Related posts

Breaking News

என்றும் பதினாறு

புது வருடம்,புத்தம் புதிய நாள் மலர்ந்துவிட்டது.இந்நாளில் கடந்த வருடத்தின் சிலபல நிகழ்வுகளை நாம் நினைத்து பார்க்கக்கூடும்.அந்நினைவுகளில் ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை தந்திருக்கும்.சென்ற வருடமும் கூடவே நமக்கு பல்வேறு விதமான இன்னல்களையும் அனுபவங்களையும் கவலை மிகுந்த நிகழ்வுகளையும் தராமல் செல்லவில்லை.ஆனால்  மனது எத்தனை கவலைகளை சுமந்து கொண்டிருந்தாலும் ஒரு அருமையான பாடல் நம் மனதின் போக்கையே மாற்றிவிடக்கூடும் அல்லவா.அவ்வாறாக 2016ல் வெளிவந்து என் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு சில பாடல்களை பட்டியலிடவுள்ளேன்.இது எனது 

மனதுக்கு நெருக்கமான பாடல்களின் தெரிவு மட்டுமே.   உன் மேல ஒரு கண்ணு(ரஜின் முருகன்)

இமானின் இசையில் ரஜினி முருகன் பட பாடல்கள் முன்னரே வந்து விட்டிருந்தாலும் இப்பாடலின் இறுதி வடிவமும் காட்சிகளும் 2016ல்தான் வெளிவந்தது.வழக்கமான இமானின் இசை என்றாலும் கூட இப்பாடலை படமாக்கிய விதம் மற்றும் இப்பாடல் இடம்பெறும் சந்தர்ப்பம் என்பன அருமையாக இருக்கும்.இன்றும் கிராமத்திலும்(நகரங்களில் ஓரு சில இடங்களிலும்) தமிழர் தொடர்ந்து வரும் ஒரு சடங்கை அழகாக பதிவு செய்த  பாடல்.
மாமன்கள் மேல் மங்களநீர்(மஞ்சள் நீர்) தெளிப்பது,தாத்தாவின் சிரிப்பு,குடும்ப ஒன்றுகூடல் என  நாம் மறந்து போன அழகிய தருணங்களை கண்முன் கொண்டு வந்தது.இசையை காட்டிலும் காட்சி படுத்திய விதத்திற்காக என்னை மட்டுமல்லாமல் பலர் மனதிலும் இடம் பெறுகிறது இப்பாடல்.

முன்னால் காதலி (மிருதன்)


அதே இமான் அழகான இசை என சோகம் கலந்த துள்ளலான ஒரு பாடல்.தமிழில் இதைப்போன்ற சந்தர்ப்பங்களை கொண்டமைந்த பாடல்கள் மிகவும் குறைவு.அந்த குறைவை நிறைவு செய்தது இம் முன்னால் காதலி.

நான் யாரு(சேதுபதி)நிவாஸ் பிரசன்னா என்னும் வளர்ந்து வரும் ஒரு இசைக்கலைஞனின் படைப்பு.அனிருத்தின் அதிரடிக்கும் குரல்,நிவாஸின் தெறிக்கும் இசை என பக்கா Mass ஆனா பாடல்.முதலில் வில்லனுக்கும் பின்னர் கதாநாயகனுக்கும் என்பதாக பாடலை கையாண்ட விதம் அருமை.இதே படத்தில் வரும் "கொஞ்சி பேசிட வேணாம்" இசை பியர்களுக்கு  இன்னுமொரு விருந்து.

அனா ஆவான்னா ஏன்னா ராணி நான்(காதலும் கடந்து போகும்)


சனா(SaNa) என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சந்தோஷ் நாரயணின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்று.பெரியளவில் இந்த பாடல் ரீச் ஆக விட்டாலும் இளையராஜாவின் சாயலில் அமைந்த இசைக்காகவும் கவலையே இல்லாமல் மிகவும் சிம்பிளாக ஆனால் வெளிப்படையாக எழுத்தப்பட்ட வரிகளுக்காகவும் என் மனதில் ஓர் இடத்தை பிடிக்கிறாள் இந்த ராணி.

எதுக்கு மச்சான் காதலு(மாப்ள சிங்கம்)

ஓரளவு இசை தெரிந்த யாருமே இசைக்கக்கூடிய இலேசான ஒரு பாடல்.ஏற்கனவே நாம் கேட்ட பல பாடல்களின் சாயல் அடங்கிய பாடல்.அனிருத்தின் கொஞ்சம் கரகரப்பான குரல்,சி.காவின் சுரத்தையில்லாத குரல் என்று மைனஸ்களே ப்ளஸ் ஆகி போனது பாட்டிற்கு.ஆம்,சென்ற வருடத்தின் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.(இப்பாடலின் இறுதி வடிவத்தில் வேறு பாடகர்கள் பாடியிருந்தால் அனிருத்,சிவா கூட்டணியே இனிதாக இருந்தது).


