Related posts

Breaking News

Oscar (2020) ஒஸ்கார் விருதும் சுவாரஸ்யமான தருணங்களும்

Oscar (2020) ஒஸ்கார் விருதும் சுவாரஸ்யமான தருணங்களும்


உலகில், சினிமாவுக்கென ஆயிரமாயிரம் விருதுகள் கொடுக்கப்பட்டாலும், அவற்றில் எல்லாவற்றிற்கும் மேலான விருதாக கருதப்படுவது ஒஸ்கார் விருதுதான். காரணம், ஹாலிவூட்டில் ஒஸ்கார் வென்றால்தான், ஒரு கலைஞன் உலக ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாக ஏற்றுக்கொள்வார்கள். ஒரு திரைப்படமோ அல்லது கலைஞனோ, ஒஸ்கார் விருது வெல்வது என்பது சாதாரண விஷயமல்ல. முழுக்க முழுக்க கலை ரீதியான திரைப்படமாகவும் அல்லாமல், அதே நேரம் கமர்ஷியல் மட்டுமேயும் அல்லாமல், இந்த இரண்டு விஷயங்களையும் மிகச் சரியான விகிதத்தில் கலந்து வெற்றி பெற்றால்தான், ஒஸ்கார் வெல்ல முடியும். 2020ம் ஆண்டுக்கான ஒஸ்கார் நிகழ்வு நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் கோலகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் முக்கியமான விருதுகளை யார் யார் எல்லாம் வென்றார்கள் என்பதைப் பற்றியும், இவ்விழாவில் என்னென்ன சுவாரஸ்யங்கள் நடைபெற்றன என்பன பற்றியும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

விருதுகளை அள்ளிய 1917

Best Visual Effectsகான விருதை 1917 என்ற படம் வென்றது. முதலாம் உலகப்போரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது போன்று படமாக்கப்பட்டது. மேலும், இவ்விருதை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஸ்னியின் The Lion King மற்றும் Avengers: Endgame ஆகியன ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. மேலும், Best Cinematography மற்றும் Best Sound Mixing ஆகிய விருதுகளையும் அள்ளிச் சென்றது 1917. போர் சூழலை ஒரே ஷாட்டில் வருவது போன்று படமாக்கியதற்காகவும், கம்புயூட்டர் கிராபிக்ஸை தேவையான இடங்களில் கச்சிதமாக பயன்படுத்தியதற்காகவும், உண்மையிலேயே போர் நடைபெறும் இடத்தில் நாம் இருந்தால் எப்படியிருக்கும் என்பதை ஒலியமைப்பின் மூலம் உணரச் செய்ததற்காகவும் 1917க்கு இவ்விருதுகள் கொடுக்கப்பட்டதாக சினிமா ஆர்வாளர்கள் கருதுகின்றனர்.

Joker is the Hero

சிறந்த நடிகருக்கான விருதை வெல்வார் என பெரும்பாலானோர் கருதிய Joaquin Phoenix, எதிர்பார்த்தது போலவே சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டார். காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் நடிப்பவர்கள் ஒஸ்கார் வெல்ல தகுதியற்றவர்களாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், 2008ல் வெளியான டாரக் நைட் படத்திற்காக Heath Ledger, ஜோக்கர் கதாபாத்திரத்திற்காக ஒஸ்கார் வென்று, அந்த நிலைமை மாற்றினார். இப்போது, அதே ஜோக்கர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த Joaquin Phoenix ஒஸ்கார் வென்றதன் மூலம் காமிக் புத்தக்கங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களில் நடிப்பவர்களும் சிறந்த நடிகர்களே என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஒஸ்கார் வென்ற பிற்பாடு இவர் ஆற்றிய உரை உண்மையிலேயே உருக்கமாக இருந்தது. தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியாதவர்களுக்காக, சினிமா என்னும் ஊடகத்தை பயன்படுத்துவதாக கருதும் Joaquin Phoenix அவர்கள், ஜோக்கராக ஏற்று நடித்த கதாபாத்திரமும் அப்படியான ஒன்றுதான். தனது வெற்றியை, பர்கர் சாப்பிட்டுக் கொண்டு தனது துணைவியாருடன் இவர் பகிர்ந்து கொள்ளும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதேவேளை, சிறந்த இசைக்கான விருதையும் ஜோக்கருக்காக Hildur Guðnadóttir என்ற இசையமைப்பாளர் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ford vs Ferrari, Milestone in Documentary Movies

