Related posts

Breaking News

Alex in Wonderland-Amazon Prime (Review)


௮லெக்ஸ், இவரை ஸ்டாண்ட் அப் காமடியன் என்பதை விட ஒரு கலைஞன் என்று அறிமுகம் செய்வதே பொருத்தமாக இருக்கும். அமெரிக்க சாப்ட்வேர் இன்ஞினியராக இருந்த இவர், அந்த இன்ன இத்தியாதிகளையெல்லாம் விட்டுவிட்டு, தனது பேஷனை பின்தொடருவதற்காக, இந்த துறையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கால் பதித்தார். சிறு சிறு நிகழ்ச்சிகளில் இருந்து தொடங்கிய இவரது பயணம் இணையத்தின் உதவியுடன் பிரபல்யம் பெற்று இப்போது அமேசான் பிரைம் வரை இவரை கொண்டு வந்துள்ளது.

Alex in Wonderland என்னும் நிகழ்ச்சியை இவர் இதற்கு முன்னரே பல மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். இப்போது இது பிரத்தியேகமாக, ஒரு சில மாறுதல்களுடன் அமேசான் ப்ரைமிற்காக எடுக்கப்பட்டுள்ளது. இவரது நிகழ்ச்சி மற்றவர்களை போன்று கிடையாது. இவர், காமெடி பண்ணுகிறேன் பேர்வழி என உங்களை கடுப்பாக்க மாட்டார், அவசரம் காட்ட மாட்டார், மற்றவர்களின் மனதை புண்படுத்தவும் மாட்டார், மேலும் குறிப்பாக இவரது நிகழ்ச்சிகள் எல்லாமே நகைச்சுவையை விட இசையையே மையமாகக் கொண்டிருக்கும். 

சரி, இனி Alex in Wonderlandற்கு வருவோம், ஒரு கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்கிறார் அலெக்ஸ். அத்தனை கடவுளுக்குமான வாழ்த்து அது. பின்னர் சில பழைய பாடல்களுக்கு இசையும் வாசித்து பாடலையும் பாடுகிறார். அதன் பின், நான் முதல் பத்தியில் கூறிய சுய அறிமுகத்தை அவரும் செய்கிறார்.

பின்னர், இளையராஜாவை அவரது பாடல்களை கொண்டே பட்டும் படாமலும் டீஸ் செய்கிறார். இளையராஜாவின் கோரஸ் குரூப்பில் உள்ளவர்களின் மன நிலையை சிந்திக்க வைக்கும் முகமாக அந்த Act இருந்தது. பின் மலேசியா வாசுதேவனை கௌரவபடுத்தும் விதமாக ஒரு Actஐ செய்து காட்டுகிறார். மேலும், எஸ்பி.பி, ஏ. ஆர். ரகுமான், வித்தியாசாகர் தொடங்கி அமரர்.M.S.V வரை, அவர்களின் பாடல்களைக் கொண்டே அவர்களை பெருமைபடுத்மும் விதமாக ஒரு பகுதியை செய்து முடிக்கிறார். மேலும், யேசுதாஸின் தெய்வீக குரலையும், “மாசி மாசம் ஆளான பொண்ணு” பாடலை “சாமி சரணம் ஐயப்ப சரணம்” என அவர் மாற்றி பாடியதும் பிரமாதம். இது ஏற்கனவே யூடிப்பில் வெளிவந்து ஹிட்டடித்துள்ளது.



எனக்கு குறிப்பாக M.S.Vயை பற்றிய Act பிடித்திருந்தது. Double Congo என்னும் இசை கருவியை மட்டும் வைத்தே M.S.V எத்தனை வித்தைகள் காட்டியுள்ளார் என்பதை அழகாக நகைச்சுவை உணர்வுடன் செய்து காட்டினார். பாடலை பாடிக்கொடிக்கொண்டே சந்தம் மாறாமல்  மேளதாளதாளங்களையும் இசைப்பது அலெக்ஸின் தனித்திறன். இரண்டு மணி நேர திரைப்படத்தை விட இவரது நிகழ்ச்சி ஆர்வமூட்டும் விதமாக இருந்தது. அமேசான் பிரைம் வைத்துள்ளவர்கள் தவறாமல் பார்க்கவும். 

No comments

//]]>