புஷ்பா 2 - சப்புனு அறைவேன் ராஜா
இந்த KGF, Animal, Pushpa போன்ற படங்களிலெல்லாம் உள்ள பெரிய பிரச்சினையே நேர்மையற்றவர்களையும் தவறான வழியில் முன்னறே நினைப்பவர்களையும், மாஸ் BGM போட்டு, நாட்டுக்காகவோ, தன் இனத்துக்காகவோ, மக்களுக்காகவோ போராடிய வீரர்களை போன்று பெருமைப்படுத்தி காட்டுவதுதான்.
தன் அப்பா, அம்மா தனக்காக போராடிய/போராடும் உண்மையான தலைவர்கள், எல்லாவற்றுக்கும் மேலான இறைவன் என இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, ரசிகனுடைய நேரத்தையும் பணத்தையும் திருடும் ஹீரோக்களுக்கும் இயக்குனர்களும் சப்போர்ட் செய்ய நம்நாட்டில் சில தற்குறிக்களுமே உண்டு.
அவர்களை target audience ஆக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் வரிசையில்தான் இந்த புஷ்பா 2 வருகிறது. நேர்மையற்ற ஹீரோ, அவன் என்ன செய்தாலும் கேட்காத ஹீரோயின், தடுமாற்றமான வில்லன், மோசமாக எழுத்தப்பட்ட திரைக்கதை, இசை என்பது துளியும் இல்லாமல் வெறும் சத்தங்களாவே இருக்கும் பாடல்கள், படக்கும் பார்க்கும் பார்வையாளனின் நேரத்துக்கும், பணத்திற்கும், நாம் வாழும் இந்த சமூகத்திற்கும் மதிப்பளிக்காது எழுதப்பட்ட பார்க்க சகிக்காத காட்சிகள் என சமீபத்தில் நான் பார்த்த மிக மிக மோசமான படங்களில் ஒன்றுதான் இந்த புஷ்பா 2.
இந்த மாதிரி படங்களையும், அதனை எடுத்தவர்களையும் பார்த்தால் “சப்புனு” அறைந்து விடுங்கள்.
No comments