Related posts

Breaking News

ஷெர்லாக் ஹோம்ஸ்(Sherlock Holmes-Nothing escapes them)

வணக்கம் நண்பர்களே...
நாம் இன்று பார்க்கப்போவது அயன் மேன் புகழ் ரொபர்ட் டெளவுனி ஜே.ஆர் மற்றும் ஜூட் லோ நடிப்பில்.,துப்பறியும் பாத்திரங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமான ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படமான ஷெர்லாக் ஹோம்ஸ்[Sherlock homes(2009)Nothing escapes them]படத்தை பற்றியே..!

பிரித்தானிய திரைப்படமான இதனை 'விறு விறு சுறு சுறு" திரைக்கதைகளிற்கு பேர் போன கை ரிட்சி அவர்கள் இயக்கியுள்ளார்.
'லோட் பிளாக்வுட்' என்ற மந்திரவாதி ஏற்கனவே ஐவரை நரபலி என்ற பெயரில் கொலை செய்துள்ளதுடன் அடுத்து ஒரு இளம்பெண்ணையும் கொலை செய்ய ஆயத்தமாகிறான்.அதற்குள் ஹோம்ஸ்,வாட்சன் ஜோடி சரியானநேரத்தில் வந்து அப்பெண்ணின் உயிரை காப்பாற்றி விடுகின்றனர்.நம்ம தமிழ் சினிமால வார மாதிரி போலிஸ் கொஞ்சம் தாமதமாக தான் சம்பவ இடத்திற்கு வருகிறது.லோட் பிளாக்வுட்டை கைது செய்யும் அவர்கள் அவனை நீதிமன்று முன் நிறுத்தி தூக்கு தண்டனையும் வாங்கி தருகின்றனர்.
இறப்பதற்கு முன் ஹோம்ஸை பார்க்கும் லோட் பிளாக்வுட் தான் 'மீண்டு'ம் வருவேன் என கூறுகிறான்.உரிய தினத்தில் தூக்கில் ஏற்றப்படும் பிளாக்வுட்டை சோதனை செய்து அவனின் இறப்பை உறுதிப்படுதுகிறார் டாக்டர் வாட்சன்.
அதே நேரம் ஐரின் அட்லர்(இவள் ஒரு Professional திருடி)எனும் பெண்மணிதொலைந்து போன ஒரு நபரை கண்டுபிடிக்கும் படி ஹோம்ஸிடம் கூறுகிறாள்.புதிய வழக்கை ஏற்கும் ஹோம்ஸ்(இந்த இடத்தில் இவள் வருவதற்கு 'வேறு' காரணமும் இருக்கலாம் என்பதை ஊகிக்கும் ஹோம்ஸ் அவளை அனுப்பியவர் யாரென ஆராய்வதிலும் ஆர்வம் கொள்கிறார்) கேஸில் முன்னேற்றமின்றி நிற்கும் தருணத்தில் இறந்து போன பிளாக்வுட்டின் கல்லறை திறக்கப்பட்ட செய்தி ஹோம்ஸை வந்தடைகிறது.
கல்லறை இருக்கும் இடத்திற்கு செல்கிறார் ஹோம்ஸ்.அங்கு அவரது போலீஸ் நண்பர் லெஸ்டிரேட்டின் மற்றும்இதர காவலர்களின் உதவியுடன் சவப்பெட்டியை வெளியே எடுக்கிறார்.அந்த பெட்டியில் இருப்பது ஐரின் அட்லர் தேட சொன்ன நபர் தான் என்பதை அறிந்து கொள்ளும் ஹோம்ஸ் இறந்த உடலில் இருந்த கைக்கடிகாரத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து கொள்கிறார்.தற்காலத்தில் தங்க நகைகளை அடகு வைப்பது போல் அக்காலத்தில் கடிகாரங்களை அடகு வைப்பது வழக்கம் என்பதாலும் அக்கடிகாரத்தில் அடகு கடைகளில் இடப்படும் கீறல்கள் இருப்பதாலும் இக்கடிகாரம் நிச்சயமாக அடகு வைக்கப்பட்டு மீள எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதனை ஊகிக்கும் ஹோம்ஸ் அ.கடையை நாடுவதன் மூலம் இறந்தவனின் முகவரியை பெற்றுக்கொள்கிறார்.
அவனது வீட்டை அடையும் ஹோம்ஸ் அவன் ஒரு விஞ்ஞானி என்பதனையும் சமீபத்தில் அவன் ஏதோ ஒன்றை கண்டுபிடித்திருக்கிறான் என்பதனையும் அறிந்து கொள்கிறார்.அதே வேளை மூவர் கொண்ட 'முஷ்டி' கும்பல் ஒன்று அவ்விடத்தை அழிப்பதற்கு அனுப்பப்படுகிறது.அங்கு ஹோம்ஸ்,வாட்சன் ஆகியோருக்கும் முரடர் கும்பலுக்கும் இடையே ஹாலிவுட் பாணியிலான பிரமாண்டமான ஒரு சண்டை.வைட்டு முடிஞ்சி வெளிய வந்தா ஹோம்ஸ் ஜோடியை போலீஸ் அள்ளுகிறது(பொது ,தனியார் சொத்தை நாசம் செய்த குற்றம்).

