Related posts

Breaking News

How Dare you- The Great Speech of Greta




மாரிக்காலத்தில் வெயிலும் கோடைக்காலத்தில் மழையும் அடிப்பது இப்போதெல்லாம் நமக்கு பழகிவிட்டது அல்லவா...
நகர் புற மக்களுக்கு தெரியும் நான் சொல்வது, இரவில் கூட இருக்கும் அந்த சூடு எரிச்சலூட்டுகிறதா
பயிர் விதைப்பவர்களுக்கு தெரியும் நான் சொல்வது மழையின்றி வாடிப்போகும் பயிர்களின் அழுகுரல் கேட்கிறதா.
'முன்னைய காலங்களை விட புவி வெப்பமயமாதல் அதிகரித்துவிட்டது, இது ஆபத்திற்கு வழி வகுக்கும்' என செய்திதாளில் படித்துவிட்டு அடுத்து நாம் சினிமா செய்திகளுக்கு நகர்ந்து விடுவோம்.

உங்களை சுமையென நினைக்கும் பலரின் மத்தியில்   சாதி, மாதம், இனம், மொழி, ஆண், பெண், கிழவன், குமரி, குருடன், கழுதை என எந்த பாரபட்சமும் இன்றி சுகமாய் உங்களை சுமந்து திரியும் பூமிக்கு என்ன நன்மை செய்திருக்கிறீர்கள் உங்கள் வாழ்நாளில்...

உங்களை போலவோ என்னை போலவோ அல்ல இந்த கிரேடா எனும் சிறுமி, 15 வயதிலேயே பருவநிலை மாற்றத்திற்கு நாம்தான் காரணம் என உலக தலைவர்களுக்கு எதிராக கோஷம் இட தொடங்கிவிட்டாள். சற்றே யோசித்து பாருங்கள் இதையே நாம் சொன்னால்/செய்தால் நமது குடும்பமும் சுற்றமும் நமக்கு தரும் ஆதரவை நினைத்து பாருங்கள். எத்தனை தடவை கன்னம் சிவந்திருக்குமோ...

Asperger Syndrome எனப்படுகின்ற ஒரு வகை 'ஆட்டிசம்' குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட இச்சிறுமி தனது அயராத உழைப்பால் இன்று ஐ.நா.சபையில் பேச வாய்ப்பளிக்கப்பட்டாள். அவள் கூறிய வார்த்தைகள் ஆத்திரத்தால் வந்தவை அல்ல ஆதங்கத்தால் வந்தவை. அவள் உலக தலைவர்களுக்கு உரக்க ஒலிக்கும் செய்தி இதுதான்.

"இவையனைத்தும் தவறாக உள்ளன நான் இங்கே இருந்திருக்கூடாது, கடலுக்கு அப்பால் உள்ள என் பாடசாலையில் நான் இருந்திருக்க வேண்டும். How dare you... உங்களது வெற்று வார்த்தைகளை கொண்டு எனது கனவுகளை நீங்கள் திருடிவிட்டீர்கள். நான் அதிர்ஷடசாலி, ஆனால் பல மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், பலர் இறந்திருக்கிறார்கள். உலக அழிவின் ஆரம்பத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் பொருளாதார வளர்சி என்னும் பெயரில் நீங்கள் முக்கியத்துவம் அளிப்பது பணத்திற்கும்  வீண்கதைகளுக்கும் மட்டுமே...கொடிய குணம் கொண்ட உங்களையெல்லாம் நம்ப நான் தயாரக இல்லை"... என்னும் விதமாக கிட்டதட்ட 5 நிமிடங்களில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்...

தமிழில் படிப்பதற்கு சற்றே நாகரீமாக இருக்கும் இந்த வாரத்தைகளை "How dare you" போன்ற ஆங்கில் சொற்றொடர்களைக் கொண்டு அலங்கரித்து பாருங்கள்...ஆங்கில மொழியிலான இவரது கருத்துக்கள் பல தலைவர்களை தடுமாற செய்திருக்கிறது.

இதே நமது சமுதாயத்தில் ஒரு சிறுமி செய்திருந்தால் "உனக்கேன் இந்த அக்கறை ஊருக்கு இல்லாத அக்கறை" என்றோ அல்லது " பெண்பிள்ளை போல அடக்க ஒடுக்கமாக இரு" என்று சொல்லியோ அவளின் வாயை அடைத்திருப்போம் ஆனால் இந்த வெளிநாட்டுச் சிறுமியோ எல்லோரையும் வாயடைக்க செய்துவிட்டார்.

பூமிக்கு நாம்  அவசியமில்லை, நாம் இல்லாவிடில்தான் பூமி இன்னும் சுத்தமாக இருக்கும் ஆனால் நாம் வாழ்வதற்கோ சுத்தமான பூமி கண்டிப்பாக அவசியம் யோசித்து பாருங்கள்..!

No comments

//]]>