Related posts

Breaking News

கைதி படத்தின் கதையும் திருட்டு கதையா அல்லது ஒரிஜினல் கதையா


சமீபத்தில்தான் Copycat Movies  என்னும் கட்டுரைத் தொடரை எழுதியிருந்தேன். அதில் மெர்சல் திரைப்படத்தின் கதை முதற்கொண்டு காட்சிகள் வரை எவை எல்லாம் வேறு படங்களில் இருந்து திருடப்பட்டது என அக்கு வேறு ஆணி வேறாக பார்த்தோம். அக்கட்டுரைகளை படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் படித்துக் கொள்ளலாம். 


கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்தை முன்னர் இயக்கியிருந்தார். இவரின் கைதி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி ஒரு புறம் வரவேற்புகளை பெற்றுவந்த நிலையில் இப்போது கைதி படத்தின் கதை இன்னொரு திரைப்படத்தினுடையது என்னும் சர்ச்சையும் எழுந்துள்ளது. 



Assault on Precinct 13 என்ற திரைப்படம், ஜோன் கார்பெண்டர் என்ற 70, 80களில் புகழ்பெற்ற இயக்குனர் இயக்கியத்தில் 1976ல் வெளிவந்தது. இந்த படம் 2005லும் ரீமேக் செய்யப்பட்டது. Assault on Precinct 13 படத்தின் கதைப்படி, தென்மத்திய லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு உள்ளூர் கேங்ஸ்டர் கும்பல் சில ஆயுதங்களை திருடி கையகப்படுத்தி வைத்திருக்க அங்கே வரும் போலிஸ் கேங்ஸ்டர் கும்பலில் ஆறு பேரை போட்டுத் தள்ளி விடுகிறது. இதனால் வெகுண்ட அந்த கேங்ஸ்டர் கும்பலின் பெரிய தலைகள் பழிக்குப்பழி ரத்தத்திற்கு ரத்தம் என சபதம் எடுக்கின்றனர். 

இதன்பின் கதை மூன்று பரிமாணங்களக பிரிகிறது. 

ஒரு பக்கம் ஈதன் பிஷப் என்ற புதிதாக பதவியுயர்வு பெற்ற காவல் அதிகாரி விரைவில் மூடப்பட உள்ள கட்டிட்டத்திற்கு பொறுப்பேற்கிறார்.

இன்னொரு பக்கம்,  கேங்ஸ்டர்கள் கொலை வெறியொடு அலைந்துக் கொண்டிருக்க அவர்களில் கண்ணில் மாட்டிய கெய்தி என்னும் சிறுமியை சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள். 

அதேவேளை, கெய்தியின் தந்தை லாசன் கேங்ஸ்டர்களில் ஒரு பெரிய தலையை போட்டுத்தள்ளி விட, செத்த பெரிய கையின் புள்ளீங்கோ லாசனை கொலைவெறியோடு துரத்த லாசன், பிஷப் இருக்கும் கட்டிடத்திற்கு ஓடி வந்துவிடுகிறான். 

அப்புறம் பல போராட்டங்கள் நடக்கின்றன கேங்ஸ்டர்கள், மின்சார வயரை அறுத்து உள்ளே உள்ள தொடர்புகளை துண்டித்து கட்டிடத்திற்குள் நெருங்க அசட்லைன் எனப்படும் கேஸை அடித்து கேங்ஸ்டர்களை கொல்கிறார் பிஷப். கடைசியில், ஒரு அதிகாரி  லாசனுக்கு கைவிலங்கு மாட்ட அந்த அதிகாரியை தடுத்து லாசனை அனுப்பி  வைக்கிறார் பிஷப். 

கைதி படத்தின் கதையில், ஆயுத கடத்தலுக்கு பதிலாக போதை மருந்து கடத்தல் இருக்கும். மேலும் போலிஸை போட்டுத்தள்ள கேங்ஸ்டர்கள் திட்டமும் போடுவார்கள். அதன்பின், Assault on Precinct 13 போல கைதியிலும் பழைய கட்டிடத்திற்கு புதிதாக டியூட்டிக்கு வருவார் நரேன். லாசன்- கெய்தி போல இங்கேயும் கார்த்திக்கு ஒரு உறவு இருக்கும். மேலும் அந்த பவர் கட்டாகும் சீனும் ஏன் கடைசியில் கைதியை விடுவித்து போலிஸ் அனுப்பும் சீன் கூட இருக்கும். கிளைமேக்ஸில் Assault on Precinct 13ல் போலிஸ் பிஷப் அசட்லைன் கேஸ் அடித்து எதிரிகளை கொல்வது போல இதில் டெர்மினேட்டரில் வரும் மெஷின் துப்பாக்கி போன்ற ஒன்றால் ‘கைதி’ கார்த்தி எதிரிகளை துவம்சம் செய்வார். 


இப்படியாக நிறைய சிமிலாரிடிஸ் இரு படங்களுக்கு இடையேயும் உண்டு. இது காபியா, தழுவலா (Inspiration) அல்லது சொந்த ஒரிஜினல் கதையா? இந்த கேள்விகளுக்கான பதிலை மக்களாகிய உங்களிடமே விட்டுவிடுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே...




No comments

//]]>