Related posts

Breaking News

சிறந்த பாடல்கள் 2019



தமிழ் மொழியில் அருமையான கவிதைகளுக்கும் இனிமையான பாடல்களுக்கும் என்றுமே பஞ்சமில்லை. காலையில்  எழும்ப பூபாளம் முதல் இரவு கண்ணுறங்க தாலாட்டு வரை, பாடல்களானது தமிழர் வாழ்வியலில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. தமிழில் சினிமாக்கள் வர தொடங்கிய காலத்திலிருந்தே நல்ல சங்கீதங்கள் வந்துக் கொண்டுதான் இருந்தன. ஆனால் இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான இசையமைப்பாளர்களுக்கு சங்கீத ஞானம் அறவே இல்லை, அதனால் பாடல்களிலும் உயிர்ப்பு இல்லை. நல்ல இசை மற்றும் இன்றைய கால ரசனை இவையிரண்டையும் அடிப்படையாகக் கொண்டு சென்ற ஆண்டில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற சிறந்த பாடல்களை பற்றி அலசுகிறது இந்த கட்டுரை.

போன பொங்கலை சிறப்பாக துவங்கி வைத்தது, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்களின் பேட்ட திரைப்படம்தான். இந்த படத்தின் பாடல்கள் எல்லோமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் குறிப்பாக “மாஸ் மரணம்” பாடல். இந்த ஒரே பாடல் மூலம் ஹேட்டர்சையெல்லாம் லைக் போட வைத்தார் அனிருத். “அபூர்வ ராகங்கள” காலத்து ரஜினி ரசிகர்களில் இருந்து சின்னஞ்சிறுகள் வரை இந்த பாடலுக்கு தியேட்டரில் ஆட்டம் போட்டனர் என்றால், அது மிகையல்ல. இந்த பாடலில் உள்ள சிறப்பம்சம், அனிருத்தின் மற்ற பாடல்கள் போல் இல்லாமல் இது லைவ் ரெக்கார்டிங் முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்ததே. அனிருத்தும் ஒரு பக்கம் கத்த பாடும் நிலா பாலசுப்பிரமணியம் பாடலை சிம்மக் குரலில் பாடியிருந்தார். எப்பொழுதாவது, மூட் அவுட் ஆகும் போது இந்த பாடலை கேட்டு மூடை மாற்றிக் கொள்வேன். நீங்களும் முயன்று பாருங்கள். ஆக, மாஸு மரணம் பாடல் சென்ற சிறந்த பாடல்களின் பட்டியலில் ஒரு தனி இடம் பிடிக்கிறது. 

அடுத்து, பேட்டையின் பேட்டையிலேயே மாஸ் காட்டியது தல அஜித்தின் விஸ்வாசம். இந்த படத்திலும் நல்ல பாடல்கள் பல இருந்தாலும் என்னை பொருத்த வரை சிறந்த பாடல் கண்ணான கண்ணே பாடல்தான். இந்த பாடலில் ஒரே குறையாக நான் கருதுவது சித் ஶ்ரீராமின் குரல்தான், மூக்கிலிருந்து பாடியதுபோல் இருந்தது. இதே பாடலை பாலுவோ, ஹரிஹரனோ பாடி இருந்தால், இன்னுமே இதன் ஃபீல் நன்றாக இருந்திருக்கும். இமானுக்கும் இந்த ஆண்டின் சிறந்த பாடல் இதுதான். 

சாகா என்றொரு படம், அதில் யாயும் ஞாயும் என்ற பாடல், கேட்பதற்கு இனிமையான ஃப்ரெஷ்ஷான பாடல். நரேஷ் ஐயர் மற்றும் ரீடா தியாகராஜன் ஆகியோரின் குரலில் சபீர் என்ற புது இசையமைப்பாளரின் இசையில் வெளிவந்த இந்த பாடல் இளசுகள் மத்தியில் ஈன்ஸ்டன்ட ஹிட் அடித்தது. Musically, செய்பவர்கள் இந்த பாடலை ஒரிஜினல் பாடகர்களுடன் பாடி மகிழலாம். இதுவும் இந்த ஆண்டின் சிறந்த பாடலே. 

அடுத்து, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் சர்வம் தாள மயம் திரைப்படத்தில் வந்த வரலாமா உன்னருகில் பாடல், நிறைய நாட்களுக்கு பின் ஒரு தெய்வீக பாடல் கேட்ட திருப்தி. இருந்தாலும் பழைய ரஹ்மானின் அந்த டச் இதில் சுத்தமாக இல்லை. இந்த பாடலின் ஹை பிட்சை பாடிய விதத்திற்கே இந்த பாடலை சிறந்த பாடலாக தெரிவு செய்யலாம்.

