Related posts

Breaking News

Amazon Prime Video -Best Original Web Series (Tamil)

Amazon Prime Video -Best Original Web Series


இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியில், ஏதேனும் ஒரு சேனலில், குறிப்பிட்ட நேரத்திற்கு அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்ப்பதை விட நமக்கு பிடித்தமான நேரத்தில் streaming சேவையில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதையே மக்கள் விரும்புகின்றனர். பிடித்தமான நேரத்தில் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பாரக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். அப்படி streaming சேவையை தரும் நிறுவனங்களில், Amazon Prime Video ஆனது அதன் போட்டி நிறுவனங்களான Netflix, Hulu, Apple TV plus போன்றவற்றை விட இந்தியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் முன்னணி streaming நிறுவனமாகும். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி, கன்னடம், பஞ்சாபி என பல மாநில மொழி திரைப்படங்கள் மற்றும் தொடர்களை பார்க்க முடிகிறது. அதே நேரம் Amazon Prime Video தனது சொந்த தயாரிப்பிலேயே பல திரைப்படங்களையும் தொடர்களையும் தயாரித்து வருகின்றது. அவற்றுள் Amazon Prime Video தயாரித்த சிறந்த நிகழ்ச்சிகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

The Forgotten Army (Azaadi Ki Liye)


இந்த வருடம் வெளியான இந்த தொடர் 5 எபிசோடுகளைக் கொண்ட ஒரு மினி சீரிஸ் ஆகும். 2ம் உலகப்போர் பின்ணணியில் இந்தியாவில் நடப்பதாக கதை எடுக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த தொடரானது, 2ம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் இந்திய படை வீரர்கள் செய்த அர்ப்பணிப்பை பற்றி சொல்கிறது. பிரிட்டிஷின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்திய வீரர்கள், சுதந்திரத்திற்காக போராடிய இந்த கதையை பாலிவுட் பட ஸ்டைலில் எடுத்துள்ளார்கள். வழக்கமாக, உலகப்போரை பின்ணணியாக கொண்ட படங்களாகட்டும் அல்லது தொடர்களாகட்டும், ஆங்கிலத்தில்தான் பார்த்திருக்கிறோம். அதனால், இந்த தொடர் பார்ப்பதற்கு ஃப்ரெஷ்ஷாக உள்ளது. அதிலும் தமிழில் பார்க்க முடிவது இன்னுமொரு ப்ளஸ். ஒவ்வொரு எபிசோடுமே கிட்டதட்ட 25 நிமிடங்கள் என்பதால், போரடிக்காமல் செல்கிறது. பெரிய திரைக்கொண்ட டீ.வீ வைத்திருப்பவர்கள் 5.1 Surround ஒலியமைப்பில் பார்த்தால் இன்னுமே சூப்பரான அனுபவமாக இருக்கும். Amazon Prime Video ஏற்கனவே வைத்திருப்பவர்களும் சரி, புதிதாக subscribe செய்பவர்களும் சரி கண்டிப்பாக தவறவிடக் கூடாத தொடர் இந்த  The Forgotten Army. 

Breathe


நம்ம மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடரானது, 2018ல் வெளியானதெனினும், இன்றுமே இது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்க தவறுவதில்லை. கதையை பொறுத்தவரை, மாதவனின் கதாபாத்திரம் தனது மகனின் உயிரைக் காப்பாற்ற எந்தளவிற்கு போராடுகிறது, அதற்காக எந்த எல்லை வரைக்கும் செல்கிறது என்பதை கொண்டே கதை எழுதப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பால் இறக்கப் போகும் தன் மகனைக் காப்பாற்ற போராடும் தந்தையாகவும், இன்னொரு பக்கம் கொலை செய்யக்கூட தயங்காத சூழ்நிலைக் கைதியாகவும் அருமையாக நடித்துள்ளார் மாதவன். நடித்துள்ளார் என்பதை விட கிட்டதட்ட உண்மையாகவே அந்த கதாபாத்திரத்தை பார்ப்பது போல இருக்கிறது, அந்த அளவுக்கு perfect. இவரை கைது செய்ய துடிக்கும் போலிஸாக அமித் சாத் என்பவர் நடித்துள்ளார . இவரது trackகும் நன்றாகவே எழுதப்பட்டுள்ளது. இந்த தெடருமே தமிழில் பார்க்க முடிவது கூடுதல் ப்ளஸ். அழுமூஞ்சி தொடர்களை பார்த்து சலித்து போய் நல்ல திரைக்கதை அம்சங்கள் கொண்ட தொடர்களை தமிழில் பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக இதை Amazon Prime Video இல் பார்க்கவும்.

