Related posts

Breaking News

The லயன் Magnum Special(புக் No.1)


வணக்கம் நண்பர்களே,

இன்று நாம் பார்க்கபோவது 9 கதைகள்,900+பக்கங்கள் இன்னும் சிறப்பாக சொல்வதானால்  லயனின் 30வது ஆண்டு மலர் என்று பல தோரணைகளுடன் வெளிவந்திருக்கும் The லயன் Magnum Special பற்றியே...

The லயன் Magnum Special(புக் No.1)

அட்டை படத்தில் அசத்தும் கம்பீரமான டெக்ஸில் இருந்து ஜொலிக்கும் எழுத்துக்கள் வரை அனைத்துமே பிரமாதமாக உள்ளது.அது மட்டுமில்லாமல் hard cover சிந்தனை பலே பலே...வழக்கம் போல புத்தகத்தை திறந்தவுடன் எடிட்டரின் ஹாட்லைன்(நான் முதலில் விரும்பி படிப்பது இதையே).மொத்தம் இதில் 6 கதைகள் உள்ளன(எடிட்டரின் ஹாட்லைனில் உள்ள LMS உருவான கதையையும் சேர்த்தால் 7 கதைகள்).

 சட்டம் அறிந்திரா சமவெளி

வண்ணதமிழில் வெளிவரும் டெக்ஸின் முழு நீள கதை இதுவாகும்.வழக்கம் போல அநியாயம் குடி கொண்டிருக்கும் பகுதியில் தன் நண்பர்களுடன் தூசி தட்ட செல்கிறார் டெக்ஸ்.முன்னாடி யார் வந்து நின்றாலும் கருணையே காட்டாமல் வள்ளல் போல் 'டிஷ்யும் டிஷ்யும்'களை வாரி வழங்குகிறார்  மனிதர்(இது மட்டும் இல்லாமல் கிட்டை சோதனை செய்ய வருபவனுக்கு கிட் விடும் குத்து இருக்கே எனக்கு மூக்கு வலிக்குது)

வழக்கமான கதையாக இருந்தாலும் மிளிரும் வண்ணமும்  எடிட்டரின் சொற்சிலம்பும் கதையை தூக்கி நிறுத்துகின்றன.

 அந்தி மண்டலம்

டைலன் டாக்கின் முதல் தமிழ் பிரவேசம் தான் அந்தி மண்டலம்.மரணபடுக்கையில் உள்ள ஒரு மனிதரை வசியம் செய்வதன் மூலம் மரணமும் வாழ்வும் அற்ற ஒரு அந்தி மண்டலதில் வாழவைக்கலாம் என்பதே கதையின் மூலம்.டைலன் டாக்கிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.ஒரு பெண் அழைப்பு விடுகிறாள்.டைலன் டாக்கும் அவரின் உதவியாளரும் அப்பெண்ணை காண செல்கின்றனர்.போகும் வழியில் கடல்  வழி பாதையை பயன்படுத்த வேண்டி இருப்பதால் ஒரு படகோட்டியின் உதவியை நாடுகின்றனர்.அவ்வேளையில் ஒரு பெண் கடலில் தத்தளிப்பதை காணும் டைலன் அப்பெண்ணை காப்பாற்ற முயல்கிறார்,அவருக்கு கிடைப்பது அப்பெண்ணின் பிரெஸ்லட் மட்டுமே.அதில் பொரிக்கபட்டுள்ள பெயரை கொண்டு அப்பெண்தான் தன்னை தொலைபேசியில் அழைத்தவள் என்பதை அறிந்து கொள்கிறார்.அவள் இருப்பிடத்தை தேடி கண்டு பிடித்து அவளின் வீடு சென்று  அப்பெண்ணின் அன்னையிடம் விஷயத்தை சொல்கின்றனர்.அவர்களை "மேற்பகுதி அற்றவர்களோ?"என பார்க்கும் தாய் உள்ளே அழைத்து சென்று உறங்கும் தன் பெண்ணை காட்டுகிறாள். டைலன் டாக்கும் அவரின் உதவியாளரும் அதிசயிகின்றனர்.அவள் உயிரோடு இருப்பது எப்படி?தன்னிடம் என்ன சொல்லவந்தாள்?என்பதை அறிவதே மீதி கதை.கதை நன்றாக இருப்பினும் அதை present செய்துள்ள விதம் நன்றாக அமையவில்லை.ஓவியங்கள் நன்றாக இருக்கினறன.வேறு ஏதும் பெரிதாக சொல்வதற்கு இல்லை.(எல்லாம் சரி கதைல டைலன் மட்டும் வராரு டாக் எங்க?).

