Related posts

Breaking News

Batman 2021 Teaser Breakdown

வெளியானது புதிய Batman திரைப்படத்தின் டீசர்



மேட் ரீவ்ஸின் இயக்கத்தில் ரோபர்ட் பேட்டின்சன் நடக்கும் புதிய பேட்மேன் திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி அப்படத்தின் டீசரானது நேற்று யாரும் எதிர்பாராத நேரத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. வழக்கமாக படப்பிடிப்பு முடியும் தருவாயில்தான் இது போன்ற டீசர்கள் வெளியிடப்படும். ஆனால், இப்படத்தின் ஷூட்டிங்கானது இப்போதுதான் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு காரணம் உண்டு பாரப்போம்.

இந்த டீசரை புதிய பேட்மேன் படத்திற்கான ப்ரோமோஷனாக பலர் கருதினாலும் உண்மையிலேயே இந்த டீசர் வெளியிடப்பட்டதன் காரணம் அதுவல்ல. இப்படத்தின் நாயகன் ரோபர்ட் பேட்டின்சன் அவர்கள், இந்த பேட்மேன் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு தூரம் பொருந்துவார் என்பது குறித்த சந்தேகத்தை ஹாலிவுட்டிலும் சரி, இணைய வட்டாரத்திலும் சரி பலரும் எழுப்பியிருந்தனர். அதேநேரம், பேட்டிசனும் தனது உடல் எடையை அதிகரித்து கொள்ள முடியாமல் அவதிப்படுவதாகவும் ஒரு பேச்சு அடிபட்டது. 



இதனால்தான் இந்த கேமரா டெஸ்டிங் செய்த டீசரை வெளியிட்டுள்ளார்கள். இதை பார்க்கும் ரசிகர்களில் பெரும்பாலானோர், இந்த பேட்மேன் நன்றாக இல்லையென்று சொன்னார்களெனில், முன்கூட்டியே படக்குழுவினரால் மாற்றங்கள் செய்ய இயலும். இதுதான் இந்த டீசர் வெளியிடப்பட்டதற்கான முக்கிய காரணம்.


கிட்டதட்ட 40 செக்கன்களே ஓடும் இந்த டீசரில், பேட்மேன் தனது சூட்டுடன் காட்சியளிக்கிறார். இதைப் பாரக்க பேட்மேன் Arkham கேம் சீரிஸில் வரும் சூட் போல இருந்தாலும், இந்த சூட்டை முழுமையாக படக்குழுவினர் காட்டவில்லை. பேட்மேன் சிம்பளை பொருத்தவரை, பேட் ரேங் போலதான் காட்சியளிக்கிறது. உண்மையை சொல்லப் போனால், இந்த பேட்மேன் பார்ப்பதற்கு டேர்டெவில் போலதான் உள்ளதே ஒழிய பேட்மேன் போல இல்லை. அதிலும் இருள்+சிவப்பு நிற பிண்ணனி, Netflixல் வரும் டேர்டெவில் போலவே இருந்தது. மேற்கொண்டு ஏதேனும் டீசர்கள் வந்தால்தான், ரோபர்ட் பேட்டின்சன் இந்த கேரக்டரில் எந்தளவு பொருந்துகிறார் என்பதை உறுதியாக சொல்ல முடியும். இந்த டீசரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பேட்டின்சன் “பேட்”டின்சனாக எந்தளவு பொருந்துகிறார ?


No comments

//]]>