Related posts

Breaking News

பேட்மேன் எதிர் சூப்பர்மேன்-முன்னோட்டம்(Batman vs Superman-Sneak peek)


பேட்மேன் எதிர் சூப்பர்மேன் திரைப்படமானது பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடுத்த மாதத்தின் இறுதிப்பகுதியில்(மார்ச்-25) உலகளவில் பல்வேறு திரையரங்குகளில் பல மொழிகளில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.Man of steelன் தொடர்ச்சியாக இப்படம் இருக்கும் அதேவேளை சூப்பர்மேனினுடைய காமிக்ஸ் உலகின்  பிரபல்யமான சில கதாபாத்திரங்களையும் தாங்கி வருகிறது இத்திரைப்படம்.லெக்ஸ் லூதர்(இவனது வாழ்வின் மிக முக்கியமான குறிக்கோளே சூப்பர்மேனைக் கொல்வதுதான்),டூம்ஸ்டே(Doomsday) ஆகிய சூப்பர் வில்லன்கள் களமிறங்கும் அதேவேளை வொண்டர் வுமன் கதாபாத்திரமும் வெள்ளித்திரையில் கால்பதிக்கவிருக்கிறது.
Lex Luthor

Doomsday
Wonder Women

கதை
Man of Steel திரைப்படத்தில் சூப்பர்மேன் உலகை காப்பாற்றி இருந்தாலும் பல உயிர்களை காவுகொடுக்கவும் அவரே காரணமாக இருந்திருப்பார்.ஜெனரல்.ஸாட் உடனான தனது சொந்த பகையினாலேயே இம்மாபெரும் அழிவு நிகழ்கின்றது.இதன்காரணமாக சூப்பர் மேனின் மீது ஆத்திரத்திற்குள்ளாகும் பேட்மேன் அவனை எதிர்க்க துணிகிறார்.சூ.மேனை எதிர்கொள்வது என்பது இலகுவான காரியமல்லவே இதனால் பல நவீன இயந்திரங்கள் அத்தோடு ஆற்றல் வாய்ந்த கவசங்களுடன் அவனுடன் மோதுகிறார்.இது இவ்வாறிருக்க நகரின் "முக்கியப்" பிரமுகரான லெக்ஸ் லூதர்,மறைந்த ஜெனரல்.ஸாட்டின் உடலைக் கைப்பற்றி ஸாட்டினை உயிர்ப்பிக்கும் முயற்சியை மேற்கொள்கின்றான்.இதன் விளைவாக சூப்பர்மேனை விட பல மடங்கு ஆற்றல் வாய்ந்த டூம்ஸ்டே எனும் ராட்சத ஜந்து உருவாகிவிடுகின்றது.கண்ணில் பட்ட அனைத்தையும் நாசம் செய்தும் விடுகின்றது.ஏற்கனவே மோதலில் ஈடுபட்டிருக்கும் சூப்பும் பேட்டும் வொண்டர் வுமனுடன் ஒன்றினைந்து எவ்வாறு நகரைக் காப்பாற்றுகின்றனர் என்பதனை பொறுத்திருந்துதான் திரையில் காணவேண்டும்.

கவனிக்க இது டிரைலர்களின் மூலம் கண்டறிந்த கதைதான்.திரைப்படத்தில் வேறுசில மாற்றங்களும் அவசியம் இடம்பெற்றிருக்கலாம்.ஆயினும் கதைக்கரு இதுதான் என்பதில் ஐயமில்லை.ஹாலிவுட் டிரைலர்களின் தலையாய அம்சமே டிரைலரிலேயே கதையைச் சொல்லிவிடுவதுதான்.அதுவும் சூப்பர் ஹீரோ படமெனில் இது தவறாமல் நடைபெறும்.இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில் டேவிட் கோயர்(திரைக்கதை),ஸேக் ஸ்னைடர் கூட்டணியினலான Man of Steel ஒரு சுமரான படம் என்பதுதான்.அதுமட்டுமன்றி கிறிஸ்டியன் பேலுக்கு பதிலாக பென் களமிறங்குவது சற்றே விரும்பத்தகாத ஒன்றாகும்.எனினும் முகத்தை மூடிக்கொள்வார் என்பதால் பிரச்சினையில்லை.திரைப்படத்தை எப்படியும் முதல் வாரத்தில் பார்க்கப் போவதில்லை.ஓரிரு வாரங்கள் கடந்த பின்தான் நேரம் கிடைக்கும் என்பதால் நான் சற்று அதிக காலம் காத்திருக்க வேண்டிவரலாம்..!
படப்பிடிப்பின் போது


A.P:-படத்தில் ஜோக்கர் பற்றிய ஒருசில குறிப்புகளும் ராபினின் கவச ஆடையும் டிரைலர்களில் காட்டப்பட்டுள்ளன..!

4 comments

jscjohny said...

"சூப்பும் பேட்டும்" ha haa கீப் இட் அப்!

கிருஷ்ணா வ வே said...

One of the eagerly awaited movie.. Since they planned to have that zod fight as reason for bat vs sup we didn't like that extended fight. But let's hope this one clicks as this leads to justice league.. I believe aquaman cameo will also be there.

Kavind Jeeva said...

ஹாஹா.நன்றி நண்பரே."முக்கிய" பிரமுகரை நீங்கள் கவனிக்கவில்லைப் போலும்..!

Kavind Jeeva said...

ஆம்,நானும் ஒரு வருடக் காலத்திற்கு மேலாக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.ஒரு வேளை Post Credits காட்சிகளில் Aquamanனது கெளரவ வேடம் இடம் பெற்றிருக்கலாம்..!

//]]>