பொதுவாக டாக்குமண்டரி வகையான திரைப்படங்கள், ஒஸ்காரில் சாதிப்பது குறைவு. ஆனால், இந்த முறை Ford vs Ferrari என்ற டாக்குமண்ட்ரி வகை திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் கலக்‌ஷனை அள்ளியது மட்டுமல்லாமல், ஒஸ்காரிலும் கலக்‌ஷனை அள்ளியது. Best film editing மற்றும் Best sound editing என இரண்டு விருதுகளை பெற்று பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு டாக்குமண்ட்ரி வகையான திரைப்படம் கூட சரியான முறையில் எடுக்கப்பட்டால், பணம் மற்றும் விருது, இவையிரண்டையுமே அள்ளலாம் என்பதற்கு உதாரணம்தான் இந்த Ford vs Ferrari. 

Once Upon a Time in Oscar

குவண்டின் டாரண்டினோவின் Once Upon a Time in Hollywood என்ற திரைப்படம், பெரும் எதிர்பார்ப்போடு வெளியானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனினும், இதில் பிராட் பிட் நடித்த கதாபாத்திரம் பல ரசிகர்களுக்கு பிடித்து போனது. காரணம், பிராட் பிட் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அக்கதாபாத்திரத்தை கையாண்ட விதம்தான். ஒஸ்கார் கமிட்டிக்கும் இக்கதாபாத்திரம் பிடித்து விட்டது போலும், அதனால்தான் யாரும் எதிர்பாரா வண்ணம், The Best Supporting Actor விருதை பிராட் பிட்டுக்கு அளித்துள்ளது. மேலும் Best Production Designக்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றது. 1960களின் அமெரிக்காவை அழகாக காட்டிய விதத்திற்காகவே, இதற்கு ஒஸ்கார் கொடுக்கலாம்.

More and More

மேலும், சிறந்த நடிகையாக Renée Zellwegerரும் சிறந்த துணை நடிகையாக Laura Dernனும் தெரிவு செய்யப்பட்டார்கள். அத்தோடு, Best Adopted Screenplay விருதை, தோர் 3 யின் இயக்குனர் டய்க்கா வயிட்டிடி, ஜோஜோ ரேபிட் என்ற படத்திற்காக வென்றார். மேலும், Best Animated Featured Filmமாக Toy Story 4 அறிவிக்கப்பட்டது. 

Parasite Rain


கொரிய திரைப்படமான பேரசைட் Best International Feature Film, Best Picture, Best Director மற்றும்  Best Original Screenplay என நான்கு அதி முக்கிய விருதுகளை அள்ளியது. பொதுவாக ஆங்கில திரைப்படங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் விருதுகள், ஒரு கொரிய படத்திற்கு ஏன் கொடுக்கப்பட்டது என பலரும் கேள்வியெழுப்பினாலும், கொடுத்தது கொடுத்ததுதான். மேலும், இந்த பேரசைட் படம் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான மின்சார கண்ணா என்ற திரைப்படத்தின் கதை போல் உள்ளதாக தமிழ்நாடு நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். உண்மையிலேயே பேரசைட் திரைப்படத்தில், டார்க் ஹியுமரையும் த்ரில்லரையும்தான் மெயினாக கதையில் கையாண்டிருப்பார்கள். 

Disappointments

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Avengers Endgame, ஒரே ஒரு ஒஸ்கார் விருதைக் கூட பெறவில்லை. மேலும் முழுக்க முழுக்கவே அனிமேஷனால் உருவான The Lion King, The best visual effects பிரிவிலும் தேர்வாகாமல், அதே நேரம் The Best Animated Featured Film என்ற பிரிவிலும் அவார்ட் வாங்காமல் ஏமாற்றம் அளித்தது. வரலாற்றை பொறுத்தவரை, All time best collection எனப்படும், அதிக வசூல் செய்த நம்பர் 1 படங்கள் எல்லாமே, ஏதாவது ஒரு ஒஸ்கார் சரி வென்றிருக்கும். ஆனால் இந்த முறை மட்டும்தான், அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்த எண்டகேம், ஒரு அவார்ட் கூட வெல்லாமல் ஏமாற்றம் அளித்தது. இந்த முறை, ஒஸ்காரே டிஸ்னி குழுவினரை ஒதுக்கி வைத்து விட்டார்களோ, என்று நினைக்கும்படிதான், ஒஸ்கார் விழாவே நடைபெற்றது. 


ஒஸ்கார்தான் சிறந்த விருது என உலக மக்கள் கருதினாலும், சில விருதுகளின் முடிவுகள், ஒஸ்கார் சிறந்த விருதுதானா என்னும் சந்தேகத்தை எழுப்பவும் தவறவில்லை. No comments

//]]>