Related posts

Breaking News

Pretty Little Liars


நள்ளிரவு நேரம்,சுற்றிலும் நிசப்தம்.இருள் போர்த்திய ஒரு குடிலில், ஆரியா,ஹண்ணா,எமிலி,ஸ்பென்ஸர் மற்றும் எலிசன் ஆகிய ஐந்து கல்லூரி நண்பிகளும் ஆழந்த உறக்கத்தில் இருக்கின்றனர்.திடீரென துயில் கலையும் எலிசன் குடிலிக்கு வெளியே செல்கிறாள்.மணித்துளிகள் கரைகின்றன.கண்விழித்து பார்க்கும் ஏனைய நால்வரும் எலிசனை காணாததையடுத்து அவளை தேடி செல்கின்றனர்.ஆனால் அவர்களால் அவளை கண்டிபிடிக்க முடியவில்லை.அவள் திரும்பவும் வரவில்லை.

நாட்கள் சுழன்றோடுகின்றன.
ஆரியா ஐஸ்லாந்திலிருந்து மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்ப வருகிறாள்.ஐஸ்லாந்தில் அவளுடன் நண்பனாகிய அதே ஆடவன் இங்கே அவளது கல்லூரியில்  ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டிருப்பதை கண்டு ஆச்சரியம் அடைகிறாள்.அவ்வாசானுக்கும் அந்நிலைமையே.அதேநேரம் தனது அம்மாவை ஏமாற்றிய காரணத்திற்காக தந்தை மீது அதிருப்தியாக இருக்கிறாள் ஆரியா.

ஹன்னா நடுத்தர குடும்பத்தில் வாழ்ந்தாலும் அவளது அதீத ஆசைகளும் பழக்கவழக்கங்களும் அவளையும் அவளை சுற்றி உள்ளவர்களையும் பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றன.

எமிலியின் பக்கத்துவீட்டிற்கு புதியதாக மாயா எனும் பெண் குடிவருகிறாள்.எமிலியும் அவளும் விரைவிலேயே நண்பிகளாகின்றனர்.

ஸ்பென்சர் எப்போதும் போலவே உறுதியற்ற முடிவுகளோடு வாழ்க்கையை கொண்டு செல்கிறாள்.

இவ்வாறான சமயத்தில்தான் அலிசனின் சடலம் கிடைக்கப்பெறுகின்றது.அதே நேரம் ஏனைய நால்வரது தொலைபேசிகளுக்கும் ஒரு குறுஞ்செய்தியும் வருகிறது."உங்களது இருண்ட ரகசியங்களை நான் ஒவ்வொன்றாக வெளிக்கொணர்வேன்-இப்படிக்கு A" என்பதை போலமைந்த அக்குறுஞ்செய்தியை கண்டு அவர்கள் திடுக்கிடுகின்றனர்.


தொடர்ந்து இந்நால்வரினது வாழ்க்கையிலும் நடந்த ஒவ்வொரு ரகசியங்களும் Aயினால் பொதுவில் திரைநீக்கப்படுகிறது.இவ் இக்கட்டான சூழலை அந்நால்வரும் எப்படி கையாளுக்கின்றனர்.A என்பது யார்?தமது உற்ற தோழியான அலிசனை கொன்றவர்களை/னை/ளை இவர்கள் கண்டுபிடித்தனரா?என்பதே 22 அத்தியாயங்களை கொண்ட இத்தொடரின் நீட்சியாகும்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிதுபுதிதாக அடுக்கடுக்காக கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டே செல்கின்றன.ஆனால் அவ்வனைவரையும் நம்மால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடிவது அதிசயமே.22 எபிசோட்கள் என்பதால் சில சம்பவங்களை நீளமாக்கி காட்சிபடுத்தியுள்ளது போல் தோன்றினாலும் ஒவ்வொரு அத்தியாத்தின் இறுதியிலும் புதிதாக ஒரு முடிச்சை இட்டு அடுத்த அத்தியாயத்தை பார்ப்பதற்கான ஆவலை தூண்டுவதில் வெற்றிபெற்றுவிடுகின்றனர் தயாரிப்பு குழுவினர்.

சாரா ஷெப்பர்ட் எழுதிய இதே பெயரிலமைந்த நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்தொடரை மேம்படுத்தியவர் ஐ.ம்.கிங்க்(Ina Marlene King) என்ற பெண்மணியாவார்.

இருபத்திரண்டு நாட்களுக்கேனும் அழுகைராணி தொடர்களை ஓரங்கட்டிவிட்டு இவ் அழகிய பொய்யர்களை பின்தொடரலாமே.

A:P:-இதன் 7வது சீசன் Z cafeல் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.இதுவே இத்தொடரின் இறுதி பருவம் என தயாரிப்புகுழுவினர் அறிவித்துள்ளனர்.

2 comments

Unknown said...

இதன் இறுதிப்பாகம் வெளிவந்து விட்டது... பார்த்தாகியும் விட்டது!!! ஏறக்குறைய இதன் அனைத்து சீசன் எபிசோடுகளையும் பார்த்திருக்கிறேன்!!!
ஒருதடவைக்கு மேல......புது புது கதாபாத்திரங்களின் அறிமுகத்தால் கடுப்பானது என்னவோ உண்மை!! ஆனால் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு எபிசோடுகளின் இறுதியில் வைக்கப்படும் ட்விஸ்ட்களுக்கு எப்படி பதில் அளிக்க போகிறார்கள் என்பதற்காகவே இதன் இறுதி சீசீனை பார்த்தேன்!!
ஓரளவு, அதற்கான நியாயம் இருந்திருந்தது!!!
கண்டிப்பாக பார்க்கலாம்!!!!

Kavind Jeeva said...

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி நண்பரே

//]]>