The Family Man


ஆங்கிலத்தில் சில திரைப்படங்கள் உள்ளன அல்லவா? அதாவது பகலில் சாதாரண மனிதனாகவும் இரவில் ரகசிய உளவாளியாகவும் ஹீரோ இருப்பாரே, கிட்டதட்ட பேட்மேன் ஸ்டைலில், அப்படியான ஒரு தொடர்தான் இது. ஒரு பக்கம் நடுத்தர குடும்பத்தலைவனாகவும் மற்றொரு பக்கம் இன்டலிஜன்ஸ் ஆபிசராகவும் என மனோஜ் அருமையாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் + குடும்ப சென்டிமன்ட என இரண்டு வெவ்வேறு விதமான தளங்களை அழகாக பேலன்ஸ் செய்கிறது திரைக்கதை. இதன் இரண்டாவது சீசன் இந்த வருடம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் Amazon Prime Video இல் இதனை கண்டு கழிக்கலாம்.

Boys


ஆல் டைம் சூப்பர் ஹிட்டான DC காமிக்ஸ் கதாபாத்திரங்களான சூப்பர் மேன், வொண்டர் வுமன், பேட்மேன் போன்ற கதாபாத்திரங்கள் எல்லாமே வில்லன்களாக இருந்தால் எப்படியிருக்கும்? பதில் சொல்கிறது இந்த Boys தொடர். கிட்டதட்ட ஒரு மணி நேரம் என்ற கணக்கில் மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரை நான் ஒரே நாளில் பார்த்து முடித்தேன். துளி கூட போரடிக்காமல் செல்லும் இதன் திரைக்கதையும் fresh ஆன கதை களமும்தான் இதற்கு காரணம். சூப்பர் ஹீரோஸ் என்ற பெயரில் சூப்பர் சக்தி கொண்ட மனிதர்களால் பாதிக்கப்படும் சாதாரண மனிதர்கள், அந்த சூப்பர் ஹீரோக்களை பழி வாங்குவதே இதன் கதை. ஒரு நொடி கூட போரடிக்காமல், ஹாலிவுட் பட ரேஞ்சில் செல்கிறது ஒவ்வொரு எபிசோடும். சூப்பர் ஹீரோ பிரியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இத்தொடர் தமிழ் சப்டைட்டில்களுடன் Amazon Prime Video இல் காணக்கிடைகிறது. எனக்கு, இந்த தொடரில் சூப்பர் மேனின் counterpartடாக வரும் Homelander கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் பிடித்திருந்தது. இந்த சீரிஸ் பார்த்தவர்கள் உங்கள் வேவரிட் கதாபாத்திரத்தை கமண்ட் செய்யுங்கள்.


Tom Clancy’s Jack Ryan


அடுத்து, Amazon Prime Video இல் நான் பார்த்த சிறந்த சீரிஸ் Tom Clancy's Jack Ryan. Tom Clancy என்னும் எழுத்தாளர், இராணுவத்தை பின்புலமாகக் கொண்ட கதைகளை எழுதுவதில் கை தேர்ந்தவர். அவரது படைப்புக்கள் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் வீடியோ கேம்கள் என பலதரப்பட்ட தளங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர் உருவாக்கிய கதாபாத்திரமான ஜேக் ரியனை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் டீடெய்லிங்கான கதை, தெறிக்கும் ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் நிறைந்த கதை என ஒரு ஸ்பை த்ரில்லர் கதைக்கு தேவையான அத்தனை அம்சங்களும் கனகச்சிதமாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தொடரின் முதலாவது எபிசோடே படம் பார்த்தது போன்ற அனுபவத்தை தந்தது. இந்த தொடரை தொடர்ச்சியாக பார்க்கும் போது நாமே அந்தந்த இடத்தில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது, அந்தளவுக்கு சூப்பரான மேக்கிங்+ ஒளிப்பதிவு. இதன் முதலாவது சீசன் தமிழ் சப்டைட்டில்களுடன் கிடைக்கும் அதேவேளை இரண்டாவது சீசனோ தமிழிலேயே டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பம்சம். ஒரு தத்ரூபமான ஸ்பை த்ரில்லர் பார்க்க நினைப்பவர்கள், Amazon Prime Video இல் (https://www.primevideo.com), மிஸ் செய்யாமல் பாருங்கள். 

மேலும் நமது தளத்தின் புதிய கட்டுரைகளின் Updateகளை பெற்றுக் கொள்ள இ-மெயில் ஐடி மூலமாக  Subscribe செய்யவும். 
No comments

//]]>