டமாக, வலுவான கதாபத்திரங்கள், நல்ல திரைக்கதை, அற்புதமான காட்சி வடிவமைப்புகள் என எல்லாமே சூப்பர் ரகம்.

கதையை பொறுத்தவரை, ஆரம்பமே ஆக்‌ஷன்தான். கிக்கிமோரா என்னும் ஜந்துவை, விட்சர் வேட்டையாடும் காட்சியுடன் தொடங்குகிறது சீரிஸ். பின்னர், ப்ளாவிகேன் என்னும் இடத்திற்கு அவன் செல்கிறான். அங்கே ஒரு இடத்தில் Renfri என்ற பெண்ணையும், பிறிதொரு இடத்தில், Stregobor என்பவனையும் சந்திக்கிறான் விட்சர். Renfri என்பவள் அரச வாரிசை சேர்ந்தவள். இவள், Stregoborஆல் பல துன்பங்களுக்கு ஆளாகியுள்ளாள். ஆகையால், இவள் Stregobor கொல்லச் சொல்லி விட்சரிடம் கூறுகிறாள். அதே நேரம், Renfri சபிக்கப்பட்டவள், ஆகையால் அவளை கொன்று விடு என, Stregobor என்பவன் விட்சரிடம் சொல்கிறான். விட்சர், இரண்டு ஒப்பந்தகளையுமே மறுத்து விடுகிறான். 

இன்னொரு புறம், Cintra என்னும் இராச்சியம், எதிரி நாட்டு படைகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. கடும் யுத்தத்தின் பின், அந்நாட்டையே எதிரி நாட்டு படைகள், அழித்தொழித்து விடுகின்றன. அதில், சிரிலியா என்னும் இளவரசி மட்டும் தப்பித்து ஓடி விடுகிறாள். சிரிலியா தப்பித்து ஓட முற்படும் போது, அவளின் பாட்டி, விட்சரை தேடி கண்டுபிடிக்கும்படி சொல்கிறாள். விட்சருக்கும், அவளுக்குத் என்ன தொடர்பு, இந்த கதாபாத்திரங்கள் எந்த பாதையில் பயணிக்க போகின்ற என்பனவற்றைப் பற்றி அறிய, சீரிஸை பார்க்கவும்.



Henry Cavil, The Witcher ஆக கச்சிதமாக பொருந்துகிறார். ஆனால், குரல்தான் கொஞ்சம் பேட்மேனின் வாய்ஸ் போல உள்ளது. இந்த உணர்வு எனக்கு மட்டும்தானா என தெரியவில்லை. நல்ல நடிகர், இவரை WB தவற விட்டு விட்டது எனதான் சொல்ல வேண்டும். எனக்கு இந்த சீரிஸின் ஆரம்ப எபிசோடில் வரும் போரானது, பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் அரசு தோல்வியுற்றால், அந்த நாடு எப்படி அவதிக்குள்ளாகும் என்பதை மீண்டும் ஒரு தடவை பார்த்த போது உருக்கமாக இருந்தது.

Game of Thronesக்கும் இந்த சீரிஸின் கதைக்கும் ஒரு சம்மந்தமுள்ளது.  கேம் ஆஃப் த்ரோன்ஸின் ஆரம்பத்தில் Daenerys Targaryen மற்றும் அவளது சகோதரன் ஆகியோர் தனது நாட்டை எதிரி நாட்டிடம் இழந்து, அங்கிருந்து தப்பியிருப்பார்கள். இதிலும், சிரிலியா, தன் நாட்டை இழந்து விடுவாள். அங்கிருந்து தப்பி வந்தும் விடுவாள். Daenerys Targaryen போலவே சிரிலியாவிற்கும் சில ஸ்பெஷல் பவர்கள் உண்டு (ஆனால் இரண்டு சக்திகளுமே முற்றிலுமே மாறுபட்டது). இருவருமே, தன் நாட்டை மீட்க வேண்டும் என்ற முனைப்பில் செயற்படுவார்கள். கதையும் அந்த லைனில்தான் போகும். மேலும், Game of Thronesன் இறுதியில் மாபெரும் யுத்தம் நடக்கும். The Witcherல், ஆரம்ப எபிசோடில் யுத்தம் நடக்கும். சரி, இந்த ஒற்றுமைகளையெல்லாம் விட்டு விடலாம். இரண்டு சீரிஸுமே தனித்தனியாக வைத்து பார்த்தாலும் நல்ல சீரிஸ்கள்தான். ஆக, Netflix வெளியிட்ட நல்ல சீரிஸ்களில் ஒன்றான இதை, சீரிஸ் பிரியர்கள், அதுவும் கண்டிப்பாக வயதில் பெரியவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Netflixன் உத்தியோகப் பூர்வ தளத்திற்கு சென்றுWitcherஐ கண்டு மகிழலாம்.


No comments

//]]>