Related posts

Breaking News

See (Apple TV+ Series) : விமர்சனம்


Netflix, Amazon Prime போன்றவற்றிற்கு போட்டியாக Apple நிறுவனமும் அதன் Streaming சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவை புதிய அப்பிள் கருவிகளை வாங்குபவர்களுக்கு (iphone, ipad) ஒரு வருடம் இலவசமாகக் கிடைகிறது (நிபந்தனைகள் மற்றும் கால வரையரை இருக்கலாம், வாங்க நினைப்பவர்கள் ஒரு தடவை உறுதி செய்து கொள்ளுங்கள்) அல்லது மாதாமாதம் $4.99 பணம் செலுத்தியும் பார்க்கலாம். இதில் முதற்கட்டமாக கையளவு TV Seriesகளை அப்பிள் வெளியிட்டுள்ளது. See, The Morning Show, For All Mankind, Dickinson, Elephant Queen, Helpsters என்ற Muppet show, Ghost Writer மற்றும் Snoopy in the Space என்ற கார்ட்டூன் சீரிஸ்  ஆகிய தொடர்கள் இப்போதைக்கு காணக்கிடைக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த மாதமே இன்னும் பல தொடர்களும் வரவிருக்கின்றன. இதில் சிறப்பம்சம் யாதெனில் தமிழ் சப்டைட்டில்களும் பெரும்பாலும் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் கிடைக்கின்றது. 

இதில் நான் முதலில் பார்த்தது நமது Aquamanனான Jason Momoa நடிக்கும் See என்ற தொடரையே. கிட்ட தட்ட Game of Thrones ஸ்டான்டர்டில் பெரிய பட்ஜட்டில் எடுத்துள்ளார்கள். கதைப்படி, 21ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு பாரிய நோய் தாக்கத்தால் உலகில் உள்ள மனிதர்களிள் சனத்தொகை வெகுவாக குறைந்து விடுகிறது. மேலும் எஞ்சி இருப்பவர்களும் கண் பார்வையை இழந்து விடுகின்றனர். மேலும், இவர்கள் கண் பார்வையை ஒரு தீட்டாகவும் சாத்தானை பின் தொடர்பவர்கள் நம்பும் கோட்பாடாகவும் கருத்துகின்றனர். 

இப்படியான காலகட்டத்தில் ஒரு கிராமத்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறார் பாபா வாஸ் என்பவர் (Jason Momoa). கதையின் தொடக்கத்தில் பாபா வாஸின் மனைவி இரு குழந்தைகளை பிரசவிக்கிறாள். அதே நேரம், இவர்களது கிராமத்தின் மீது Witch Finders என்னும் குழுவினர் தாக்குதல் நடத்த வருகின்றனர். முதற்கட்ட தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்கின்றனர் பாபாவாஸ் குழுவினர். மேலும் இரண்டாம் கட்ட தாக்குதலை சமாளிப்பது கடினம் என நினைக்கும்  பாபா வாஸ் தனது குடும்பத்தையும் கிராமத்தினரையும் காப்பாற்ற கிராம மக்களோடு அங்கிருந்து வெளியேறுகிறார். 

இங்கே, பாபா வாஸின் மனைவியின் குழந்தைகள் உண்மையிலேயே இன்னொரு மனிதனுடையது. ஆனால் அவன் இப்போது எங்கே இருக்கிறான் என யாருக்கும் தெரியாது.  அவன் கட்டிய பாலத்தின் வழியேதான் மக்களும் தப்பித்து செல்கின்றனர். ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்கு கண் பார்வை உள்ளதென பாபா வாஸ் அனுமானித்துவிடுகிறான். மேலும் Witch Finders தங்கள் மீது படையெடுத்து வந்தது குழந்தைகளை அபகரிக்கதான் என்பதையும் தெரிந்து கொள்கிறான். குழந்தைகளை எப்படி காப்பாற்றுகிறான், அடுத்த சந்ததிக்கு கண்பார்வை கிடைக்கப் பெற என்ன செய்தான் போன்றவையே இப்போதைக்கு கதையின் தொடர்ச்சியாக இருக்கிறது. 

See, அதன் மேக்கிங்கில்தான் நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. கையாளப்பட்டுள்ள அத்தனை லொக்கேஷன்களும் கண்களுக்கு விருந்து. Jason Momoaதான் கதையை தாங்கி கொண்டு செல்கிறார். கண் பார்வை இல்லாமல், மக்கள் தமது வாழ்க்கையை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை நல்ல கற்பனா வளமுடன் காட்டியுள்ளனர். ஆனாலும் சில இடங்களில் மட்டும் பாபாவாஸ் மிகச்சரியாக தனது தாக்குதலை நடத்துவது நெருடலாக உள்ளது. மற்றபடி ஓ.கே.

இப்போதைக்கு மொத்தமே 3 எபிசோட்களே வெளிவந்துள்ளன, ஒவ்வொன்றும் கிட்தட்ட தலா ஒரு மணிநேரம் ஓடக்கூடியவை. தமிழ் சப்டைட்டிலோடு கிடைக்கும் இந்த சீரிஸை புதுமை விரும்பிகள்  முயற்சி செய்து பார்க்கலாம். 


No comments

//]]>