Related posts

Breaking News

வெளியானது தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் Kutty Story பாடல்

வெளியானது தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் Kutty Story பாடல்



கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம்தான் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்படத்தின் முதலாவது பாடலானது இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், கிட்டதட்ட மாலை 06.00 மணி அளவில் மாஸ்டர் படத்தின் முதலாவது பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கு Kutty Story என பெயரிட்டுள்ளனர் படக்குழுவினர். 


“கொலவெறி” பாடல் ஸ்டைலில் தமிழ் + இங்லீஷ் இரண்டும் கலந்துதான் இந்த பாடலும் எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில் விஜய் வீட்டில் ஐ.டி ரெய்டு நடந்தது ஞாபகமிருக்கலாம். அதன் பிரதிபலிப்பாக பல வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன. பின்பக்கமாக புரளி பேச கூடாது, நாமே நம்மை மோட்டிவேட் செய்ய வேண்டும் போன்ற விஷயங்கள் பற்றி இந்த பாடலில் அதிகமாக பேசப்பட்டுள்ளன. 

இப்பாடல், அனிமேட்டட் ஸ்டைலில் அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாடலின் இடையிடையே படத்தின் ஸ்டில்ஸ்களும் இடம்பெற்றுள்ளன. அத்தனையிலுமே விஜய் செம ஸ்மார்ட்டாக உள்ளார். திரைப்படத்தில் விஜய் காலேஜ் மாஸ்டராக வருவதால், மாணவர்களுக்கு கருத்து சொல்வது போல் பாடல் எழுதப்பட்டிருப்பினும், இதில் விஜய் தன் எதிரிகளுக்கு கூறும் சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளதை பாடலை கேட்கும் போதே உணர முடிகிறது. இந்த kutty story பாடலைப் பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள்? இது அனிருத்துக்கு இன்னொரு கொலவெறியாக அமையுமா? 


No comments

//]]>