Related posts

Breaking News

Avengers:Endgame Review


Avengers: Endgame பற்றிய விரிவான இக்கட்டுரை A to Z Spoilers அடங்கியது.

டோனி ஸ்டார்க் குழப்பத்துடன் அமர்ந்திருக்கிறார்.

"மீண்டும் அவென்ஞர்களோடு இணையலாமா அல்லது தனது மகள், மனைவியுடான மீள் வாழ்க்கையை தொடரலாமா" என்ற ஆழந்த சிந்தனை அவரை குழப்பிக்கொண்டிருந்தாலும் பீட்டர் பார்க்கரின் முகமும் அவன் இறுதியாக கூறிய வார்த்தைகளும் அவரை குற்றவாளியாக எண்ண வைத்தன.

பின்னர் ஒரு முடிவுடன் எழுந்து, தனது A.I செயலியின் உதவியுடன் குவாண்டம் டணலின் மாதிரி உருவத்தை உருவாக்க முயற்சிக்கிறார். சில செக்கன்களிலேயே டோனியின் A.I செயலி அந்த மாதிரியை அவருக்கு காண்பிக்கிறது. ஆச்சிரயமடையும் அவர் பிரமிப்போடு மீண்டும் இருக்கையில் அமர்கிறார்.

இது அவென்ஜர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. டோனி ஸ்டார்க் அறிவாளிதான், ஏன் அவரது A.Iயும் கூடதான். ஆனால் குவாண்டம் டணல் என்பது செக்கன்களில் கண்டறியும் காரியமல்லவே. டோனியின் தவிப்பையும் குற்றவுணர்ச்சியையும் சரிவர காட்டியவர்கள் ஒரு குவாண்டம் டணல் உருவாகும் விதத்தை இரண்டே செக்கன்களில் காட்டியது வருத்தத்துக்குரியது.

மக்கள் அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அவென்ஜர்ஸின் நான்காம் பாகம் இப்போது கூட எத்தனையோ திரைப்படங்களின் வசூல் சாதனையை உடைத்து முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறது. பல மில்லியன் செலவில் பல வருட உழைப்பில் உருவான பல மில்லியன் இதயங்களின் எதிர்பார்ப்போடு வெளியாகிய இத்திரைப்படத்திற்கு எத்தனை கச்சிதமான திரைக்கதை எழுதப்பட்டிருக்க வேண்டும்?

முதலில் இருந்து விரிவாக அலசலாம்.

திரைப்பட குழாமினால் புதிதாக கற்பனை படைப்பில் படைக்கப்பட்ட டைம் டிராவல் கொன்சப்ட்டை எடுத்துக்கொள்வோம். இதற்கு முன் வந்த காலப்பிரயாண திரைப்படங்களில் ஒரு மாபெரும் பிரச்சினை இருந்தது. இறந்த காலத்தில் ஏதேனும் ஒன்றை மாற்றி விட்டால் அந்த மாற்றம் கண்டிப்பாக எதிர்காலத்தை பாதிக்கும். அதாவது கிராண்ட் வாதர் முரண் போல; டைம் மெஷினை கண்டுபிடிக்கும் நீங்கள் இறந்த காலத்திற்கு செல்கிறீர்கள் அங்கே தவறுதாலாக உங்கள் பாட்டனாரை, அவர் திருமணம் முடிக்கும் முன்பே கொன்று விடுகிறீர்கள். இதனால் உங்கள் அப்பா பிறந்திருக்க மாட்டார். நீங்களும் கூடதான். ஆக எதிர்காலத்தில் பிறக்காத நீங்கள் எப்படி டைம் மெஷினை கண்டுபிடித்து அதில் பயணம் செய்து உங்கள் பாட்டனாரை கொல்ல முடியும். இதுதான் முரண்.

ஆனால் எண்ட்கேம் படத்தில் அவ்வாறு அல்ல. நீங்கள் இறந்த காலத்திற்கு பயணித்தால் அது உங்கள் எதிர்காலமாகவே கருதப்படும். ஆக நீங்கள் இறந்த காலத்தில் உள்ள உங்களை கொன்றால் கூட எதிர்காலம் மாறாது. மாறாக Alternativeவாக அங்கே ஒரு டைம்லைன் உருவாகிவிடும். இந்த தியரி மார்வல் இதற்குமுன் வெளியிட்ட அத்தனை படங்களையும் ஒரு வகையில் காப்பாற்றி விடுகிறது அத்தோடு திரைக்கதையும் இப்போது இலகுவாக எழுதலாம். அவென்ஜர்கள் கடந்த காலத்தில் என்னமும் செய்யலாம் அது எதிர்காலத்தை பாதிக்க போவதில்லை. எனவே இந்த தியரி திரைக்கதை ஆசிரியரை சுதந்திரமாக எழுத அனுமதிக்கிறது. ஆனால் பிரச்சனையே அங்கேதான் உள்ளது.

