Related posts

Breaking News

ஜப்பானின் அசுரன் - Kengan Ashura

ஒருநாள், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது,  ஒரு சந்தில் மாமலைப்  போன்ற தோற்றம் கொண்ட ஒருவன், இளவயது வாலிபன் ஒருவனோடு மோத தயாராவதை பார்கிறார். இளவயது வாலிபன், அந்த மாமலையுடன் மோதி, அடி வாங்கி இறந்து விடுவான் என நினைக்கும் அவர் சற்று நேரத்தில் வாயடைத்து போகிறார். அந்த வாலிபன் முரட்டுத்தனமாக காட்டடி அடித்து எதிராளியை வீழத்தி விடுகிறான் கொன்று விடுகிறான். பின்னர், அந்த மனிதரை வாலிபன் திரும்பி பார்த்து, “நீயும் என்னுடன் மோதப் போகிறாயா?” எனக் கேட்க அந்த மனிதர் பயத்தில் மயங்கியே விடுகிறார்.

அந்த கட்டுமஸ்தான உடல் கொண்ட, எதிரிகளை கருணையின்றி காட்டடி அடிக்கும் இளைஞன்தான் இந்த கதையின் நாயகன் Ohma Tokita, in other words அசுரா (அசுரன்).


ஆதிகாலத்தில் ஜப்பானில், வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவ, தங்கள் வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் பல முயற்சிகள் செய்தார்கள். கடைசியில், வியாபாரத்திற்காக போட்டி வர்த்தகர்கள் ஒருவரையொருவர் கொன்று தீர்த்தனர். இந்த பழக்கம் தலைமுறை தலைமுறைகளாக தொடரவே, ஒரு கட்டத்தில் இந்த நிலைமையை யாராலும் சரி செய்ய இயலாமல் போய் விடுகிறது. அதன்கண், வியாபாரிகள் ஒரு சங்கம் அமைத்து ஒரு போட்டித் தொடரை ஏற்பாடு செய்கிறார்கள். இந்த போட்டியில், ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் சார்பாக ஒரு போட்டியாளனை நிறுத்துவார்கள். ஒவ்வொரு வியாபாரிகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நிராயுதபாணியாக எதிராளிகளுடன் சண்டையிட வேண்டும். இறுதியில் உயிரோடு இருப்பவரே வெற்றியாளன். இந்த பாரம்பரியம் நிகழ்காலத்திலும் ரகசியமாக தொடரப்பட்டு வருகிறது. Ohma Tokitaவும் அவ்வாறு ஒரு நிறுவனத்திற்காக சண்டையிட ஒப்பந்தம் செய்யப்படுகிறான், அதன் பின் நடக்கும் நிகழ்வுகளே இந்த தொடர்.

ஜப்பானின் மங்கா (Manga) எனப்படும் கொமிக்ஸ் தொடர்கள் உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும்? கற்பனை வரட்சியற்ற கதைகள், தனித்துவம் மிக்க கதாபாத்திரங்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள், மில்லியன் கணக்கான வருமானம் என கொடிக்கட்டி பறக்கிறன மங்கா ஆக்கங்கள். அவ்வாறான ஒரு படைப்பின் anime வடிவமே இந்த தொடர். நமது தமிழ் சமூகம் போலல்லாது, நல்ல கலை ஆக்கங்களுக்கும் வாசிப்பிற்கும் அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும் முக்கியத்துவம் கொடுப்பதனால்தான், அவர்கள் புதியனவற்றை கண்டறிவதில் முன்னோடியாக இருக்கிறார்கள். நாம் இன்னும் எவனோ கண்டுபிடித்ததையோ அல்லது எப்போது எவன் அதை கண்டுபிடிப்பான் என்றோ சுய முயற்சியற்றவர்களாக வாழ்ந்து எவனோ ஒருவனுக்கு கீழே வேலை செய்தே ஆயுளை கழித்து விடுகிறோம். 

Action மட்டுமல்லாது உலக நடப்புக்களையும் பேசும் இந்த தொடர் Netflixல் anime வடிவில் காணக்கிடைகிறது. நல்ல கதைகளை தேடும் மங்கா பிரியர்கள் இதை கண்டிப்பாக முயன்று பார்க்கலாம்.

No comments

//]]>