Related posts

Breaking News

Doctor.Strange-2016(3D)
மார்வல் உலகின் மாயஜால முதல்வரை ஒரு வழியாக பார்த்தாகிவிட்டது.வழக்கத்தை விட அதிகமான கட்டணத்தை செலுத்தியும் மிகவும் சிறியதொரு திரையில்தான் இவரை காண முடிந்தது.படம் நன்றாக இருந்ததால் மோசமான சினிமான அனுபவத்தை நுகர்வதில் இருந்து தப்பிக்க முடிந்தது.

படத்தைப் பற்றி பார்க்குமுன் ஒரு சில விடயங்களைப் பறறி அலசுவது சிறந்ததாக இருக்கும் என கருதுகிறேன்.

Doctor.Strange Comics

ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகியோரின் படைப்புதான் இந்த Dr.Strange.மார்வலின் மற்றைய கதாநாயகர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒருவர்.

Ancient One

பெயருக்கேற்றாற் போல் மிகவும் பழமை வாயந்த ஒருவர்.Dark Dimension எனப்படும் இருண்ட பரிமாணம் மூலமாக தனது சக்திகளை பெருப்பித்து கொண்டவர்.இவருக்கு நிறைய சீடர்கள் உள்ளனர்.அதில் கேஸீலியஸ் மற்றும் மோர்டோ ஆகியவர்கள் பிரதானமானவர்கள் (கேஸீலியஸ் பிந்நாட்களில் தீயவனாக மாறிவிடுகிறான்).A.Oவின் மிகப்பிரதானமான வேலை டோர்மாம்மு(Dormammu) எனப்படும் கொடிய சக்தியிடமிருந்து உலகை காப்பாற்றுவது.

Dormammu

இருண்ட அண்டவெளியில் வாழும் ஒரு தீய சக்தி.இதன் ஒரே நோக்கம் உலகை அழிப்பதுதான்.இருண்ட அண்டவெளியில் நேரம்,காலம்,இறப்பு என்பன கிடையாது.(A.O நீண்டகாலம் வாழ்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்).

Mirror DimensionDoctor.Strangeன் காமிக்ஸிலும் சரி படத்திலும் சரி பல்வேறு விதமான பரிமாணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன.அதில் மிகவும் முக்கியமானது இந்த கண்ணாடி பரிமாணம்.இதை சரியாக புரிந்து கொள்ளவிடில் படம் இலேசாக திகக்கும்.எனக்கு புரிந்த மட்டிலும் ஒரு சிறிய விளக்கம்.

நம்மைச் சுற்றி ஒரு மாய விம்பத்தை இந்த கண்ணாடி பரிமாணம் உருவாக்கும்.இருவர் இந்த கண்ணாடி பரிமாணத்திற்குள் இருக்கிறார்கள் எனில் அந்த இருவரும் உலகின் எந்த மூலைக்கும் சென்றாலும் இது வேலை செய்யும்.கண்ணாடி பரிமாணத்திற்குள் நடப்பவை வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது.அதேவேளை அனைத்து பொருட்களின் திசையையும் இதற்கூடாக மாற்றியமைக்கலாம்.க.பரிமாணத்திற்கு வெளியில் இருப்பவர்களை இது பாதிக்காது.ஆனால் உள்ளே இருப்பவர்களின் மீது புவியீர்ப்பு விசையில் இருந்து அனைத்துமே தாக்கத்தை செலுத்தும்.அதுமட்டுமல்லாமல் வெளியில் இருக்கும் பொருட்களின் வினை உள்ளே தாக்கத்தை ஏற்படுத்தும்.உதாரணமாக வேகமாக வரும் ஒரு கார் கண்ணாடி பரிமாணத்திற்குள் இருக்கும் ஒருவர் மீது மோதினால் க.பரிமாணத்திற்கு உள்ளே இருப்பவரை அது பாதிக்கும்.ஆனால் காரோட்டும் நபர் இதை அறிந்து இருக்கமாட்டார்.

சரி இனி திரைப்படத்திற்குள் செல்வோம்.

Ancient Oneன் நூலகத்தில் உள்ள ஒரு புத்தகத்தின் பக்கத்தை மட்டும் திருடி சென்றுவிடுகிறான் கேஸீலியஸ்.அதன் மூலமாக டோர்மாம்முவை வரவைப்பது அவனது திட்டம்.(படத்தில் ஆரம்பித்திலேயே Mirror Dimension கையாளப்பட்டுள்ளது)

