Related posts

Breaking News

Guardians of the Galaxy: The Telltale Series



Telltale game seriesகள் விளையாடியுள்ளீர்களா,ஆஹா ஓஹோ என்ற கிராஃபிக்ஸ் எல்லாம் இவர்கள் வெளியிடும் கேம்களில் எதிர்பார்க்க முடியாது,இவர்களது தனித்தன்மையே ஸ்டோரி லைன்தான்.நமது ரசனைக்கு ஏற்றாற்போல் தெரிவுகளை மேற்கொண்டு நமக்கு பிடித்தமான விதத்தில் நகரும்படியான Tailor-Made கதைகளைக் கொண்ட கேம்களை உருவாக்கும் நிறுவனம்தான் இந்த Telltale.

அண்மையில் இவர்களது வெளியீடுகளில் ஒன்றான் கார்டியண்ஸ் ஒஃப் த கலக்ஸி கேமினை விளையாட நேர்ந்தது.கிட்டதட்ட ஒரு திரைப்படம் பார்ப்பது போல்தான் இருந்தது.கண்ட்ரோல்களும் மிகக்கடினமாக இல்லை.கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் முதற்கொண்டு கதையோட்டம் வரை நாமே தெரிவுசெய்து விளையாடாலாம்.கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான கேமிங் அனுபவமாக இருந்தது.


கதைப்படி,நோவா கோர்ப்ஸ் இடமிருந்து GoG குழுவிற்கு அவசர அழைப்பொன்று வருகிறது.தானோஸ் தங்களை தாக்கிக்கொண்டிருப்பதாகவும் விரைந்து வந்து உதவுமாறும் அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.இதன்படி பீட்டர்,ராக்கெட்,கெமோரா,ட்ராக்ஸ் மற்றும் கூருட் ஆகிய ஐ நாயகர்களும் தானோஸை தேடி புறப்படுகின்றனர்.தானோஸை இவர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே நோவா கோர்ப்ஸ்களை அவன் கொன்றுவிடுகிறான்.பின்னர் GoGயுடன் நடக்கும் மோதலில் ராக்கெட்டின் ஆயுதத்தின் உதவியுடன் தானோஸ் வீழத்தப்படுகிறான். மோதலின் பின்னர் தானோஸ் வசமிருந்த Eternity Forge எனப்படும் சக்தியை GoGயினர் மீட்கின்றனர்.

தானோஸை வீழ்த்தி வெற்றிபெற்றதை கொண்டாட நோ வெயார் (Knowhere) என்ற பகுதிக்கு செல்லும் இவர்கள் அதன்பின் சந்திக்கும் சம்பவங்களும் சவால்களும்தான் கதையாக நீள்கிறது.

தொடக்க அத்தியாயமே தானோஸின் தோல்வியுடன்தான் தொடங்குகின்றது என்பதால் அடுத்து கதை எவ்வாறு நகரப்போகிறது என்ற ஆர்வம் மேலெழாமல் இல்லை.

முதலில் குறிப்பிட்டது போலவே நிறைய கண்ட்ரோல்களை கொடுத்து நம்மை விழிபிதுங்க செய்யவில்லை.அதனால் கேமுடன் இலகுவாக ஒன்றிவிடமுடிகிறது.

ஆன்ராய்ட் மற்றும் IOS ஆகியவற்றிலும் இதனை நிறுவி விளையாடமுடியும்
மார்வலின் கார்ட்டியன்ஸ் ஒஃப் த கலக்ஸி கதாபாத்திரங்களைப் பற்றி தெரிந்தவர்களும் வித்தியாசமான கேமிங் அனுபவத்தை உணர விரும்புவர்களும் இதனை விளையாடி பார்க்கலாம்.

2 comments:

//]]>