Related posts

Breaking News

கேப்டன் அமெரிக்கா:உள்நாட்டுப் போர்-முன்னோட்டம்(Captain America:Civil war-Sneak peek)


பிரமாண்டமென்பதற்கு இருப்பிடம்தான் ஹாலிவுட்.அப்பேர்பட்ட ஹாலிவுட் திரையுலகமே ஒரு பிரமாண்டத்திற்கு காத்திருக்கிறது எனின்,அது நிச்சயமாக மார்வெல் திரையுலகம் வெளியிடும் கேப்டன் அமெரிக்கா திரைதொடரின் மூன்றாம் பாகத்திற்குதான்.ஆரம்பத்தில்(2011ம் ஆண்டில்)கேப்டன் அமெரிக்காவின் முதலாவது பாகம் வெளிவந்திருந்த போது அது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெற்றிருக்கவில்லை.எனினும் சந்தைப்படுத்தல் தந்திரங்களால் இப்படம் வெற்றிப்படமாக்கப்பட்டது.பின்னர் அவென்ஜர்கள் படம் மூலம் கே.அ கதாபாத்திரம் சற்றே தூக்கி நிறுத்தப் பட்டபின் வெளிவந்த படம் தான் இரண்டாம் பாகமான கேப்டன் அமெரிக்கா:விண்டர் சோல்ஜர்.கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் கதை போல இதன் திரைக்கதை எழுதப்பட்டிருக்கும்.பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகி பாரிய வெற்றியினைப் பெற்றிருந்தது.இப்படத்தில் கே.அ தனது நண்பன் பக்கியை எதிர்ப்பது போல் கதை அமைந்திருக்கும்.இதற்கான திரைக்கதையை கிறிஸ்டோபர் மார்க்கஸ் மற்றும் மெக்ஃவீலி ஆகியோர் அமைத்திருந்தனர்.இக்கூட்டணியையே அடுத்த பாகத்திற்கும் திரைக்கதை எழுத ஒப்பந்தம் செய்து விட்டனர் மார்வெல் குழுவினர்.மூன்றாம் பாகத்தில் பக்கியுடன் சேர்ந்து சாகஸம் புரிவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.சிற்சில காட்சிகளில் மட்டும் டொனி ஸ்டார்கை இடம்பெற வைக்கலாம் என தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.பின்னரே, படம் முழுவதிலும் பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாக அவரது  பாத்திரம் அமைக்கப்பட்டது

கதை

உலகை பல்வேறு இன்னல்களில் இருந்து காப்பாற்றியவர்கள்தான் அவெஞ்சர்கள்.ஆனாலும் பாரிய சேதங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்புக்களுக்கும் இவர்களே காரணமாயிருக்கிறார்கள்.அவெஞ்சர்களின் முதல் பாகத்தில் வேற்றுகிரக சகோதரர்களான தோர் மற்றும் லோகிக்கிடையிலான சொந்த சண்டையால்தான் லோகி பூமிக்கு வருகிறான்.நியுயோர்க் நகரமே அழிவுக்கு அருகாண்மையில் சென்று மீள வருகிறது.அவெஞ்சர்களின் இரண்டாம் பாகத்தில் செக்கோவியா தேசம் முழுவதும் உருகுலைந்து போகிறது.இதற்கு அடிப்படை காரணம் அவர்களேதாம்.
இதனால் அரசாங்கம் புதியதொரு சட்டமொன்றை அமுலுக்கு கொண்டு வருகிறது.இதன் மூலம் அசாதரண மனித திறன் உள்ளவர்கள் விஷேடமாக கண்காணிக்கப்படுவார்கள்.அவர்கள் அனைவரும் தங்களைப் பற்றிய விபரங்களை அரசுக்கு ஒப்படைக்க வேண்டும்.அரசுடன் இணைந்து அவர்களது ஆணைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்.இவ்விதிமுறையை டொனி ஸ்டார்க் மற்றும் சிலர் ஏற்கிறார்கள்.ஆனால் ஸ்டீவ் ரோஜர்ஸ் எதிர்க்கும் அதேவேளை அரசினால் கொல்லப்பட இருக்கும் தனது நண்பன் பக்கியை தப்புவிப்பதுடன் தானும் தப்பி தலைமறைவாகிறார்(புதிய சட்டக்கோவைக்கு ஏற்ப பக்கியை கொல்வதற்கு அரசு உத்தரவு அளித்துள்ளது).அத்துடன் தன்னைப் போலவே சட்டத்தை ஏற்க மறுக்கும் சில சூப்பர் ஹீரோக்களையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறார்.அரசுடன் இணைந்த அயன் மேன்,பிளெக் விடோ,பிளாக் பென்தர் ஆகியோர் பிறிதொரு அணியாக இணைகின்றார்கள்.இவ்விரு குழுக்களுக்கும் இடையில் நடக்கும் மோதல்களே அதாவது யுத்தமே சிவில் வார்.


படத்தின் சிறப்பு என்னவெனில் நமக்கு பிடித்தமான பல சூப்பர் ஹீரோக்கள் தோன்ற இருக்கிறார்கள்.Ant-Man எனப்படும் எறும்பு மனிதன்,பிளாக் பென்தர் மற்றும் இறுதியாக டிரைலரில் பார்த்து (என்னை) விசில் போட வைத்த ஸ்பைடர் மேன் இன்னும் பலரை ஒன்றாக காணக்கிடைக்கும் வாய்ப்பு கிட்டவிருக்கிறது.#TeamCaptainAmerica மற்றும் #TeamIronman என Hashtagகளை கிரியேட் செய்து நம்பர் #1 டிரெண்டில் இருக்க வைத்துள்ளனர் ரசிகர்கள்.படம் வெளியாக இரண்டே மாதங்கள் இருக்கும் நிலையில் இவ்வாரம் வெளியான டிரைலர் படத்திற்கான எதிர்பார்ப்பை உச்ச கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.இப்பொழுது கேள்வியெல்லாம் ஒன்றுதான்.நீங்கள் எந்த அணியை தெரிவு செய்ய போகிறீர்கள் என்பதுதான்.

No comments

//]]>