Related posts

Breaking News

Spiderman Into the Spiderverse- Part 2 (Teaser Breakdown)


மார்வல் நிறுவனம் கஷ்ட காலத்தில் இருந்த போது ஸ்பைடர்மேனை Sony நிறுவனத்திற்கு (திரைப்படம் எடுப்பதற்கான உரிமையை) விற்றுவிட்டது. அதன் பின் சொனி நிறுவனம் Sam Raimi இயக்கத்தில்  Tobey Maguireன் மறக்க முடியாத நடிப்பில் அற்புதமான சில ஸ்பைடர்மேன் படங்களை எடுத்தது. உண்மையிலேயே, சூப்பர் ஹீரோக்களை வைத்து படம் எடுத்த பல கம்பனிகள் நட்டப்பட்டுக் கொண்டிருக்க, அவர்களையெல்லாம் காப்பாற்றி கரை சேர்த்தது ஸ்பைடர்மேன்தான். மார்வல் MCUவை ஆரம்பிக்க இதுவும் ஒரு முக்கிய காரணம்.

பின்னர் மார்வலின் MCU நல்ல போனியாக தொடங்கியதும் அவர்களது திரைப்படங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு போக ஸ்பைடர் மேன் தேவைப்பட்டது. ஆக மார்வல் மீண்டும் ஸ்பைடர் மேனின் திரைப்பட உரிமையை கோர, சொனி நிறுவனம் புத்திசாலித்தனமாக, பல நிபந்தனைகளையிட்டு திரைப்பட உரிமையை கால அடிப்படையில் குத்தகைக்கு கொடுத்தது.    கவனிக்க... Live-Action திரைப்பட உரிமையை மட்டும்தான் தற்காலிகமாக கொடுத்தது.  இருந்தாலும் ஸ்பைடர் மேனைக் கொண்டு காசு பார்க்க வேண்டுமே. அனிமேஷன் ஸ்டைலில் ஒரு ஸ்பைடர்மேன் படத்தை எடுத்தது. அதுதான் Spiderman Into The Spiderverse அனிமேஷன் திரைப்படம்.

கடந்த ஆண்டு கிறிஸ்மஸை முன்னிட்டு வெளியான இந்த படம் பலருக்கும் பிடித்து போனது. அதற்கு மிக முக்கியமான காரணம் அதில் கையாளப்பட்ட அனிமேஷன் ஸ்டைல்தான். மேலும் பல விதமான ஸ்பைடர்மேன்கள், புது விதமான கதையென பல சிறப்பம்சங்கள் இதில் உண்டு. ஆக சோனி சும்மா இருக்குமா? அதன் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பையும் வித்தியாசமான பாணியில் இப்போது வெளியிட்டுள்ளது. சில செக்கன்கள் மட்டுமே ஓடும் இந்த காணொளியில், உற்று பார்த்தால் பல அம்சங்களைக் காணலாம். அவைதான் ஸ்பைடர்மேன் லோகோக்கள்.



ஆமாம், இந்த ஒவ்வொரு சிலந்தி உருவிலான அடையாள சின்னங்களும் பிரத்தியகமானவை.  அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஸ்பைடர்மேன்களை குறிக்கிறது.

Miles Logo
முதலில் பிரதான கதாபாத்திரமான மைல்ஸ்ன் சின்னம்

Spiderman 2099 Logo

Spiderman 2099

மேல குறிப்பிட்ட இந்த சின்னம், Spiderman 2099 என்ற ஸ்பைடர் மேனை குறிப்பிடுகிறது. இந்த ஸ்பைடர் மேனை முதலாம் பாக முடிவில் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.



பிங்க் நிறத்தை பிண்னனியாகக் கொண்ட இந்த சின்னம், Spider Gwen என்னும் பெண் கதாபாத்திரத்தை குறிப்பிடுகிறது (ஸ்பைடர் கடித்து சக்தி கிடைத்தாலும், அது பெண் எனில் பிங்க் நிறம்தான் ஒதுக்கப்படுகிறது, இதன்பின் இருக்கும் அரசியலை யோசித்து பாருங்கள்).

Kaine Logo
Kaine Spiderman

இந்த சின்னம் கேன் என்னும், டெட்பூலை ஒத்த ஒரு ஸ்பைடர்மேனை குறிப்பிடுகிறது.

Cosmic Spiderman Logo

Cosmic Spiderman
இந்த சின்னம் கோஸ்மிக் ஸ்பைடர்மேனை குறிப்பிடுகிறது.

Japan Spiderman Logo
இந்த மஞ்சள், சிவப்பு சின்னம் நமக்கு பெரிதும் பரிச்சயமல்லாத ஜப்பான்- ஸ்பைடர் மேனை குறிப்பிடுகிறது.

Ghost Spiderman Logo
Ghost Spiderman 

இந்த சின்னம் கோஸ்ட் ரைடரின் நகலான கோஸ்ட் ஸ்பைடர் மேனை குறிப்பிடுகிறது.

Scarlet Spiderman Logo


பின் இந்த நீல பிண்ணனியை கொண்டது Scarlet Spiderman என்கிறார்கள். இதே போன்றதொரு ஆடையை Spiderman: Homecommingல் பார்த்தோம் அல்லவா. அதை மூலமாக கொண்டுதான் படத்தில் சூட் செய்யப்பட்டிருந்தது.

Spider woman

மேலும் இது ஸ்பைடர் வுமனை குறிப்பிடுகிறது.

இவற்றையும் விட பல ஸ்பைடர் மேன் சின்னங்கள் காட்டப்பட்டுள்ளன. கண்டிப்பாக அவையும் யாரையேனும் குறிப்பிடலாம். அத்தோடு MCU ஸ்பைடர்மேனும் இதில் தலைக்காட்ட வாய்ப்புள்ளதாம். அவற்றை பற்றியெல்லாமும் அறிய படம் சம்மந்தமான மேலதிக அறிவிப்புகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். மேலும் 2022 ஏப்ரல் 08ம் திகதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆக, சொனி, மார்வலின் முக்கியமான சர்க்குகளையெல்லாம் இந்த படத்தில் இறக்கி வைக்க போகிறார்கள் என்பதால் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆவலுடன் காத்திருக்க, இன்னொரு பக்கம் மார்வல் நிறுவனம் பொத்தி காத்து வந்த இந்த கதை வரிசையை இப்படி ஒரே அடியில் படமாக்குவது, மார்வலுக்கு எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். மேலதிக தகவல்களுக்கு டிரைலர் வரும் வரை........













No comments

//]]>