Related posts

Breaking News

Man vs Wild படப்பிடிப்பின் பின்னர் காயமடைந்த நடிகர் ரஜினிகாந்த்


இன்றுவரை டிஸ்கவரி சேனல் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது Bear Gryllsன், Man vs Wild நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் படி, மனிதர்கள் பெருமளவில் வாழாத காடு, பாலைவனம், பனி பிரதேசங்கள் போன்றவற்றில் இறங்கி விடுவர், Bear Gryllsம் அவரது டீமும் இறங்கி விடுவார்கள். அங்கிருந்து, வெளி உதவி இல்லாமல் தப்பித்து, பாதுகாப்பான இடத்தை சென்றடைவதுதான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம். இதில் அடிக்கடி பிரபலங்கள் பங்கேற்பது வழமை. Barack Obama முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.



இப்போது, இந்த நிகழ்ச்சியின் புதிய படப்பிடிப்பொன்றில் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பிற்காக கர்நாடாக மாநிலத்தின் பந்திபூர் புலிகள் காப்பகத்திற்கு சென்ற ரஜினி காயமடைந்தாக தகவல்கள் எழுந்தன. பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், படப்பிடிப்பு நடந்த பின்னர், தான் நடந்து வரும் வேளையில் காலில் முள்குத்தியதாக தெரிவித்தார். மேலும், பத்திரிகையாளர்கள் வேறு பல கேள்விகளை கேட்ட போதும், ரஜினி காந்த அவர்கள் அதற்கு பதில் சொல்ல மறுத்து விட்டார்.

Man vs Wild என்னும் நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொள்வதன் காரணங்களுள் ஒன்று, தமது பப்ளிசிட்டி உடைந்தால் அதை சரி செய்து கொள்ளவே. ஏற்கனவே பெரியார் பற்றிய உரைக்காக ரஜினி காந்த அவர்களை பலரும் பல விதமாக சாராமாரியாக விமர்சித்து வருகின்றனர். அதனை திசை திருப்பி தன்னைப் பற்றி வேறு ஏதேனும் ஒன்றை மக்கள் கதைப்பார்கள் என்ற நோக்கில் கூட ரஜினி அவர்கள் Man vs Wild நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கலாம் என ஒரு சாரர் கருத்து தெரிவிக்கின்றனர். அது தொடர்பான கட்டுரையை கீழே உள்ள இணைப்பை கொண்டு படித்துக் கொள்ளலாம்.


No comments

//]]>