Related posts

Breaking News

Batman vs Superman:Dawn of Justice(பேட்மேன் எதிர் சூப்பர் மேன்:நீதியின் விடியல்) விமர்சனம்முன்னோட்டத்தைப் படிக்க:BvS sneakpeek

நம்ம ஊரில் ரஜினி,கமல்,அஜித் படத்திற்கெல்லாம் கூட்டமாக நிற்கும் காலம் போய் தலைவர் பேட்மேன் படத்திற்கு கூட்டம் அள்ளுகிற காலம் வந்து விட்டது போலும்.நல்லவேளை பெரிதாக சனம் வந்திருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் கடைசி நேரம் போகவில்லை.ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஆஜராகி விட்டதால் இலகுவாக டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளமுடிந்தது.கையில் திணிக்கப்பட்ட 3D கிளாஸுடன் உள்ளே சென்று அமரந்தால் 
முதலில் சில விளம்பரங்கள்

பல விளம்பரங்கள்

ஜங்கிள் புக் டிரைலர்

இன்னும் கொஞ்சம் விளம்பரங்கள்

படம் தொடங்குகின்றது

பேட்மேன் உருவாவதற்கு காரணமான அதே விடயங்கள் சிற்சில வித்தியாசங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது.அவ்வப்போது தனது தாய் மார்த்தா பற்றிய கனவுகள் புரூஸை வாட்டுகின்றன. 
மேன் ஒஃவ் ஸ்டீல் படத்தின் இறுதி நிமிட சண்டைக்காட்சிகளுடன் அட்டகாசமாக மூலக்கதையுடனான படம் ஆரம்பமாகிறது.அந்த படத்தில் பார்க்க போர் அடித்த அதே காட்சிகள் இங்கு மாறுபட்டதொரு கண்ணோட்டத்தில் காட்டப்பட்டுள்ளதால் ரசிக்கும் படியாக உள்ளன.சூப்பர் மேனுக்கும் ஜெனரல்.ஸாட்டிற்கும் இடையேயான மோதலால் மெட்ரோபோலீஸ் நகரமே தரைமட்டமாகி விடுகின்றது.தனக்கு வேண்டப்பட்ட ஒருவரை மீட்பதற்காக செல்லும் ப்ரூஸ் வெய்ன்,அந்நபரை காப்பாற்ற முடியாமலும் நகரிற்கு ஏற்பட்ட அழிவைத் தடுக்க முடியாமலும் வெறுங்கையோடு திரும்புகிறார் ஆனால் மனதில் மட்டும் சூப்பர்மேன் மீது வெறுப்பும் கோபமும் ப்ரூஸுக்கு ஏற்பட்டுவிடுகிறது.பதினெட்டு மாதங்களுக்கு பின்னர்...
நகரமே அழிவதற்கு காரணமாக இருந்த சூப்பர்மேனிற்கு நகரின் மத்தியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.நகரின் முக்கிய புள்ளியும் லெக்ஸ் கோர்ப்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான லெக்ஸ் லூதருக்கு ஒரு அபூர்வமான பாறை கிடைக்கப்பெறுகின்றது(கிரிப்டான் கிரகத்தில் இருந்த பூமியில் வீழ்ந்த பாறை).இப்பாறைக் கனிமத்தை இறந்த ஜெனரல்.ஸாட் மீது பிரோயோகித்து பார்ப்பதன் மூலம் அக்கல்லானது கிரிப்டான் கிரகவாசிகளின் சக்தியை மட்டுப்படுத்தி இறுதியில் முற்றாக அழித்து விடும் என்பதனைக் கண்டுகொள்கிறான்.இதனை கைப்பற்ற பேட்மேன் முயற்சிசெய்யும் வேளை சூப்பர்மேன் அவரது முயற்சியை தடுத்து விடுகிறார்.அப்போது பேட்மேன் சூப்பர் மேனிடம்
"Do you bleed?you will" என்று கூறுவார்.இந்த காட்சிக்குதான் தியேட்டரில்  முதலாவது தடவை விசில் பறந்தது.இதேவேளையில் சூப்பர் மேன் மீதான விசாரணை முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்படுகின்றது.விசாரணைக்கான நாளும் வருகிறது.சூ.மேன் நீதிமன்றத்தினுள் நுழைக்கின்றார். சொற்ப விநாடிகளில் அக்கட்டிடமே வெடித்து சிதறுகின்றது.
                    

