Related posts

Breaking News

Avengers Endgame and Star Wars Rise of the Skywalker (Similarities in tamil)


சென்ற கட்டுரையில் Rise of the Skywalker திரைப்படத்தின் விமர்சனத்தை பார்த்தோம், அதைப் படிக்காத வாசகர்கள் அதைப் படித்து விட்டு இக்கட்டுரையை தொடர்வதே சாலச்சிறந்தது.

அக்கட்டுரைக்கான லிங்க் https://kavinthjeev.blogspot.com/2019/12/star-warsrise-of-skywalker-review-in.html

அக்கட்டுரையில் இந்த படத்திற்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக கூறியிருந்தேன். ஸ்டார் வார்ஸ் படம் வரும் முன்னரே இதை நான் ஊகித்திருந்தேன். ஏனெனில், கண்டிப்பாக எண்ட் கேமின் வெற்றி ஃவோர்முயூலாவை இதிலும் பாவிப்பார்கள் என நினைத்திருந்தேன். டிரெய்லரும் அப்படித்தான் இருந்தது. மேலும் இரண்டும் Disney வெளியிடும் டீம்-அப் படமாயிற்றே, மேலும் சொன்னால் அந்தந்த பட சீரிஸ்களின் கடைசி படங்கள்தான் இவையிரண்டுமே. இப்போது இவற்றின் ஒற்றுமைகளை டீ-கோட் செய்வோம்.


Major Spoilers Ahead

முதலில், இரண்டு திரைப்படங்களுமே அந்தந்த சீரிஸின் கடைசி திரைப்படங்களாகும். மார்வலின் பத்து வருடமாக வெளிவந்த படங்கள் அனைத்துமே, இன்ஃவினிடி ஸ்டோன்ஸை மையமாகக் கொண்டிருந்தது. இதை Infinity Saga என்று அழைப்பர். அதைப் போலவே, கடந்த 40 வருடங்களாக வெளிவந்த  வந்த ஸ்டார் வார்ஸ் படங்களுக்கு முடிவாக இந்த Rise of the Skywalker திரைப்படம் அமைகிறது. இதனை Skywalker Saga என அழைப்பர். எல்லோருமே, மார்வலின் Avengersசைதான் Most Successful franchise என சொல்லுகின்றனர். உண்மையிலேயே, ஸ்டார் வார்ஸ் franchise அவெஞ்சர்களுக்கு அப்பன். காரணம், 1977ல், வெறும் 11 மில்லியன் டொலர்களில் தயாரிக்கப்பட்ட ஸ்டார் வார்ஸ்- எ நியூ ஹோப் திரைப்படமானது, அன்றைய காலகட்டத்திலேயே 775 மில்லியன் டொலர்களை வசூலித்திருந்தது. 

அடுத்து, எண்ட்கேம் படத்தின் கதை “தேடல்” என்ற விடயத்தை மையமாகக் கொண்டிருக்கும். அதில், இன்ஃபினிடி ஸ்டோன்ஸை தேடி அவெஞ்சர்ஸ் செல்வர், கிளைமேக்ஸ் வரை இதைதான் காட்டுவார்கள். அதைப் போலவே, இதிலும் வில்லன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க சாவி போன்றதொரு கருவியை தேடிச்செல்வதே கிளைமேக்ஸ் வரை இருக்கும். 

எண்ட்கேம் படத்தில், டெஸராக்டை எடுக்க காலப்பயணம் மேற்கொள்ளும் போது, லோகி அவெஞ்சர்ஸை ஏமாற்றி விட்டு டெஸராக்டோடு மாயமாகி விடுவார். இதனால், அவெஞ்சர்களின் திட்டம் பிழைத்து விடும். ஸ்கை வோக்கரிலும் ரேயும் அவளது குழுவினரும் திட்டம் போட்டு இடையில் “பல்ப்” வாங்கி விடுவார்கள்.

மேலும், எண்ட் கேமில் தானோஸ் அவெஞ்சர்ஸின் திட்டத்தை அறிந்து அவர்களை துரத்தி வருவான். இதிலும் அதைப் போலவே கைலோ ரின், ரே மற்றும் குழுவினரை துரத்தி வருவான். மேலும் இரண்டு திரைப்படங்களிலுமே வெவ்வேறு உலகங்களுக்கு, கதை தாவிக்கொண்டேயிருக்கும்.

இது மிகவும் விசேஷமான ஒற்றுமை. எண்ட் கேமில், “And I am Iron- Man” என டோனி ஸ்டார்க் சொடக்கு போட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சொடக்கு போட்டு அனைவரையும் காப்பாற்றிய பெருமிதத்துடன் உயிர் துறப்பார். அதைப் போலவே, ஸ்டார் வார்ஸில் ரேயும் “And I am Last Jedi” என்று சொல்லி விட்டு அனைவரையும் காப்பாற்றி விட்டு உயிர்துறப்பாள் (ஆனால் டிவிஸ்ட் என்ற பெயரில் அவளை,பென் மீண்டும் உயிர் பெற செய்துவிட்டு, தான் இறந்து விடுவான்).

மேலும், அந்த இறுதிப் போர்க்காட்சிகள். இரண்டிலுமே இறுதியில் மாபெரும் போர் நடக்கும். அதிலும் குறிப்பாக எண்ட்கேமில், கேப்டன் அமெரிக்கா ஒத்தையாக தானோஸின் சேனையை எதிர்த்து  நிற்பார், அப்போது திடீரென ஒரு மாபெரும் படை துணைக்கு வரும். அதைப் போலவே, ஸ்டார் வார்ஸிலும் ரெபல்ஸ் தோற்கும் நிலைமையில் தனித்து விடப்பட்டிருப்பர், அப்போது லாண்டோ என்ற கதாபாத்திரம் தீடிரென பெரும்படையை கூட்டிக்கொண்டு வருவார்.

ஆக, இப்படியாக பல ஒற்றுமைகள் இரு படங்களிலுமே. இதில், நிறைய ஒற்றுமைகள் காசு பார்க்கும் நோக்கில் காப்பி+பேஸ்ட் செய்யப்பட்டதால்தான் ஸ்டார் வார்ஸ் அதன் தனித்தன்மையை இழந்து நிற்கிறது.






No comments

//]]>