Related posts

Breaking News

Karuppu - Review



பல நாட்களுக்குப்பின் தியேட்டரில் ஒரு நல்ல அனுபவம். இடைவேளைக்கு பின்னரான திரைக்கதையில்  இருக்கும் தொய்வு, ஒட்டு மொத்த நீதித்துறையையே தவறாக சித்தரித்தமை, கடவுள் சம்மந்தப்பட்ட சில விடயங்களை கையாண்ட விதம் என்பனவற்றில் எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது படம் நன்றாகவே இருந்து. 

இப்போது வெளிதாகும் நிறைய திரைப்படங்களில் இசை மட்டமாக உள்ளது என்பதுதான் உண்மை, இந்த படத்தின் இசையும் சிலருக்கு செட் ஆகவில்லை என்றாலும், எனக்கு நன்றாக இருந்தது. குறிப்பாக “God Mode” is really God mode. சூர்யாவின் நடிப்பு அருமையாக இருந்தது என்பதெல்லாம், பகலில் வெயில் என்பது போல சாதரணமான விடயம். 

சமீபத்தில் வெளியான, ரவுடிசம், போதைப்பொருள், தவறான உறவு, கடத்தல், மற்றும் மோசடி போன்றவற்றை சிலாகிக்கும் திரைப்படங்களை விட இந்த திரைப்படம் எத்தனையோ மடங்கு பரவாயில்லை என்றே சொல்லலாம். 

ஆக மொத்தத்தில், “கருப்பு” சும்மா 🔥🔥🔥


No comments

//]]>