உன்னாலே எந்நாளும்(தெறி)

நீண்ட இடைவெளிக்கு பின் ஜீ.வீயின் கைவண்ணத்தில் சைந்தவியின் குரலில் அமைந்த இனிமையான ஓர் பாடல்.மெட்டிற்கு நியாயம் சேரக்கும் வகையில் எழுதப்பட்ட வரிகளும் எடுக்கப்பட்ட  காட்சிகளும் கூட அருமையே.
காலம் முடியலாம் நம் காதல் முடியுமா


அடடா இது என்ன(தொடரி)

மீண்டும் இமான்.கொஞ்சம் மைனா,கொஞ்சம் கும்கி என ஏற்கனவே இசையமைத்த பாடல்களின் எச்சமே இது.எனினும் அதே உணர்வை இம்மி பிசகாமல் தந்ததனால் தனித்து நிற்கிறது இப்பாடல்.ஹரிச்சரனின் இளமை மாறா குரலும் யுகபாரதியின் பழைமையில் புதுமையான வரிகளும் பாடலுக்கு மேலும் பலம் சேர்த்தன.

கண்ண காட்டு போதும்(றெக்க)

இமான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இசையமைப்பாளர் என்று நான் கண்டிப்பாக கூறப்போவது இல்லை.அவ்வாறான ஓர் ஈர்ப்பும் இல்லை.ஆனால் சென்ற வருடத்தில் பல ஹிட்டான பாடல்களை வழங்கியது இவர் மட்டும்தான்.இந்த பாடலை பற்றி நான் கூறுவதைவிட நீங்களே ஒரு தடவை கேட்டு விடுவது சிறந்தது.

சிரிக்காதே(ரெமோ)

அனிருத்தின் பாடல்கள் எதுவுமே கேட்டவுடன் பிடிக்காது,கேட்க கேட்கதான் பிடிக்கும்.கிட்டாரை கையாண்ட விதமும் ஆண் குரலின் இனிமையும் பாடலை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது.விஷுவலிலும் துறுதுறுப்பான சிவகார்த்திகேயன் மனதை கவர மறக்கவில்லை.ஒளியமைப்பும் பாடலை காட்சிபடுத்திய விதமும் கூட அருமையே.

சிறுக்கி வாசம்(கொடி)

இந்த வருடத்தின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பாடல்களில் ஒன்று.முதல் தடவையிலேயே மனம் கவர்ந்து.இன்னும் ஆயிரம் தடைவைகள் அளுப்பின்றி கேட்கலாம்.

சுழலி(கொடி)

கேட்டவுடன் தாளம் போட வைத்த பாடல்.சனாவுக்கு மட்டுமே முடியுமான இசையில் நாள் முழுவதும் முணுமுணுக்க வைத்தாள் இந்த சுழலி

தள்ளிப்போகாதே(அச்சம் என்பது மடமையடா)

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் தாமரையின் வரிகளில் அமைந்து சென்ற வருட இறுதியில் அனைவரையும் கிறங்க வைத்த பாடல்."நியூயோர்க் நகரம் உறங்கும் நேரம்" என்ற ஏ.ஆர்.ஆரின் பாடலின் சாயலிலேயே அமைந்திருந்தலும் புதிய மெட்டும் புதுமையான இசையும் உலகத்தரமான ஒரு பாடலாக இதை மாற்றியிருந்தது.இப்பாடலை காட்சிப்படுத்திய விதம்,சிம்புவின் இயல்பான நடிப்பு என்பன இன்னும் பல வருடங்களுக்கு இப்பாடலை தொலைக்காட்சிகளில் ஓட வைக்கும்.


இவைமட்டுமன்றி,பிடித்தது என்று சொல்ல முடியாத ஆனால் நன்று என சொல்லக்கூடிய ஒரு சில பாடல்களும் உள்ளன்.

பிச்சைக்காரன் திரைப்படத்தில் இடம்பெறும் "நெஞ்சோரத்தில்",24 திரைப்படத்தில் இடம்பெறும் "நான் உன் அழகினிலே",ஒருநாள் கூத்து திரைப்படத்தில் இடம்பெற்ற "அடியே அடியே",தேவி திரைப்படத்தின் "சல்மார்",தர்மதுரை படத்தில் வரும் "மக்கா கலங்குதப்பா"(இதில் சிலம்பாட்டம் படத்தில் வரும் "Where is the party" என்னும் பாடலின் மெட்டை அச்சுபிசகாமல் யுவன் பயன்படுத்தியிருப்பார்),இருமுகன் "ஹலினா" மற்றும் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் ஏனைய பாடல்கள் ஆகியவற்றையும் சிறப்பாக குறிப்பிடலாம்.
2 comments

jscjohny said...

நன்று.

Kavind Jeeva said...

நன்றி🖒🖒🖒

//]]>