அதேநேரம் லோட் பிளாக்வுட் மீண்டும் சமூகத்தில் தலை தூக்குகிறான்.மக்களிடையே கிலியை உண்டு செய்கிறான்.அவனது நோக்கம் இங்கிலாந்து பாராளுமன்றத்தை தன் கட்டுக்கு கீழ் கொண்டு வருவது.
சிறையில் இருந்து வெளிவரும் வாட்சன்,ஹோம்ஸ் ஆகியோர் தொடர்ந்து பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
பிளாக்வுட் உயிர்தெழுந்த மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும்,ஐரின் அட்லரை அனுப்பியது யார் என அறிய வேண்டும்,இறந்து போன விஞ்ஞானி கண்டுபிடித்த 'அந்த' ஏதோ ஒன்று என்ன எனபதை கண்டுபிடிக்க வேண்டும்,இங்கிலாந்து பாரளுமன்றம் சீர்குலையாமலும் அதன் உறுப்பினர்களுக்கு ஆபத்து வராமலும் காக்க வேண்டும் என பல 'வேண்டும்'கள் இந்த 'வேண்டும்'கள் எல்லாம் என்ன ஆனது என்பது மீதி திரைக்கதையில்...

"இறப்பதற்குள் சில படங்களை பார்தது விட வேண்டும்" என்று சொல்வார்கள் அதற்கு இந்த படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.ஆனால் இக்கதையில் சில சிக்கல்களும் இருக்கின்றன.அவற்றுள் மோசமானதும் மிக முக்கியமானதுமானது ஹோம்ஸின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம்.பிரபல பதிவர் 'கருந்தேள் ராஜேஷ்' அவர்கள் இதை பற்றி கூறும் போது...
//எப்படி அருள்மொழிவர்மர் காமெடியன் ஆக முடியாதோ, அப்படி ஹோம்ஸும் காமெடியன் ஆக வாய்ப்பே இல்லை என்பதே ஆர்தர் கானன் டாயலின் விசிறிகளின் கூற்று (அடியேனின் கூற்றும் தான்).//என கூறியிருப்பார்.அது முற்றிலும் உண்மையே..!மாறாக வாட்சனின் கதாபாத்திரம் ஹோம்ஸை விட உயரமான திடகாத்திரமான,வீரமுள்ளதாக படைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆகப்பெறும் நகைச்சுவை என்ன வெனில் கம்பீரத்திற்கும் தோற்றபொலிவிற்கும் பெயர் போன ஹோம்ஸின் கதாபாத்திரம் இப்படத்தின் மூலம் சிறந்த நகைச்சுவை நடிக்காருக்கான GOLDEN GLOBE விருதுப்பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டிருந்தார் என்பதே.!
ஆனால் ரொபர்ட் டெளவுனியை குறை சொல்ல முடியாது.தனது வழக்கமான 'மேனரிச' சேஷ்டைகளுடன் ஹோம்ஸை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

இத்திரைப்படத்தில் சண்டைக்காட்சிகள் மிக அபாரமாக படைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக இந்த சண்டைக்காட்சி எனக்கு "விஸ்வருபம்" திரைப்படத்தை ஞாபகமூட்ட தவறவில்லை.நீங்களும் ஒரு தடவை பாருங்களேன்(Data மிச்சமிருந்தால்).

பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வருவாயை ஈட்டியுள்ள ஒரு தடவையேனும் பார்தது விட வேண்டிய படமான இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது என்பது மேலதிக தகவல்.அது மட்டுமன்றி இரண்டாம் பாகத்தில் அறிவுலும் உடற்திறனிலும் ஹோம்ஸுக்கு போட்டியான பேராசிரியர்.மொரியார்டிதான் வில்லன்.
படத்தின் டிரைலருடன் இடத்தை காலி செய்கிறேன்..!

7 comments

T K AHMED BASHA said...

டி வி டி கிடைத்தால் கண்டிப்பாக பார்ப்பேன் ...

Kavind Jeeva said...

mmm..!

Selvam abirami said...

ரியலி நைஸ் ...படம் பார்க்க முயற்சி செய்கிறேன் ..
:-)

Selvam abirami said...

ரியலி நைஸ் ...படம் பார்க்க முயற்சி செய்கிறேன் ..
:-)

Kavind Jeeva said...

Thanks..!

Anonymous said...

arthur canordeil-in Sherlock Holmes-ikku pakkathil varukirar

Kavind Jeeva said...

பக்கம் தான் ஆனால் அவர் ஹோம்ஸை கையாண்டுள்ள விதமும் Guy R அவர்களின் "அப்ரோச்சும் கொஞ்சம் வித்தியாசமானவை..!

//]]>