                   இடைவேளை                        


கட்டிடம் வெடித்து சிதறவும் காரணம் சூப்பர் மேன் தான் என அவருக்கெதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றது.இது இவ்வாறிருக்க சூ.மேனினது சக்தியை எதிரிகொள்ளும் விதமான கவச ஆடை,ஆயுதங்கள் மற்றும் அவரை கவிழ்ப்பதற்கான திட்டத்துடன் பேட்மேன் தயாராகி விடுகிறார்.தனக்குரிய பொருளை திருடி விட்டதால் பேட்மேன் மீது ஆத்திரத்தில் இருக்கும் லெக்ஸ் லூதர்,சூ.மேனினுடைய தாயான மார்த்தாவை கடத்தி விடுகிறார்.சூ.மேனை அழைக்கும் லூதர்,பேட்மேனை கொன்றால்தான் அவனுடைய தாய் திரும்ப கிடைப்பாள் என்று கூறுகின்றான்.வேறு வழியின்றி(நிறைய வழிகள் உள்ளன.நான் பிறகு கூறுகிறேன்)பேட்மேனுடன் மோதுவதற்காக சூ.மேன் புறப்படுகிறார்.ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் பேட்மேன் தன் எதிராளியை துணிவுடன் எதிர்கொள்கிறார்.கடவுளாகப் போற்றப்படும் சூ.மேனை வீழ்த்துகிறார்.அவரது முகத்தில் குருதியையும் வழிந்தோடச் செய்கிறார்(எவ்வாறு என்பதை திரையில் காண்க).இருந்தாலும் பேட்மேன் சூ.மேனை கொல்லாமல் விட்டுவிடுகிறார்(இதற்கான காரணத்தையும் திரையிலேயே காண்க).பின்னர் இருவருமாக லெக்ஸ் லூதரை எதிர்கொள்ள செல்லும் வேளை,லூதர் ஜெனரல்.ஸாட்டினது உடல் மூலம் கிரிப்டான் கிரக ஜந்துவான டூம்ஸேடேயை பூமியில் உருவாக்கி,உயிர்பித்து,தன் எதிராளிகள் மீது ஏவியும் விடுகின்றான்.சூப்பர் மேன்,பேட்மேனுடன் வொண்டர் வுமனும் சேரந்து டூம்ஸ்டேயை எதிர்கொள்வதும் இறுதியில் என்ன நடந்தது என்பதும்தான் மீதி திரைக்கதை.

இனி நம்ம ஆட்டம்...ஸ்பாய்லர்கள் எச்சரிக்கை(சொற்ப அளவிலான ஸ்பாய்லர்களே குறிப்பிடப்பட்டுள்ளது)

படத்தின் நீளம் எனக்கு பிடித்திருந்து.ஆனால் கழுத்தை சுத்தி மூக்கை தொட்ட கதையாக அல்லாமல் நேரடியாக சொல்லியிருக்கலாம்.பென் பேட்மேனாக பொருந்திப் போகிறார்.சூப்பர்மேன் கூட ஓகேதான்.ஆனால் அவரது கதாபாத்திரத்தில்தான் பல்வேறு தருக்கப் பிழைகள் காணப்படுகின்றன.ஓப்பனிங் சீனில் தன் காதலி இருக்குமிடத்தை தனது உணரிகளால் கண்டறியும் அவர்,இறுதி சண்டையின் போதும் தன் காதலி எழுப்பும் அபாய சத்தத்தைக் கேட்டறியும் அவர்,தன்னுடைய தாய் கடத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டறிய முடியாமல் பேட்மேனுடன் மோதுவதற்கு கிளம்புகிறார்.கிரிப்டான் கிரக கனிம கற்களால் அமைந்த ஈட்டியை தூரத்தில் இருந்தே டூம்ஸ்டேயின் மீது வீசி இருக்கலாம்.ஆனால் வீணாக அருகில் சென்று குத்தி,தானும் குத்து வாங்கி...வீண் வேலை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.பேட்மேனினது துரத்தலை இவர் மடக்கும் காட்சி கூட கலகலப்பு படத்தில் வெட்டுப்புலி துரத்தலில் வெட்டுக்கிளி வீணாக வந்து தலையைப்போடுவதைதான் ஞாபகமூட்டியது.

இந்த காட்சி ஞாபகமுள்ளதா..?

படம் மெதுவாகதான் நகருகின்றது.சில இடங்களில் அலுப்பூட்டவும் செய்கிறது.வேறு யாராவது ஒரு இயக்குனர் எடுத்திருந்தால் நன்றாக வந்திருக்கும் போலும்.லெக்ஸாக நடித்த அண்ணன் எய்ஸன்பெர்கினது முக பாவனைகள் ஒட்டவில்லை.ஜஸ்டிஸ் லீக் குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் பற்றி காண்பிக்கப்படுகின்ற அந்த காட்சி மொத்த அரங்கத்தையுமே தெறிக்க விட்டு விட்டது.நான் மேல குறிப்பிட்டது போல் வொண்டர் வுமன் இறுதிக்காட்சியில்தான் திடுமென வந்து குதித்தாரா என்றால்...இல்லை,ஆரம்பத்தில் இருந்து அவரது பாத்திரம் உலாவிக்கொண்டு இருந்தாலும் கதைக்கு அதனால் எந்த பயனும் இல்லை...படம் ஓகே ரகம்தான்,இருந்தாலும் அடுத்த வருடம் ஜஸ்டிஸ் லீக் வரவிருப்பதால் DC ரசிகர்களுக்கு இதனை விட ஓர் நல்ல விருந்து காத்துள்ளது..!


No comments

//]]>