லிஸ்டில் அடுத்தாக நம்ம ஹாரிஸ் ஜெயராஜின் அநேங்கே சினுங்கலாமா...அதே G மைனர் கோட், அதே பழைய மெலடிகளின் கலவையாக இருந்தாலும், இந்த பாடல் கொடுத்த ஃபீல் சூப்பர். உச்சரிப்பு பிழையாக, கத்துவது போல் பாடுவது இந்த பாடலில் அதிக இடங்களில் அப்பட்டமாக கேட்கிறது. இருந்தாலும் இதுவும் சிறந்த பாடலே.

தடம் படத்தின் இணையே என் உயிர் துணையே, சித் ஶ்ரீராம் கொஞ்சம் வாயை திறந்து பாடியிருப்பார். இனிமையான பாடல், கேட்டு பாருங்கள்.

அடுத்து இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தின் கண்ணம்மா பாடல். பாடல் வரிகள் சுமார்தான் என்றாலும் பாடலின் பல்லவி மற்றும் சரணத்தின் தொடக்கம் அழகாக கையாளப்பட்டிருந்தது. இன்டர்லூட்டில் வயலின் நன்றாக பயன்படுத்தப்படிருந்தது. இதையும் சிறந்த பாடல் லிஸ்டில் சேர்த்துவிடலாம்.

அடுத்து கடாரம் கொண்டான் படத்தின் தாரமே தாரமே வா பாடல். சித் ஶ்ரீராமுக்கு இந்த ஆண்டு  அமைந்த இன்னுமொரு நல்ல பாடல். ஜிப்ரான், பின்னணி இசையில் மட்டுமல்லாது பாடல்களையும் நன்றாக கம்போஸ் செய்வார் என மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திய பாடல். இவரிடம் இருந்து இன்னும் நல்ல பாடல்களை எதிர்பார்க்கிறேன். 

நெக்ஸ்ட், கோமாளி படத்தின் நீ ஹாய் சொன்னா போதும் பாடல், 90’s கிட்ஸின் ஞாபகங்களை மீட்டுத்தந்தன பாடல் வரிகளும் பட விஷுவலும். ஹிப்-ஹாப் தமிழா எப்போதாவதுதான் நல்ல பாடல் கொடுப்பார் என்பதால் இதையும் சிறந்த பாடல்கள் பட்டியலில் தாமதிக்காது போட்டு விடலாம்.

அடுத்து, காப்பான் படத்தின் ஹே மீ அமிகோ பாடல். கே.வீ.ஆனந்த படங்களுக்கென்ற ஹாரிஸ் ஒரு ஸ்பெஷல் சாங் வைத்திருப்பார். அயன் படத்தில் அமெரிக்கன் ஸ்டைலில் ஓ சூப்பர் நோவா, அதே போல் மாற்றானில் ரஷ்ய பாணியில் கால் முளைத்த பூவே, அதைப் போலவே காப்பானில் இந்த மெக்சிகன் ஸ்டைல் பாடல். இந்த வருடத்தின் சிறந்த பார்ட்டி சாங்காக இதைச் சொல்லலாம். 

காந்த கண்ணழகி, let’s be honest, இந்த லிஸ்டிலேயே எனக்கு இந்த பாடல்தான் மிக பிடித்தது. காரணம், முன்னைய 2000’களில் வரும் ஃபாஸ்ட் பீட் சாங்ஸ் போல இதன் சௌண்ட் மிக்ஸிங் இருந்ததுதான். அனிருத் நல்ல எனர்ஜியுடன் பாடியிருப்பார். இந்த கும்மரடப்புரவை சிறந்த பாடலாக சொல்ல இன்னொரு காரணம், இதைப்போன்ற ஜாலியான பாடல்கள்தான் நமது stressஐ குறைக்கும் மருந்தே. அதை நல்ல ப்ரசன்டேசனாகவும் கொடுத்து இருப்பது இன்னொரு ப்ளஸ் பாயிண்ட. 

அடுத்தாக கத்தரி பூவழகி ஃப்ரம் அசுரன். சிம்பிளாக சொன்னால் இந்த படத்தை பாருங்கள். இந்த பாடலை மறக்க மாட்டீர்கள். ஜீ.வியின் தேவை தமிழ் சினிமாக்கு தேவை என்று சொல்ல வைத்தது இந்த பாடல். அசுரன்  படமும் சரி பாடல்களும் சரி சிறந்த படைப்புக்களே. 

பிகில் படத்தின் வெறித்தனம் பாடலின் வரிகள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் இசைப்புயலின் பாடல் அரேஞ்மண்ட் மற்றும் நடிகர் விஜயின் குரல் இரண்டுமே இந்த பாட்டை யூடியூப்பில் மில்லியன் கணக்கான மக்களை பார்க்க வைத்தது.

இவையெல்லாம், எனக்கு பிடித்த பாடல்கள் மட்டுமே. 2019ம் வருடம் உங்களுக்கு பிடித்த சிறந்த பாடல் எது?






No comments

//]]>