Related posts

Breaking News

சலார் Salaar - திரை விமர்சனம்



Over the top action, கொஞ்சமும் நம்ப முடியாத சண்டை காட்சிகள், நிறைய logic loop holes அதை விட அதிகமாக K.G.F, இவையெல்லாம்தான் சலார் in a nutshell.
 

இதில் சொல்லும்படி நல்லாதாக எதுவுமே இல்லையா? 

கண்டிப்பாக சில நல்ல விஷயங்களும் இருக்கிறது, அவற்றையும் பார்ப்போம். Mild spoilers ahead.


தேவரதா, வரதாராஜா இருவரும் இணைப்பிரியாத நண்பர்கள், வரதாவுக்காக தன் உயிரை கூட விட துணியும் தேவா, தேவாவுக்காக தன் ராஜ்ஜியத்தையே விட்டுக் கொடுக்கும் வரதா, இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் எதிரிகள் ஆனால்? 


ஆம், கதை பழையதுதான். மகாபாரதத்திலும் இராமயணத்திலும் சொல்லப்படதா கதைகளா? எனக்கு தெரிந்து எமது புராண இதிகாசங்களிலேயே எல்லா கதைகளும் எழுதப்பட்டுவிட்டன. திரைப்படங்களை பொருத்தவரை, எழுதிய கதையை புதிதாக காட்சிப்படுத்தவதுதான் சவாலே. அதில் பாதி கிணற்றை இப்படம் தாண்டி விட்டதாகவே நான் கருதுகிறேன். 


படத்தின் முதல் ஒரு மணி நேரம், I mean first half, மிகவும் இழுவையாக இருந்தது. முதலில் காட்டப்படும் காட்சிகள் படம் பார்ப்பவர்கள், எவ்வாறான படத்தினை காணப்போகிறார்கள் என்ற மன நிலையை தயார் செய்ய வேண்டும். ஆனால் முதல் பாதி தூக்கம் வர வைக்கிறது. நான் மிகைப்படுத்தவில்லை, சத்தியமாக இடையில் கொஞ்சம் கண்ணசந்துவிட்டேன்.


புளித்து போன buildupகளை வெட்டி வீசியிருக்கலாம். ஒரு கதாபாத்திரம், தான் செய்யும் செயலை சரி வர செய்தாலே அதற்கு தானாக மவுசு அதிகரிக்கும். சிம்பளான உதாரணம் “கில்லி”திரைப்படத்தில் முத்துபாண்டியை முதற்தடவையாக வேலு கதாபாத்திரம் அடிக்கும் காட்சி. காட்சி ஊடகமான திரைப்படத்தில் வாய் முழுக்க buildup வசனங்களை பேச வைத்து எங்கள் காதுகளை செவிடாக்காமல் கண்களால் ரசிக்கக் கூடிய காட்சிகளை கொண்ட திரைப்படங்களே மனதில் நிற்கும். சலார் இங்கே சறுக்கிவிடுகிறது.


சரி, படத்தில் லாஜிக் எப்படி? 


வகை வகையான Machine Guns, ஆயிரமாயிரம் soldiers and thugs. இவர்களையெல்லாம் ஒற்றை ஆளாக அடிக்கும் KGF பாணி ஹீரோ, என துளியளவும் லாஜிக் எங்கேயும் இல்லை. 


ஒரு சில நேரங்களில் K.G.Fன் Parody படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றுகிறது. குறிப்பாக ஒரு காட்சியில், தன் மகன் கையில் பிளாஸ்டிக் கத்தி இருப்பதை பார்த்து அம்மா emotion ஆகும் காட்சி. emotionsம் இங்கு வேலை செய்யவில்லை.  



லாஜிக், எமொஷன்ஸ் தவறினாலும் படத்தின் இரண்டாம்பாதி, தியேட்டரில் எத்தனை சீட்கள் உள்ளன என எண்ணலாமா என்ற மன நிலையில் இருந்த எம்மை, சற்றே திரையையும் பார்க்க வைக்கிறது. 


குறிப்பாக One piece, Naruto என anime பாணியில் கதை சொன்ன விதம். கான்ஸார் எனப்படும் கற்பனை நாடு, அந்நாட்டில் உள்ள உப பகுதிகள், அங்கேயுள்ள குடிகள், அதற்குள்ள ராஜாங்கம், அதற்கென அரசன், பிரபுக்கள், மற்றும் குறிப்பாக அதனுடைய அரசியலமைப்பு என படத்தின் core கதையை பிரஷாந்த நீல் நன்றாகவே எழுதியுள்ளார். 


ஆனால் ஹீரோ எந்த ஒரு ஆயுதமும் இன்றி ஒற்றையாளாக எல்லோரையும் அடிப்பதை கொஞ்சம் மாற்றியிருக்கலாம். Atleast, பிரபாஸ் அவர்கள் முதலாவதாக ஒரு தலைவரை கொன்ற பிற்பாடு, கான்ஸார் அரசியலமைப்புபடி இறந்த தலைவரின் படைகள், அவரை வீழ்த்தியவரின் படைக்கு கீழ் செல்லும் என்றாவது திரைக்கதைக்குள்ளேய சில் அம்சங்களை எழுதியிருக்கலாம்.


படத்தில் ஒரு கட்டத்தில் Zombies போன்ற மனிதர்கள் தாக்க வரும் காட்சி, கான்ஸாரில் உள்ள வித்தியாசமான நிலப்பரப்புகளை காட்டும் காட்சிகள் போன்றவை நல்ல முயற்சியே. 


இசை, K.G.Fற்கு இசையமைத்த அதே இசையமைப்பாளர், ஆனால் K.G.F இருந்த அந்த பிரமாண்ட இசை இங்கே மிஸ்ஸிங். பாடல்களும் சரி, பிண்ணனி இசையும் சரி, வெற்று சத்தங்காளாவே இருந்தன, இசையை காணவில்லை கேட்கவில்லை. 


முதல் பாதியின் நீளத்தை சுருக்கி, வெட்டி பில்டப்களை நீக்கி விட்டு, உண்மையாக மனிதர்கள் எவ்வாறு உணர்வுகளை வெளிப்படுத்துவார்களே அந்த அளவு எமோஷன்ஸை மாத்திரம் வைத்து, திரைக்கதைக்குள்ளேயே லாஜிக் ஓட்டைகள் வராமல் அடைத்து, இந்த படத்தை வெளியிட்டிருந்தால், KGFஐ விட நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

No comments

//]]>