Related posts

Breaking News

தமிழ்படம் 2.0Spoof என்றால் என்ன!??தெரியாதவர்கள் கூகுளில் தேடி பார்த்து கொள்ளுங்கள்.Spoof ஏன் தேவை?

நாளாக நாளாக நாமும் நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களும் மாறிக்கொண்டே வருகின்றன.2000ம் ஆண்டிற்கு பின்னர் பிறந்த சிறுவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்;நம்மை விட இவர்களுக்கு நுண்ணறிவு அதிகம் ஆனால் 10,15 வயது சிறுவர்களுக்கு கூட தலையில் உள்ள கேசத்தின் அளவு மிகவும் குறைவு ஏன் 5 வயது சிறுவர்களுக்கு கூட நீரிழிவு நோய்,கண் பார்வை குறைப்பாடு உள்ளது.காரணம் இயற்கையான நோய் எதிர்ப்புதிறன் கம்மியாக உள்ளதே.ஏன் இயற்கையான எதிர்ப்பு சக்தி குறைவு,தேவையில்லாத உணவு பழக்கவழக்கம் மேலும் அவர்களது பெற்றோர்கள் எடுத்தக் கொள்ளும் உணவுகள்,மருந்துகள் etc.

அரசியல்வாதிகளுக்கு அடிப்படை கல்வி தகமைகள் கூட இல்லை,அரசியல் கல்வியறிவு இல்லாதவன் எப்படி அரசியல் செய்ய முடியும்!??எப்படி அலசி ஆராய்ந்து முடிவுகளை எடுக்க முடியும் என்று என்றாவது நாம் நினைத்து பார்த்ததுண்டா!??
 
ஒரு வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு சென்றால் நம்மை எத்தனை கேள்விகள் கேட்கிறார்கள்,நாம் என்றாவது நம் அரசியல்வாதிகளை பற்றி அலசி ஆராய்ந்து இருக்கிறோமா?வாக்குகளை அளிப்பதற்கு முன் ஒவ்வொரு வேட்பாளர்களை பற்றிய தகவல்களையும் சேமித்து யார் சிறந்தவர் என ஆராய்ந்த பின்னரா வாக்களிக்கிறோம்!??திரைப்படங்களை ஆராய்ந்து புள்ளிகள் வழங்க முடிகிற நம்மால் தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களை ஏன் Rank செய்ய இயலாமல் போகிறது!??

இலங்கையும் சரி இந்தியாவும் சரி,தேசிய அளவிளாகட்டும் அல்லது உள்ளக(மாநில,மாவட்ட) பிரிவுகளிளாகட்டும் இரண்டிரண்டு கட்சிகளை வைத்து கொள்வது.அல்லது அந்தந்த கட்சிகளை பிரதிநிதித்துவபடுத்தும் பெரும் தலைகள் புதிதாக கட்சி தொடங்கினால்/கட்சி மாறினால் அதற்கு வாக்களிப்பது.

சினிமா பார்த்து விமர்சனம் செய்ய முடிகிற நம்மால் அரசியலை விமர்சனம் செய்யும் சுதந்திரம் வழங்கப்படுகிறதா!??அரசியல் யாப்பில் பேச்சு சுதந்திரம் உள்ளது ஆனால் ப்ரக்டிகலாக கருத்து சுதந்திரம் உள்ளதா!??

இதனால்தான் நம்மளவுக்கு கூட தகுதிகள் இல்லாதவனை எலலாம் நமக்கு தலைவனாக்கி விட்டு பின்னர் சிஸ்டம் சரியில்லை என புலம்புகிறோம்.

எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் ஏன், எதற்கு,எப்படி என்ற கேள்வியே எழாமல் பல விடயங்களை கண்முடித்தனமாக நம்பி ஏமாந்ததன் விளைவுகள்தான் இவை.

நமது வாகனம் நல்ல நிலையில் இருக்கிறதா,நமது உடல் நல்ல நிலையில் இருக்கிறதா,ஏன் மிக்ஸி,கிரைண்டர்,தொலைக்காட்சி முதற்கொண்டு அவ்வப்போது சரிபார்க்கும் நாம் சரியான பாதையில் செல்கிறோமா நமது ரசனைகளும் விருப்பு வெறுப்புகளும் ஏப்பேற்பட்டவை என்பதை நாம் சுய மதிப்பு செய்து கொள்ளவேண்டாமா?

ஆக நம்மை நாமே எப்படியெல்லாம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிய Spoof கண்டிப்பாக தேவை.சிறுவயதில் படையப்பா போன்ற படங்களை பார்த்து ரசித்ததை எண்ணி பிற்காலத்தில் என்னை நானே கேள்வி கேட்டு பார்த்ததுண்டு.

