Related posts

Breaking News

அடுத்து வெளியாக இருக்கும் மார்வல் திரைப்படங்கள் என்னென்ன (Marvel Phase 4)


அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் மூலம், உலகிலேயே அதிக வசூல் செய்த திரைப்படத்தை வெளியிட்டு சாதனை படைத்த மார்வல் நிறுவனம், மேலும் கல்லா கட்ட தனது பயணத்தை தொடரவுள்ளது. மார்வல் இதுவரை 3 பகுதிகளாக தனது Marvel Cinematic Universe பேனரின் கீழ் திரைப்படங்களை வெளியிட்டுள்ளது(Spiderman: Far from Home வரை). இதன் அடுத்த கட்டமாக பேஸ் 4ல் மார்வல் வெளியிட உள்ள படங்கள் பற்றிய அறிவிப்பை கெவின் ஃவெய்ஜி தலைமையில் மார்வல் கடந்த San Diego காமிக்ஸ்கானில் அறிவித்தது. 

அதன்படி, முதலாவதாக Black Widow. எண்ட்கேம் படத்தில் பிளேக் விடோ இறந்து விடுவார். அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு டிரிப்பியூட் போலதான் இந்த படம். ஸ்கார்லட் ஜோஹன்சனுடன் Stranger Things புகழ் டேவிட் ஹார்பரும் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். 2020ல் இப்படத்தை வெளியிட தீர்மானித்துள்ளார்கள்.


இதற்கடுத்து தோர் படத்தின் நான்காம் பாகம் உள்ளது. இந்த படத்திற்கு, Thor Love and Thunder எனப்பெயர் வைத்து உள்ளார்கள். இந்த படத்தில் ஜேன் வோஸ்டர் (தோரின் Ex) லேடி தோராக மாறி சாகசம் புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தோரின் மூன்றாம் பாகத்தை எடுத்த இயக்குனரே இந்த படத்தையும் இயக்கவுள்ளார்.



அடுத்த படம் கொஞ்சம் வித்தியாசமானது. அதுதான் Doctor Strange: In the Multiverse of Madness என்ற திரைப்படம். ஸ்பைடர் மேன் : Far from Home திரைப்படத்தில் மல்டிவர்ஸை காட்டுவது போல காட்டி நம்மை ஏமாற்றியிருப்பார்கள். ஆனால் இதில் உண்மையிலேயே மல்ட்டிவர்ஸை காட்டப் போகிறார்களாம். MCUவில் வரவுள்ள முதல்  Horror treatement கொண்ட திரைப்படமாக இது இருக்குமாம். 


அடுத்ததாக ஒரு புதிய வரவு Shang-Chi and the Legend of Ten Rings என்ற படம். ஷாங்-சீ மார்வல் திரைப்படங்களுக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தபடவுள்ள இந்த படத்தில், Infinity Stones போன்ற இன்னொரு வஸ்துவான பத்து மோதிரங்களையும் சேர்த்து அறிமுகப்படுத்துகிறார்கள். இதில் 10 Rings என்பது உண்மையிலேயே ஒரு அமைப்பை குறிக்கும். இவர்கள்தான், அயன்மேன் (2008) திரைப்படத்தில் அயன்மேனை கடத்தியிருப்பார்கள். இந்த படத்தில் வில்லனாக மேன்டரீன் கதாபாத்திரம் இடம்பெறலாம். 




மேலும், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் போல ஒரு பிரமாண்ட படைப்பாக வரவிருக்கிறது Eternals என்ற திரைப்படம். இதில் ஏஞ்சலினா ஜோலி போன்ற பெரிய ஸ்டார்கள் நடிக்கவுள்ளனர். 

Eternals Casting


இறுதியாக, The Blade. இது ரத்த காட்டேரிகளை வேட்டையாடும் ஒரு கதாபாத்திரம். காமிக்ஸிலும் முன்னைய படங்களிலும் ரத்தம் தெறிக்கதான் பிளேட் வலம் வருவார். ஆனால், டிஸ்னி PG-13 படங்களை மட்டுமே எடுத்து வருவதால் பல மாறுதல்கள் இதில் இருக்கும். இந்த படத்தில் மஹர்ஷலா அலி நடிக்கவுள்ளார். 

Mahershala Ali and Kevin Feige
இவையனைத்துமே சான் டியாகோ காமிக்ஸ் கானில் அறிவிக்கப்பட்ட திரைப்படங்கள் மட்டுமே. இதை தாண்டியும் நிறைய படங்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments

//]]>