Related posts

Breaking News

Copycat Movies - மெர்சல் (Part 2)

இதற்கு முந்தைய கட்டுரையில் நாம், மெர்சல் திரைப்படத்தின் கதை எப்படி ஒழுங்கற்று  நகலெடுக்கப்படிருந்தது என பார்த்தோம். அந்த கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். இன்று நாம், கதையையும் தாண்டி மெர்சல் திரைப்படத்தின்  காட்சிகள் எப்படி வேறு படங்களில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டு இருந்தது எனப் பார்ப்போம்.

முதலில் விஜய் கைது செய்யப்படும் அந்த காட்சி, யோசித்து பாருங்கள் படத்தின் ஓப்பனிங் சீன் கூட ஒரு இயக்குனரால் சொந்தமாக யோசிக்க முடியவில்லையென்றால் அவரை என்ன சொல்வது. இந்த சீன் Mission Impossible: Rogue Nation படத்தின் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பச்சை காபி.

Mission Impossible: Rogue Nation

Mersal

அடுத்து என்னை மிகவும் பாதித்த ஒரு காட்சியை மெர்சல் படத்தில் சுட்டிருந்தனர். Law Abiding Citizen என்ற படத்தில் இந்த காட்சி வரும் (நேரமிருந்தால் இந்த படத்தை பாருங்கள், நன்றாக இருக்கும்). தன் குடும்பத்தை நாசமாக்கியவர்களை பழி வாங்கும் ஜெரார்ட் பட்லர் தனது எதிரியின் கை கால்களைக் கட்டி ஒரு பெட்டிக்குள் அடைத்து வைத்திருப்பார். இதேவேளை ஜெரார்ட்டை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்துவர். அப்போது ஹீரோ, எதிரியை கடத்தி எங்கே வைத்திருக்கிறார் என்பதை திசையின் பாகைகள் மூலமாக கூறுவர். இத்த காட்சியை  வடக்கு, கிழக்கு கூட மாற்றாமல் அப்படியே அபேஸ் செய்திருப்பார் அட்லி. 

Law Abiding Citizen
Mersal
மேலும் பார்ப்போம், Now You See Me என்றதோர் விறுவிறுப்பான படம், Guy Ritchie என்ற இயக்குனரின் மற்றுமொரு பரபரப்பான கதையை கொண்ட படம். அந்த படத்தல் ஒரு மேஜிக் நிபுணரை போலிஸ் கைது செய்து விசாரித்துக்கொண்டிருக்கும். மேஜிக் நிபுணரின் கையில் விலங்கு மாட்டப்பட்டிருக்கும். ஒரு கட்டத்தில் மே.நிபுணர் கைகளை அசைக்க அந்த விலங்கு போலிஸின் கைகளுக்கு வந்துவிடும். இந்த ட்ரிக் எப்படி செய்யப்பட்டது என்பதை பல டிவிஸ்ட்டுகளுக்கு பின் படத்தின் இறுதியில் காட்டியிருப்பார்கள். இதே காட்சி அச்சு பிசகாமல் “மெர்சல்” படத்தில் இடம்பெற்றிருக்கும்.  மேலும் அந்த சீட்டுக்கட்டை வைத்து சண்டை போடும் காட்சியும் இந்த படத்தில் இருந்து சுட்டதே. அடுத்த காட்சியை கொஞ்சம் வித்தியாசமாக கொரியன் சீரியலில் இருந்து சுட்டிருப்பார்கள். மூச்சடைத்து திணறும் ஒரு பெண்ணை ஸ்ட்ரோ வைத்து விஜய் அண்ணா காப்பாற்றும் இந்த காட்சி குட் டொக்டர் என்ற படத்தில் இருந்து சுட்ட காட்சியே. இதில் தமாஷான விஷயம் இரு காட்சிகளுமே விமான நிலையத்தில் நடப்பது போல்தான் எடுக்கப்பட்டிருக்கும். ஒருவேளை தங்களுக்கு தேவையான சீனுக்கு ஏற்ற காட்சிகளை Youtubeல் டைப் செய்து தேடி எடுத்தார்கள் போலும். 

Good Doctor

Mersal
மேலும், மேஜிக் நிபுணர் விஜய் ஒரு வைத்தியரை கொல்லும் அந்த காட்சி Prestige படத்தை ஜாபக மூட்டியது. மேலும் Prestige திரைப்படம் பார்த்தவர்களுக்கு தெரியும், இரு விஜய் கதாபாத்திரங்களையும் மாற்றி மாற்றி காமிக்கும் இடங்கள் மற்றும் அந்த டீரிட்மண்ட் Prestigeல் இருந்து எடுக்கப்பட்டது என்பது. 

மேலே குறிப்பிடப்பட்ட அத்தனை திரைப்படங்களுமே, சர்வரீதியில் நன்கு அறியப்பட்ட படங்களே, நம்ம ஊர் புள்ளிங்கோ இதெல்லாம் பார்த்திருக்காது, அதுங்களுக்கு எங்க அவளோ அறிவு என மக்களை முட்டாளாக நினைத்து படத்தை எடுத்தார்கள் போலும். உண்மையை சொன்னால், காலம் மாறிவிட்டது மக்களே. Youtube, Netflix எல்லாம் இங்கும் உள்ளது. சினிமா என்பதே க்ரியேட்டிவிட்டியை அடிப்படையாகக் கொண்டதுதான். கற்பனா சக்தி இல்லாத அட்லீ போன்ற இயக்குனர்களின் படத்தை மக்கள் கண்மூடித்தனமாக வெற்றி பெற வைப்பதனால்தான், நல்ல இயக்குனர்கள் சிறிது காலத்திலேயே காணமல் போகிறார்கள். பாரதிராஜா, திரைக்கதை மன்னன் பாக்கிய ராஜ், இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மற்றும் பாலு மகேந்திரா போன்றவர்கள் இருந்த தமிழ் சினிமாவில் அட்லீ போன்றோரும் தொடர்ந்து பயணிப்பது, மேற்கூறிய இயக்குனர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் வெட்கக்கேடு. மேலும் மேற்போந்த இயக்குனர்கள் இன்றும் மக்கள் மனதில் இருப்பது, காலத்தால் அழியாத அவர்களின் தனித்துவமான படைப்புகளால்தான். அட்லீ உங்களால் முடியாவிட்டால் நல்ல கலைஞர்களுக்கு ஒதுங்கி வழி விடுங்கள். 

A:P : இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்க இந்த வலைத்தளத்தை Follow செய்யுங்கள் மேலும் உங்களது Comments மூலமாக உங்களது கருத்துக்களை சொல்லுங்கள். இது எனது எழுத்தை மேலும் மெருகூட்டவும் உதவியாக இருக்கும். நன்றி.
No comments

//]]>