ஒரு வயதிற்கு பின், பொதுவாக எனக்கு ஹீரோ பில்டப் உள்ள படங்கள் பிடிப்பதில்லை.உதாரணத்திற்கு அஜித் எனக்கு பிடிக்கும் காரணம் அப்போது அமர்களம்,ஆசை போன்ற படங்களை பார்த்ததனால்.ஆனால் பின்னர் ஏகன்,அசல் சமீபத்திய வேதாளம்,விவேகம் என்பனவற்றை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.கடைசியாக அஜீத் என்னும் நடிகனை "என்னை அறிந்தால்" படத்தில் பார்த்து ரசித்தது.வீரம் படத்தில் Santa Claus போல் தாடி வைத்துக்கொண்டு தமன்னாவுடம் டூயட் பாடியதை பார்க்க வேடிக்கையை விட கவலையாக இருந்ததான் அதிகம்.நல்ல அருமையான நடிகர்கள் பலரை  நாம் ஹீரோயிசத்தால் இழந்துள்ளோம்.அதில் அஜித்தும் ஒருவர்.

தமிழ்படம் 2.0வில் எனக்கு பிடித்த விடயமே நான் வெறுத்த போலியான பல படங்களை போலியான பல நபர்களை கலாய்பதுபோல் கேள்வி கேட்டதுதான்.வேதாளம் சண்டைகாட்சி,விவேகம் திரைப்படம்(முக்கியமாக கிளைமேக்ஸ்),டெம்ப்ளேட் காதல் காட்சிகள்,ஹீரோ ஏதோ தியாகி போல் ஓப்பனிங் சோங்கில் கருத்து சொல்வது என அத்தனை விடயங்களையும் நகைச்சுவைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.

சாதாரண வாழ்க்கையில் நடப்பதைதானே படமாக எடுக்கிறோம் எனபவர்கள் கமர்ஷியல் படத்தில் தருக்க(Logic) பார்க்க வேண்டாம் என சொல்கிறார்கள்.இதுவே பெரிய தருக்க முரண்தான்.இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஹாலிவுட்டில் குறிப்பாக சூப்பர் ஹீரோ படங்களில் ஒரு நாயகன் பத்து பேரை அடிக்கிறார் எனில் நாயகனுக்கு அந்த சக்தி எவ்வாறு கிடைத்து என்பதை பற்றி சொல்வவே பாதி திரைப்படத்திற்கு கதையை எழுதியிருப்பார்கள்.இங்கே சூர்யா,ஆர்யா,ஜீ.வி.பிரகாஷ் என எல்லோரும் சூப்பர் ஹீரோக்கள்தான்.அங்கே கதாபாத்திரங்களுக்குதான் மாஸ் நடிப்பவருக்கல்ல இங்கே மாஸ் நடிகருக்குதான்.

ஒரு படமாக இதில் சொல்வதற்கு பல குறைகள் உள்ளன.திரைக்கதை சரியாக எழுதப்படாதது,நடிக்கவே தெரியாத சிவா,சதீஸ் என்பவர்கள் படத்தில் மெயின் கதாபாத்திரங்களை செய்வது,நல்ல இசையை வம்படியாக வீணாக்கியது,முழுமையற்ற கதையாக்கம் என சொல்லிக்கொண்டே போகலாம்.Spoof என்றாலும் இதுவும் ஒரு படம்தான்.அதை மறந்து ஏனோதானோ என பல விடயங்கள் எடுக்கப்படிருந்தது.ஆனால் இந்த முயற்சி வெற்றிதான்.

டைட்டில் போடுவது எண்ட கிரடிட் வரை சிரித்துக்கொண்டே இருந்தோம்.நல்லதொரு stress relief மற்றும் entertainment.

ஆனால் இங்கே கடைசியில் எனக்குள் ஒரு கேள்வி.நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருப்பதை பார்த்துதானே நாம் இத்தனை நேரம் சிரித்துக்கொண்டிருந்தோம்.

இறுதியாக,ரஜினி ஸ்டைலில் சொல்வதனால் இந்த படம் முழுக்கவே  சிரிப்பாக வரும் ஆனால் இது ஒரு நல்ல நகைச்சுவை படம் அல்ல.அதாவது நகைச்சுவை வகையறாவில் இது ஒரு பகடிவதை திரைப்படம்.மற்றவரை ஏளனம் செய்து நாம் சிரிப்போம் அல்லவா அதுபோல்தான்.(நம் நண்பன் ஒரு கணம் கீழே விழுந்தால் எப்படியெல்லாம் சிரிப்போம்).நம் இயலாமையின் வெளிப்பாடுதான் இந்த படமும்.ரஜினி,கமல்,அஜீத்,விக்ரம்,சூர்யா போன்றவர்கள் பல நல்ல அருமையான திரைப்படங்களிலும், கதாபாத்திரங்களிலும்,கதைகளிலும் நடித்து(நன்றாக கவனிக்கவும் "நடித்து") உள்ளார்கள்.அதை நாம் மறந்துவிடலாகாது.ஆனால் தமிழ்படம் போன்ற படங்கள் தொடர்ந்து வர வேண்டும்.அப்போதுதான் நாம் நமது ரசனையை சுய மதிப்பீடு செய்து நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள முடியும்.இல்லையெனில் ஒரே வட்டத்திற்குள் சிக்கி வேடிக்கை மனிதராய் வீழ வேண்டியதுதான்.
1 comment

jscjohny said...

நன்றாக இருக்கிறது உங்கள் சிந்தனை. கட்டுரை சிறப்பு.

//]]>