இப்போது கதாநாயகனின் அறிமுகம்.பல்வேறு சிக்கல் வாய்ந்த அறுவை சிகிச்சைகளை கூட ஐபோனில் பாடல்களை செவிமடுத்தவாரே செய்யும் உடற்கூறியல் மருத்துவர்தான் Doctor.Stephen Strange.காமிக்ஸில் வருவது போன்றே சற்றே திமிரானவர்.காரை வேகமாக செலுத்திச்செல்லும் போது ஏற்படும் ஒரு விபத்தினால் படுகாயமடைகிறார்.நாட்கள் செல்கின்றன.விபத்தின் மூலம் ஏற்பட்ட தாக்கத்தினால் இவரது கைகள் வழமைபோல் செயற்பட மறுக்கின்றன.பல்வேறு வைத்திய முறைகளை கையாண்டும் கைகளை குணப்படுத்த முடியாமல் போகிறது.பின்னர் எதேச்சையாக ஒரு நாள்  இதேபோன்று நோய் இருந்து குணமான ஒருவரைப் பற்றிய விபரங்களை அறிகிறார்.அவரை சநதிக்கும் ஸ்ட்ரேன்ஜ் நேபாளத்தில் காமர்தாஜ்(Kamar Taj)என்னும் இடத்தில் (காமிக்ஸில் இமாலயம் என கூறப்பட்டுள்து)Acient One எனப்படும் ஒருவர் இருப்பதாகவும் அவரால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை எனவும் அறிகிறார்.இறுதி முயற்சியாக நேபாளத்திற்கு பயணிக்கிறார்.அங்கு பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு Ancient Oneஐ சந்திக்கிறார் ஸ்ட்ரேன்ஜ்.கைகளை குணமாக்க சென்றவர் A.O மூலம் இந்த பிரபஞ்சத்தைப் பறறிய பல்வேறு அதிசயங்களை தெரிந்து கொள்கிறார். ஆரம்பத்தில் கைகளை குணமாக்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தாலும் பின்னர் படிப்படியாக A.Oவின் மாயாஜால வித்தைகளால் கவரப்படுகிறார். பயிற்சியினாலும் கற்றலினாலும் மாயஜால சக்திகளை அடைகிறார்.

இவ்வாறு இருக்கும் போது மீண்டும் கேஸீலியஸ் அங்கே வருகிறான்.அதன்பின் நடப்பவையே மீதிக்கதை.

படம் நினைத்ததை காட்டிலும் மிகவும் பிரமாண்டமாக இருந்தது.முற்றிலும் வேறு லெவலிலான ஒரு படம்.C.G காட்சிகள் சிறியதொரு நெருடல் கூட இல்லாமல் மிகவும் அருமையாக பயன்படுத்தப்பட்டிருந்து.ஒரு சில நேரங்களில் கட்டிடங்களின் மேலே இருப்பதைப்போன்று உணர்ந்தேன்.

அடுத்து மிகவும் கவனிக்கத்தக்க இன்னொரு விடயம் படத்தில் நாயகனின் கதாபாத்திரம்(கிட்டதட்ட இவரது அறிமுகத்திற்கு பின் வரும் அனைத்து காட்சிகளிலும் இவர் வருகிறார்).Benedict Cumberbatch,ஷெர்லாக் ஹோம்ஸ் சீரிஸ்களில் ஹோம்ஸாக வெளுத்து வாங்கியவர்.ஹோம்ஸ் கதாபாத்திரத்திற்கும் Dr.Strange கதாபாத்திரத்திற்கும் நிறையவே ஒற்றுமைகள் உள்ளன.கிட்டதட்ட ஹோம்ஸ் மருத்துவம் படித்திருந்து வைத்தியராகி இருந்தால் அவர் கண்டிப்பாக Doctor.Strangeக மாறியிருப்பார்(அதாவது Doctor.Sherlock Holmes ஆக).இரு கதாபாத்திரங்களும் ஒரே போன்றவையே.அதில் இன்னொரு சிறப்பாக ஷெர்லாக் ஹோம்ஸில் நடித்த அதே நபரே ஸ்ட்ரேன்ஜாகவும் நடித்திருப்பதால் ஹோம்ஸை பார்ப்பது போலவே இருந்தது(சினிமாவில் ஐரின் அட்லராக வந்த பெண்தான் இதில் கதாநாயகி).😆படம் சில இடங்களில் தொய்வடைந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் அதை சரி செய்து விடுகின்றனர்.Edge of Tomorrow படத்தில் காட்டப்படுவது போன்ற Time loop conceptம் இதில் கையாளப்பட்டுள்ளது.இங்கு சொல்லப்படாத அருமையான பல விடயங்கள் திரைப்படத்தில் உள்ளன.ஆகவே ஆர்வமுள்ளவர்கள் படத்தைப் பார்த்து விடுவது உத்தமம்.C.G காட்சிகளுக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் ஒரு திரைப்படம்.

A.P:-படத்தின் இறுதியில் வரும் Mid Post Credit சீனில் தோரை நீங்கள் சந்திக்கலாம்.

Spoiler

இறுதி P.C சீனில்  மோர்டோவும் தீயவனாக மாறுவதாக காட்டப்படுள்ளது.

அருமையான காட்சிகள் பலவும் நிறைந்த படம்.முடிந்தவரை 3Dயில் பார்க்கவும்.


No comments

//]]>