Related posts

Breaking News

வருகிறது புதிய பேட்மேன் திரைப்படம்



கடைசியாக பேட்மேனை Justice League திரைப்படத்தில் பார்த்தோம். நாலோடு ஐந்தாக, என்ன செய்கிறோம் என தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார். Ben Affleckன் பேட்மேன் நன்றாகதான் இருந்தது, ஆனால் Warner Bros செய்த குழறுபடிகளால் பேட் மேன் கதாபாத்திரத்தின் முழுமையை உணர முடியாமல் போய் விட்டது. Warner Bros தயாரிப்பு நிறுவனம், பேட் மேன் கதாபாத்திரத்தைக் கொண்ட புதிய திரைப்படங்களை எடுக்காமல் கால தாமதம் செய்யவே, Ben Affleckகும் பேட் -மேனாக நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார்.

இதன் பின், இளவயது பேட் மேனை அடிப்படையாகக் கொண்டு புதிய திரைப்படங்களை வெளியிடுவதாக WB அறிவித்து அப்படங்களுக்கு இயக்குனராக Matt Reevesஐ தேர்வு செய்தது. மேட் ரீவ்ஸ், Cloverfield, Dawn of the Planet of the Apes மற்றும் எனக்கு மிகவும் பிடித்த War for the Planet of the Apes ஆகிய அட்டகாசமான படங்களை இயக்கியவர். மேட், பேட் மேனுக்காக பல விதங்களில் திரைக்கதைகளை மாற்றி எழுதியதும் அவற்றை தொடர்ந்து WB Bros நிராகரித்து வந்ததும் அறிந்ததே. இப்போது அவர்கள் ஒரு வழியாக ஒரு கதையை தேர்வு செய்து விட, திரைப்படத்திற்கான நடிகர்கள் தேர்வும் தொடங்கிவிட்டது.

Matt Reeves


இதில் பேட் மேனாக Twilight புகழ் Robbert Pattinson நடிப்பதாக கூறப்படுகிறது. Twilight காரணத்தால் எனக்கு இவரை அவ்வளவாக பிடிக்காது. பேட் மேன் கதாபாத்திரத்தை இவர் எவ்வாறு கையாள போகிறார் என்பது சந்தேகமே. இதே சந்தேகம் Ben Affleckஐ தேர்வு செய்த போதும் எனக்கு இருந்து. ஆனால் அவர் நடிப்பில் பல தரப்பட்ட அனுபவங்களை கொண்ட நபர். Pattinsonனின் முக பாவனைகள், பேட்மேன் கதாபாத்திரத்திற்கான முதிர்சியான முக பாவனைகளுடன் ஒத்துப் போகுமா என தெரியவில்லை. அதேவேளை, புகழ்பெற்ற நோலனின் பேட்மேனான கிறிஸ்டியன் பேல், சமீபத்திய பேட்டி ஒன்றில், Pattinsonக்கு உற்சாக மூட்டும் விதமாக, “ மற்றவர்கள் சொல்வதை பொருட்படுத்தாதே, நானும் பேட் மேனாக நடிக்க ஒப்புக் கொண்ட போது, என் மீதும் பலர் ஐயம் கொண்டனர், நீ அவற்றை நினைக்காது நடிப்பதில் கவனம் செலுத்து ” என்பது போல் கூறியிருந்தார்.

மேலும் இப்படத்தின் கதையை பொறுத்த வரை Batman: Long Halloween மற்றும் Batman:Year One போன்ற DCயின் கதைகளை தழுவி இருக்கும் அதேவேளையில் Batman: Arkham Asylum என்னும் கணினி விளையாட்டையும் தழுவி இருக்கும் என தெரிகிறது. ஜோக்கர் அற்ற இந்த படத்தில் Riddler, Penguin, Cat Woman ( கேட் வுமனாக Zoë Kravitz நடிக்கிறார் ) மற்றும் பல வில்லன்களும் தோன்ற உள்ளார்கள். ஒருவேளை, நிறைய வில்லன்கள் கூட்டாக உள்ள Rogue Gallery என்னும் வில்லன் படையை பேட்மேனுக்கு எதிராக மோத விடலாம். 
Zoë Kravitz

Rogue Gallery

2021ல் இப்படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர். ஆக இயக்குனர் மேட் ரீவ்ஸன் கடும் பிரயத்தனங்களுக்கு பின் புதிய பேட் மேன் திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்கியுள்ளன. அழுத்தமான கதைகளை தன் படத்தில் தரும் மேட் ரீவ்ஸ், பேட் மேனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


5 comments:

  1. பேட்டின்ஸன் சாதிப்பார் என்றே காத்திருப்போம்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக எதிர்பார்க்கிறோம்

      Delete

//]]>