ஆக கடந்த காலத்தின் ஒவ்வொரு செக்கனிலும் ஒரு டைம் லைன் உள்ளது. உதாரணமாக நான் டோனி ஸ்டார்கின் ஆர்மரை எடுத்துக்கொண்டு காலப்பிரயாணம் செய்து ப்ளேக் விடோ கீழே விழும் போது அவரை காப்பாற்றி  எனது டைம்லைனுக்கு கொண்டு வந்துவிடலாம், இதனால் எதிர்காலம் மாறது, மாறாக கடந்த காலத்தில் ஹாக் ஐக்கு கிடைத்த சோல் ஸ்டோன் கிடைக்காமல் போகலாம் அது இன்னொரு Alternative டைம்லைனாக மாறாலாம். ஆக தியாகம் செய்த உயிர்களுக்குண்டான மதிப்பு குறைந்துவிடுகிறது.

மேழும் இன்வினிடி வோர் படத்தில் தானோஸ் டைம் ஸ்டோனை வைத்து விஷனோடு சேர்த்து அழிக்கப்பட்ட மைண்ட் ஸ்டோனை மீட்டெடுப்பார் - Infinity Warல் மைண்ட் ஸ்டோன் தூள்தூளாக எங்கெங்கேயோ சிதறி அழிந்துவிடும், தானோஸ் விஷனைதான் உயிர்பிப்பார். அதைப்போல அவென்ஞர்கள் டைம் ஸ்டோனை மட்டும் எடுத்துக்கொண்டு தானோஸின் காண்ட்லட்டை வைத்து ஏனைய ஸ்டோன்களை மீட்டிருக்கலாம். மீண்டும் டைம் ஸ்டோனை பயன்படுத்த தவறிவிட்டனர்.

அடுத்து தோர், தோர் ஒரு கடவுள். மனிதன் போல நடந்து கொண்டாலும் அவர் ஒரு கடவுள். அந்த கடவுளின் முழு பலமும் இவ்வளவுதானா. தானோஸ் அவரை வைத்து சாத்துகிறார்-கொமிக்ஸில் தானோஸ், தோர் வேறு லெவலான பலம் உள்ளவர்கள். குறிப்பாக தானோஸ் ஒத்தை ஆளாக நின்று எந்த உதவியும் இல்லாமல் அத்தனை அவெஞ்சர்களையும் தெறிக்கவிட்டவர் ஆக அவர் தோரை அடிக்கலாம் ஆனால் இங்கே, குழப்புகிறது. ஆரம்பத்தில் தோர் அவரின் தலையை வெட்டியது போல எல்லாம் இலகுவாக வெட்டிவிட முடியாது. பலே கில்லாடி அவர். ஆனால் படத்தில் அவர் இன்வினிடி வோரில் இருந்த அளவுக்கு கூட பலமில்லாதவராக காட்டப்படுகிறார், அப்படிப்பட்டவர் தோரை பந்தாடுகிறார். 

சரியென்றால் தானோஸ் சொடுக்கியவுடனேயே, அவென்ஞர்கள் வருங்காலத்தில் என்ன செய்வார்கள் என்பதையும் டாக்டர்.ஸ்டேரேன்ஜ் போல கண்டறிந்திருப்பார்.

இதே இன்வினிடி கான்லெட் கதையில்- தானோஸ் சொடக்கு போட்டு பாதி உயிர்களை அழித்த கொமிக்ஸ் இதழ்- தானோஸ் பேராசையால் ஒரு எண்டிடியை அழிக்க அவரே எண்டிடியாக மாறிவிட அவரது கையில் இருந்த கான்ட்லட் நெபுலாவுக்கு கிடைத்து விட........என கதை போகும்.
Entity என்றால் என்ன என கூகுளில் தேடிக்கொள்க.

