Related posts

Breaking News

இன்று நேற்று நாளை என்றும் ஜீவா

After loooooong time...வணக்கம் நண்பர்களே..!
பதிவிடுவதற்குக் கைகள் தயாராக இருந்த போதிலும்,நேரமும் மனமும் மறுத்த காரணத்தால் எண்ணவோட்டங்களை எழுத முடியாமல் போய்விட்டது.இன்று,ஓரிரு திரைப்படங்களுடன் உங்களைக் காண ஓடோடி வந்துவிட்டேன்.
நம்மில் பலர் நாம் செய்யும் தவறுகளுக்குக் காலத்தையும் கடவுளையும் குறைகூறிக் கொண்டே வாழ்க்கையைக் கடத்தி விடுகிறோம்.ஒரு வேளை காலத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி நமக்குக் கிடைத்து விட்டால் நழுவவிட்ட சந்தர்பங்களையும் சந்தித்த தோல்விகளையும் நம்மால் சரி செய்து விட முடியுமா!? 
'நிச்சயமாக முடியாது' என்பதை வலியுறுத்தும் இன்னுமோர், அதேவேளை தமிழில் Time Machineஐ அடிப்படையாகக்கொண்டு வெளிவந்திருக்கும் முதல் திரைப்படம்தான் இன்று நேற்று நாளை.கதை என்றவுடன் காதலையும் இணைத்து விடும் பழக்கம் கமர்ஷியல் சினிமாக்கள் அனைத்திலும் இடம் பெற்றுவிடுகிறது.ஆனால் காலையந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதையில் ஒரு கட்டத்தில் காதலானது மையத்தைத் தொட்டு விடுகிறது.இத்திரைப்படத்தின் முதலாவது கதாநாயகன் திரைக்கதைத்தான்.திரைக்கதை உத்திகளைத் தாறுமாறாக ஆனால் மிகநேர்த்தியாகப் பயன்படுத்திப் படத்தை வெற்றிக்கொள்ளச் செய்துள்ளனர் குழுவினர்.பல "பல்லேலக்கா"க்கள் வசூலில் சாதனைப் புரியும் ஒரு மாநிலத்தில் இதைப் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெறுவது என்பது சுலபமானக்காரியம் அல்ல.எனினும் திரையில் ஒரு மாயஜாலத்தைத் தோற்றுவித்துப் பார்வையாளன் கரங்களால் ஒலி எழுப்பும் வண்ணம் செய்துள்ளனர்."தமிழ் சினிமாவில் இதுவரை நீங்கள் கண்டிராத" என்னும் தோரணையுடன் சொல்லிகொள்ளும் வகையில் சாதாரணக்  காதல் பாடல் ஒன்றை "காதலே காதலே" என்னும் பாடலில் அதீத கற்பனைதிறன் கொண்டு  அசாதாரணமான வடிவமைத்துள்ளனர்.இசையும் படத்திற்கு இசைவாக அமைந்திருப்பது மிகப்பெரிய பலம்.ஆதியை அடுத்தத் தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைக்கும் மிகமுக்கியமான ஒரு திரைப்படமாக இஃது இருக்கும்.நடிகர்கள் அனைவரும் கதாப்பாத்திரங்களாக வலம் வருவதும் ஓர் அரிய செயலே.'சுறா' பிடிப்பதையும் 'சங்கம்' வளர்ப்பதையும் விட்டுவிட்டு நம் ஆஸ்தான கமர்ஷியல் கதாநாயகர்கள் இதைபோன்ற திரைக்கதைக் கொண்ட படங்களில் கவனம் செலுத்தினால் நம் சினிமா 'அதுக்கும் மேல' ஒருபடி செல்வது உறுதி.





சிறுவயதில் சச்சினை எம் கனவுகளில் வலம் வரச் செய்த நாட்கள் உங்களுக்கு நினைவுள்ளதா!??பேட்டை கிரிக்கெட் போட்டி ஒன்றில் அரைச்சதம் கண்டுவிட்டால்,அன்றிரவு உறக்கத்தைத் தொலைத்து விட்டு அதே நினைவில் லயித்து இருந்த நாட்களும் உண்டு.ஆயிரம் பேரின் கரகோஷங்கள் மாயையாகக் காதில் ஒலிக்கும்.இன்பமான கனவுகள் அவை.அக்கனவுகளை நனவாக்குவதற்காகப் போராடும் ஈர் இளைஞ்சர்களைப் பற்றிய கதையே ஜீவா.பூபாளத்தில் பூங்குழலின் இசையையும் கோர்பதுபோல இக்கதையில் நயம்படக் காதலையும் இணைத்துள்ளார்கள்.ஜாதி பிரிவினையைப் பற்றி அப்பட்டமாகத் துகில் கலைகிறார்கள்.இயக்குனரை பாராட்டவேண்டிய இடங்கள் அவை.இமானின் இசை காட்சிகளுக்கு அழகளிக்கிறது.தளம்பாத ஒளிப்பதிவு,தைரியமான திரைக்கதை என்பவை படத்தை நேர்த்தியாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன.வைன் ஃஷாப் பாடல் வெறுப்பேற்றே தவறவில்லை.ஆயினும் மனதுக்குநெருக்கமான ஒரு படமாக அமைகிறது ஜீவா.எனக்குத்தெரிந்த ஒரு சில 'ஜீவா'க்கள் ஜாதி இன்னும் பிற பேதங்களைத் தாண்டி வெற்றிப் பெற்றுவிட்டனர்.ஆனால் நாம் அறியாத பல 'ரஞ்சித்களை ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொண்டுத்தான் இருக்கிறோம்.ஜீவாவாக வலம் வந்த நாயகன் விஷ்ணு கூட இன்னும் சரிவர அங்கீகரிக்கப்படாத ஒரு ரஞ்சித்தான்.



No comments

//]]>