Related posts

Breaking News

Saamy 2 (2018)



ஒரு அனுபவத்தை பற்றி எழுத வேண்டுமெனில்,அவ்வனுபவம் நமக்கு நல்ல நினைவுகளையோ கூடாத நினைவுகளையோ ஏற்படுத்தியிருக்க வேண்டும்.உதாரணத்திற்கு, ஒரு புது படத்தை பார்த்துவிட்டோம் என்பதற்காக விமர்சனம் செய்யவதோ அலசுவதோ முறையான செயல் அல்ல.நம் மனதில் எந்தவொரு தாக்கத்தையும் செலுத்தாத நாலோடு ஐந்தான விடயங்களை பற்றி விமர்சிப்பதில்/விவாதிப்பதில் எந்தவொரு பயனும் இல்லை.ஒரு விமர்சனமோ விவாதமோ, அந்தியில் ஏதாவது ஒரு சிந்தனையை நமக்குள் தூண்ட வேண்டும்.

பலரும் விமர்சனம் என்ற பெயரில் அலசி ஆராயாமல் அவசரமாக ஒரு கருத்தை பதிவு செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.அவசரமாக செய்யும் விடயங்களை முழுமை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவே.

சாமி 2ம் அவ்வாறுதான்.இரண்டாம் பாகம் எடுப்பதுதான் இப்போதைய ஃபேஷன் என யாரோ சொல்லிவைக்க,சாமி 2ம் வந்தாயிற்று.

விக்ரமின் சாமி என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது,பாடல்கள்,பிண்ணணி இசை,ரெளடித்தனமான போலீஸ்,ஆங்காங்கே அடடே சொல்ல வைக்கும் காட்சிகள்,விவேக்கின் கொமெடி ட்ரக்,அலுக்காத கதையம்சம் போன்றனவைதான்.அந்த காலத்திற்கு அது புதிது நன்றாகவும் இருந்தது.

இன்றைய காலத்திற்கு, ஒரு நல்ல வணிக திரைப்படத்திற்கு, மேல் உள்ள அம்சங்களோடு சேர்த்து மிக வலுவானதொரு திரைக்கதையும் தேவை.ஆனால் இந்த படத்தில், திரையிருந்ததை கண்டேன். கதையில்லை.பாடல்கள் இருந்தன ஆனால் எந்தெந்த பாடல்கள் என ஞாபகமில்லை.காரணம்,ரசிக்க முடியவில்லை.

இதைப்போன்ற திரைக்கதை திறமாக இல்லாத படங்களுக்கு பிண்ணனி இசையின் பங்கு அபரிமிதமானது.ஓப்பனிங்க சீனில் வரும் பழையை ஹாரிஸின் தீம் மட்டுமே அருமையாக இருந்தது.இராண்டாம்  பாதியில் DSP செய்தேவிட்டார்.இறுதிக்காட்சியில் ஹாரிஸின் இசை மீண்டும் வரும்போது படம் ஓரளவு மீண்டு வருகிறது.அப்படியே படம் முடிந்தும் போகிறது.பிண்ணினி இசைக்கோர்ப்பின் முக்கியத்துவம் காட்சிக்கு உயிர்கொடுப்பதுதான்.

இளையாராஜாவை கவனியுங்கள்.உயிரோட்டமுள்ள காட்சிகளில் மௌனத்தையே ஊட்டியிருப்பார்.அந்த காட்சியின் ஜீவன் கேள்விக்குள்ளாகும் போதே தனது கானத்தை தொடங்குவார்.சமீப காலங்களில் வந்த எந்தவொரு திரைப்படத்திலும் முழுமையான நல்ல இசையை நுகர முடியவில்லையே.

இடைவேளை வருவதற்கு சற்றுமுன்னர் தூக்கம் வந்துவிட்டது.அரைத்தூக்கம்.பின்னர் முகத்தே கழுவிவிட்டு வந்து பார்த்தால்...

சூரியின் இம்சை ஓரளவிற்கு மேல் தாங்கிக்கொள்ள முடியவில்லை.அவர் 
சிரிக்க வைத்த இடங்கள் மிகக்குறைவு.
வழக்கம் போல் தேவையில்லாமல் ஒரு ஹீரோயின்.தேவையில்லாமல் ஒரு படம்.

இலங்கையில் இருந்து இராவணன் என்ற பெயரில் வரும் வில்லன்.ராம நாமம் கொண்ட நாயகன் என மீண்டும் இராமாயணதிற்கு இழுக்கு விளைவிக்கின்ற  முயற்சி இது.இதில் இலங்கை தமிழ் என்ற பெயரில் வில்லன்&கோ எழுத்து தமிழில் கதைக்கிறார்கள்.

ஆயினும் சில நல்ல ஐடியாக்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தன என்பதும் உண்மை.திரைக்கதையையும் அதே போல் எழுதியிருந்தால் கண்டிப்பாக வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாகியிருக்கும்.

ஆகவே எந்தவொரு விடயத்தையும் செய்வதற்கு முன்னரேயே "இது தேவையா" என சிந்தியுங்கள்.தேவையான நேரத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்,பல பாகங்களிலும் யோசியுங்கள்.தேவையும் திட்டமும் சரியாக இருப்பின் மட்டும் செயற்படுங்கள்.




No comments

//]]>