பிம் பார்டிகள்ஸ் நினைத்த நேரமெல்லாம் கிடைப்பது, மிகச்சரியாக நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு பயணிப்பது, கடந்த கால அவென்ஞர்களை நகைச்சுவை நடிகர்கள் போன்று காட்டுவது, பெரிய கஷ்டமில்லாமல் ஸ்டோன்களை பெற்று விடுவது-ப்ரூஸ் பேனர் தமிழ்பட சிவா போல கதைத்தே சாதித்து விடுவார்- அடிப்பது பறப்பது ராக்கெட் ரக்கூன் கூட ரத்தம் சிந்தாமல் தானோஸின் படையை தாக்குவது, ஒரு இன்வினிடி ஸ்டோன் கூட பலம் குன்றியவர்கள் தொட்டாலே அவர்களை வெடிக்க வைத்துவிடும் என்று முன்னைய படங்களில் காட்டிவிட்டு இங்கு ஹாக்-ஐ கூட திறந்த கான்ட்லட்டில் அதை கட்டியணைத்து கொண்டு ஓடுவது, எத்தனையோ டைம்லைன்களில் இருந்து யார்யார் எல்லாமோ வந்து தீடிரென குதித்து Take, Action சொன்னாற்போல சண்டை போடுவது என வேடிக்கை காட்டியிருக்கிறார்கள்.

மேலும் சீமாராஜா படத்தில் கேட்பது  போல வால்கைரிக்கு எப்படி குதிரை கிடைத்து.

எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் ஒரு படம் ஜெயிக்க அவசியம் ஒன்றே ஒன்றுதான். எந்த ஒரு படமும் மக்களை நேரம் போவது தெரியாமல் பொழுது போக்க செய்ய வேண்டும்." ஆ " என வாயை பிளக்க வைக்க வேண்டும். அதை இந்த படம் எந்த குறையுமின்றி செய்கிறது என்பது உண்மையே. கடைசி காட்சியில் வரும் யுத்தம் Hobbit- The Battle of Five Armies படத்தை ஜாபகமூட்டிகிறது- எனது பார்வையில் ஹாபிட்தான் பெஸ்ட் சண்டை வடிவமைப்பில், ஏன் என்று படத்தை பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள்-, இரண்டு கேப்-களின் சண்டை மற்றும் "and I am Iron man" காட்சிகள் என்பன இன்னொரு விருந்து.

ஆனால் இதைதாண்டி என்ன இருக்கிறது படத்தில். அதுதான் கேள்வியே. இதே ஏஜ் ஒவ் அலட்ரானை பாருங்கள், அடுத்தடுத்து கதை, சண்டை என பில்டப் ஆகிக்கொண்டே போய் அருமையாக முடியும். கதையின் மையப்பிரச்சினையே, சிம்பிளாக ஏற்கனவே எழுதியதுபோல் (எழுதியதுதான்) அடுத்தடுத்து ஸ்டோனை கலக்ட் செய்து இலகுவாக இறந்தவர்களை கொண்டுவருவதுதான்.

ரொபர்ட் ஜீனியர் போன்ற கண்ணில் ஆயிரம் கலவைகளைக் காட்டும் ஜாம்பாவான் நடிகர்கள் ஒரு புறம் இருக்க மார்வலின் அதிமுக்கியமான சூப்பர் ஹீரோக்கள் இன்னொரு புறம்  இருக்க எதிர்பார்ப்பு மூலேமே ஏற்கனவே யூகிக்க முடிந்த பட வெற்றி மற்றொரு புறம் என எத்தனையோ துணைகள் இருந்த போதும் என்னை போன்ற ஒரு சாதா சினிமா மற்றும் மார்வல் ரசிகனை முழுமையாக திருப்திபடுத்தாமல் படம் முடிந்து விடுவது போல் ஒரு உணர்வு.

எனக்கு பிடித்த MCU படங்கள்: Iron Man 2, Iron Man 3, Thor: Dark World, Avengers: Age of Ultron, Captain America: Winter Soldier( except climax fight). உங்களுக்கு விருப்பமான படங்களை Comment செய்க.

4 comments

Arun Kamal said...

எழுத்துப் பிழைகளைக் களைந்திருக்கலாமே சகோ..?

Kavind said...

Note appல் டைப் செய்து பின்னரே இங்கு அதனை இடுகிறேன். அதனால் சில நேரங்களில் எழுத்துருக்கள் சரிவர function ஆக மறுக்கின்றன. சரி செய்ய முயற்சிக்கிறேன். நன்றி

jscjohny said...

நல்ல பதிவு. நிறைய யோசித்தால் கதை பிரயாணிக்கும் பாதை இன்னும் குழப்பும்.. ஜஸ்ட் என்ஜாய் மேன்..

Kavind said...

really enjoyed #stress buster

//]]>