C.I.D ராபின் துப்பறியும் நிழல்களின் நினைவுகள்

வித்தியாசமான வண்ணக்கலவையோடு செதுக்கப்பட்டுள்ள கதை.

தம் பூர்வீக கிராமத்தில் வாழும் தன் பெரியப்பா இறந்து விட்டதால் அக்கிராமத்திற்கு வருகை தருகிறார் ராபின்.தன் பெரியப்பா திருடர் குழுவால் தாக்கபட்டே இறந்தார் என்னும் காரணத்தை ஏற்க மறுக்கும் ராபின் உண்மை காரணத்தை துப்பறிவதே கதை.வழக்கம் போல அவர் துப்பறிவதற்கு முன்னரே காரணம்,காரணகர்த்தாக்களை நாம் கண்டுபிடித்து விடுகிறோம்.தனித்து பார்க்கும் போது நெருடலாக உள்ள வண்ணகலவை கதையுடன் சேர்த்து பார்க்கும் போது நன்றாக உள்ளன.ஆக மொத்தம் 'ஈன்ஸ்மென்ட்' கலரில் படம் பார்த்த உணர்வு.

கட்டத்தில் ஒரு வட்டம்

 புதிர் அரங்கத்தினுள் சிக்கித்தவிக்கும்  தனது நண்பியை காப்பாற்ற அதை விட கொடிய புதிர் அரங்கத்தினுள் மார்டின் சென்று வருவதே 'கட்டத்தில் ஒரு வட்டம்'.கதை,அதை சுவாரசியமாக சொல்லியுள்ள விதம்,ஓவியங்கள் என அனைத்துமே சிறப்பாக வந்துள்ளன.

                    

க்ரிமினாலஜிஸ்ட் ஜூலியா துப்பறியும் விண்வெளியில் விபரீதம்...!  

ஜூலியா பயணம் செய்யும் விமானம் இருவரல் Hijack செய்யப்படுகிறது.ஏன் அவ்விமானம் கடத்தப்படுகிறது?பயணிகளையும் விமானத்தையும் ஜூலியா மீட்டரா?என்பதே மீதி கதை.எனக்கு தெரிந்தவரை அறை வாங்கியதை தவிர Highlightக ஜூலியா ஒன்றுமே செய்யவில்லை.ஓவியங்கள் okay ரகம்.

இறந்தகாலம் இறப்பதில்லை 

இறந்தகாலம்
பெர்லின் நகரின் மதில்சுவர் இடிக்கப்படும் நேரம்.கர்ப்பிணி தாய் ஒருவர்,பிரசவ வலி எடுக்கும் நேரத்தில் அவர்  கணவர் கொல்லப்படுகிறார்.
நிகழ்காலம்
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் இளைஜன் கொலை முயற்சிக்கு உள்ளாகிறான்.

இரு நிகழ்வுகளும் இணைக்கப்பட்டால் அதுவே 'இறந்தகாலம் இறப்பதில்லை'.சுமாரான கதை.ஓவியங்கள் கதைக்கு ஏற்றார் போல் வரையப்பட்டுள்ளன.
ஓகே ப்ரண்ட்ஸ் Bye,வழக்கம் போல குட்டுகளையும் Goodகளையும் அளிக்க மறந்துடாதீங்க..! 
                                                                 Thanks..!

4 comments

P.Karthikeyan said...

//எல்லாம் சரி கதைல டைலன் மட்டும் வராரு டாக் எங்க?//

//'ஈன்ஸ்மென்ட்' கலரில் படம் பார்த்த உணர்வு//

:D

சுருக்கமான அதேசமயம் சுவையான அலசல்!

mayavi.siva said...

உங்கள் பதிவுகள் நன்றாக தான் உள்ளது ! நான் தான் சோகத்தில் இருக்கிறேன் நண்பரே...
காரணம் செப்டம்பர் மாத புக்ஸ் கைக்கு வரவில்லை,fb & எடிட்டர் ப்ளாக்கில் சென்று பாருங்கள் புலம்பல்களை...!

Kavind Jeeva said...

வரும் ஆனா வராது,
செப்.இதழ்கள் இங்கு அக்டோபரில் தான் வரும் என்பதால் எனக்கு கவலை இல்லை!!!

Unknown said...

அருமை. தொடர்ந்து எழுதுங்க.

//]]>