Related posts

Breaking News

Deadpool(2016)


காமிக்ஸ் கதாநாயகர்களுக்கென்று ஒரு சில பொதுவான குணங்கள் உண்டு.அதீத சக்தி கொண்ட ஹீரோக்கள் சாதாரணமான மனிதர்களை துன்புறுத்துவதோ அல்லது கொலை செய்வதோ மிகவும் குறைவு(அதிலும் பேட்மேன் இந்த விதியை மிகவும் கட்டுக்கோப்பான முறையில் பின்பற்றுபவர்).இவர்களை போலல்லாது தனது தனிப்பட்ட பாணியில் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கும் ஒரு Anti-Heroதான் நம்ம டெட்பூல்.இவர் நல்லவருமல்ல கெட்டவருமல்ல.



டிம் மில்லரின் இயக்கத்தில் வழக்கமான மார்வெல் திரைப்படங்களை விட குறைந்த பொருட்செலவில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒடிக் கொண்டிருக்கும் படம்தான் டெட்பூல்.படத்தின் வெற்றிக்கு மிகப் பிரதானமான காரணம் டெட்பூல் கதாபாத்திரத்தை காமிக்ஸில் சித்தரிக்கப்பட்டுள்ளவாரே எழுதியுள்ளதுதான்.இயற்கையிலேயே மிகவும் குறும்புத்தனமானமான இவர் பல ரணங்களையும் தனக்குள்ளே சுமந்து கொண்டிருப்பவர்.



காசுக்காக எதையும் செய்யலாம் என வாழந்துக் கொண்டிருக்கும் வில்சன் தனது காதலியினால் சற்றே மனம் மாற்றப்படுகிறார்.ஒரு இனிமையான வாழ்வை வாழலாம் என..........தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது.கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை எதிர்கொள்ளலாம் என தயாராகிறான்.சாவதற்கு மனமில்லை வாழ்வதற்கு வழியில்லை.இவ்வாறு இருக்கும் போது ஒரு குழு தன்னைக் காப்பாற்றுவதாக கூறினால் யாரும் சும்மா இருப்பார்களா...தன் காதலியிடம் ஏதொன்றும் கூறாமல் அக்குழுவினரிடத்தில் தன்னை ஒப்படைக்கிறான்.நாட்கள் கடந்த பின்தான் தெரிய வருகிறது அதுவோர் சித்திரவதைக் கூடமென்று.வில்சன் போன்றோரை செயற்கையான முறையில் பல்வேறுபட்ட குரூரமான சிகிச்சைகளின் மூலம் Mutantகளாக மாற்றி அவர்களை அடிமைச் சந்தையில் விற்பதுதான் இவர்களது தொழில்.இவர்களது சோதனையின் மூலம் வில்சனுக்கு புற்றுநோயில் இருந்து விடுதலையும் காயங்களை தானாகவே ஆற்றும் அபரிவிதமான சக்தியும் கிடைத்தாலும்,இவரது உடல் விகாரமாகி விடுகின்றது.பரிசோதனை கூடத்தில் இருந்து தப்பிக்கும் வில்சன்....மன்னிக்கவும் இனிமே டெட்பூல்,தன் காதலை மீட்பதுடன் தன்னை மரணத்தை விட கொடிய துன்பத்திற்கு உள்ளாக்கியவர்களை பழிவாங்குவதே மீதி கதை.

Colossus and Negasonic Teenage Warhead with Deadpool

படத்தில் X-Men அணியில் உள்ள இரண்டு கதாபாத்திரங்கள்,டெட்பூலுக்கு உதவி செய்வதற்காக திரையில் உலா வருகின்றன.படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மனதை கவரும் கதாபாத்திரங்களுள் ஒன்றுதான் அந்த டெக்ஸி ஓட்டுனர் கதாபாத்திரம்.படத்தின் ஆரம்பத்திலும் கிளைமேக்ஸுக்கு முன்னரும் வருகிறார்.இரண்டே காட்சிகளில் தோன்றினாலும் மனதை கவர்ந்து விடுகிறார்.வில்லனான அஜெக்ஸை பெரிதாக கவனிக்க முடிவதில்லை.காரணம் அவரை விட அதிகமான வில்லத்தனத்தை டெட்பூல் செய்து விடுகிறான்.வழக்கம் போல ஸ்டான் லீயும் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார்.காமெடி அதிகம் தூவப்பட்டுள்ளது படத்திற்கு பலம்தான் என்றாலும் டெட்பூல் வளவள வென எந்நேரமும் பேசிக்கொண்டிருப்பது சற்றே சலிப்பூட்டத்தான் செய்கிறது.நிச்சயமாக டெட்பூல் மார்வெல் ரசிகர்களுக்கு ஓரு புது மாதிரியான சினிமா அனுபவமாக இருக்கும்..!


A.P:-கண்டிப்பாக இது குடும்பத்தோடு உட்கார்ந்து பார்ப்பதற்கான படம் அல்ல..!


2 comments:

  1. நல்ல பதிவு நண்பா! டெட்பூல் கதை இன்றுதான் நான் அறிந்து கொண்டேன்!

    ReplyDelete
    Replies
    1. சாதாரணமான ஒரு சூப்பர் ஹீரோ கதைதான்.அது எடுக்கப்பட்டிருக்கும் விதத்தில்தான் தனித்து நிற்கிறான் டெட்பூல்..!

      Delete

//]]>