Related posts

Breaking News

கஜா வாராண்டா

நேற்றைய பஸ் பயணத்தில் கிடைத்த உன்னதமான அனுபவத்தை பற்றிய பகிர்வு

வழக்கமாக புதுப்படங்களை பஸ்ஸில் போட்டாலே தூக்கம் வந்துவிடும்.நேற்று நமது கேப்டன் விஜய்காந்தின் கஜா படத்தை திரையிட்டார்கள்.லேசாக தூக்கம் எட்டிப்பார்க்க,ஓட்டுனர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை,அத்தனை ஸ்பீக்கர்களையும் மேக்சிமம் வொல்யுமிற்கு ஏற்றிவிட்டார்.பின்னர் நடந்தவைகளைலெல்லாம் வேற லெவல்.

ஓப்பனிங் சீன்,சண்டை காட்சி.புரட்சி கலைஞர் தனது மீசையை முறுக்கி விட எதிரில் நின்றவன் காதாதூரம் போய் விழுந்தான்.சட்டென வாந்தி வரவே ஜன்னலை திறக்க பார்த்தேன்,அதுவேறு கர்டன் துணியில் மாட்டிக்கொண்டு திறக்க மறுக்கவே வந்ததை கட்டுபடுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானேன்.

அதில் ஒரு இடத்தில்,கேப்டன் தடுத்தும் அவரது கை தானாக எதிரியை அடிக்கிறது.Alien hand syndrome எனப்படும் நோயை முதன் முதலில் கையாண்டது "பீச்சாங்கை" எனப்படும் படம் என் கேள்விபட்டிருந்தேன். ஆனால் பல வருடங்களுக்கு முன்னரேயே இந்த படத்தில் அதை அறிமுகம் செய்துவிட்டார்கள்.

அடுத்து லூஸு ஹீரோயினின் அறிமுகம்.அந்த அம்மாக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. சிவனே என பண்டா குட்டியாட்டம் படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் கேப்டனின் மேல் 'தொபுக்கடீர்' என விழுகிறார். கட்டில் உடைந்து நம் காதுகளிலும் ரத்தம் வருகிறது.
இன்னொரு லூஸூ ஹீரோயினையும் காட்டுகிறார்கள். ஆனால் பாருங்கள், கதைப்படி உண்மையிலேயே அந்த ஹீரோயின் லூஸூதான்.

எங்கே ஓடுகீறீர்கள், இதுக்கே இப்படினா இத விட ஒரு ஷ்பெல் ஐடம் இருக்கு பாஸ்."கஜா வாராண்டா" என்ற அற்புதமான சொவ்ட் மெலடியை அதிகாலை ஒரு மணிக்கு(ஆமாம் 01.00 AM) கேட்டுப் பாருங்கள்(ஃவுல் சவுண்டில்).என் நிலைமை புரியும்.நான் அடைந்த மகோன்தமான அனுபவத்தை நீங்களும் பெறலாம்.

அதுவும் கிளைமேக்ஸில், வயிற்றில் வாங்கிய கத்தி குத்து காயத்தின் மீது மண்ணை பூசிக் கொண்டு எதிரியை அழித்தொழிப்பார் அண்ணன். இதையெல்லாம் தமிழில் வர்ணனை செய்ய வார்த்தைகள் லேது.

படத்தில் கவனிக்கதக்க ஒரே விஷயம், தோருக்கு மியோலினர் போல கஜா தன்கென்றே வைத்திருக்கும் அந்த ஆயுதம். அது மட்டும் என் கையில் கிடைத்திருந்தால் டீவி தெரித்திருக்கும்.

நீங்களும் இந்த உயரிய அனுபவத்தை பெற விரும்பினால்,பேருந்து நிறுவனத்தின் தொ.பே எண்ணை தருகிறேன். படத்தின் ஒரிஜினல் டீ.வி.டீ அவர்களிடம் உள்ளது,வாங்கி பாருங்கள்.மறக்காமல் திருப்பி கொடுத்து விடுங்கள். ஏனெனில்,இதை போன்ற கலைப் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவையாகும்.

பின்குறிப்பு: விஜய்காந்த் என்ற மனிதர் உண்மையிலே தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பல நல்ல வெற்றி படங்களை கொடுத்தவர்.குறிப்பாக 80',90' களில் ரஜினி,கமலுக்கே சரியான போட்டியளித்திவர்.அவ்வளவு ஏன் இறுதியாக வந்த "எங்கள் அண்ணா" என்ற நகைச்சுவை படத்தின் நகைச்சுவை பகுதிகள் மற்றும் ரமணா ஆகியவை All time entertainers எனலாம்.இவரது நடிப்பை கிண்டல் செய்பவர்கள் 'நூறாவது நாள்','ஊமைவிழிகள்' (அசத்தியிருப்பார்) மற்றும் 'வைதேகி காத்திருந்தாள்' போன்ற திரைபடங்களை ஒருமுறையேனும் பார்க்கவும்.

சுரேஷ் கிருஷ்ணா("பாட்ஷா" படத்தின் இயக்குனர்) தான் இந்த படத்தின் இயக்குனர்.அதே பாட்ஷா கதை+விஜய்காந்தின் அரசியல் வசனங்கள் மற்றும் வெற்று ஹீரோ பில்டப்புக்கள் என்பன படத்தை தரைமட்டமாக்கிவிட்டது.

மேலும் விஜய்காந்த் இயல்பிலேயே தைரியசாலி.ஜெயலலிதா- கருணாநிதி காலத்திலேயே அரசியலில் நுழைந்து வெற்றியும் பெற்றவர். இருந்தாலும் "குடி" என்னும் வஸ்து ஒரு மனிதனை எப்படியெல்லாம் பொசுக்கிபோட்டுவிடும் என்பதற்கு இவரின் வாழ்க்கையும் ஒரு சான்று.No comments

//]]>