Related posts

Breaking News

Elseworlds


CW என்னும் சேனலில்  Flash,Arrow மற்றும் Supergirl என்ற DC கொமிக்ஸின் தொடர்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதில் அவ்வப்போது மூன்று தொடர்களையும் ஒரே கதையில் இணைந்து Crossoverகள் நடைபெறுவது வழமை. சமீபத்தில் இதேபோன்ற ஒரு Crossover தொடரான Elseworlds ஒளிபரப்பப்பட்டது. Elseworldsஐ பற்றி பார்க்கும் முன் சில விடயங்கள்,

(1) DC கொமிக்ஸின் நாயகர்களை வைத்து CW என்னும் நிறுவனம் பல வருடங்களாக தொலைக்காட்சித்தொடர்களை வெளியிடுகிறது.இத்தொடர்கள் அத்தனையும் ஒரே காலகட்டத்தில் நடைபெறுகிறது,இவற்றை பொதுவாக "Arrowverse"   என அழைப்பர்.

(2) DCயில் நம் உலகை போன்றே பல பிரபஞ்சங்களில் பல்லாயிரக்கணக்கான உலகங்கள் உள்ளன. இவற்றுக்கிடையே இலகுவாக பயணம் செய்யவதற்கான பெறிமுறைகளை தொடரில் எப்போதோ அறிமுகப்படுத்தி விட்டார்கள்.

(3) இந்த மூன்று தொடர்களையும் ஓரளவுக்கேனும் பார்த்து பழக்கப்படாதவர்கள் கீழே உள்ளதை வாசித்து தலை கிறுகிறுத்துப் போய்விடாதீர்கள். மேலும் இது பகுப்பாய்வுகள் குறைவான கதைபற்றிய சிறு அறிமுகம் மாத்திரமே.

ஒலிவர் குயின் (Arrow) பேரி ஏலனின்(Flash) வீட்டில் கண்முழிக்கிறார். தனக்கு பேரியின் சக்திகள் இருப்பதை உணர்கிறார். அதே நேரம் பேரி, கீரின் ஆரோவின் திறமைகள் தனக்குள் இருப்பதை உணர்கிறான். இது இவ்வாறிருக்க, சுற்றியுள்ள அனைவரும் பேரி ஆலனை ஒலிவராகவும் ஒலிவரை பேரி ஏலன் எனவும் அழைக்கின்றனர், பழகுகின்றனர்.

டைம்லைனில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை ஒலிவரும் பேரியும் அவர்களின் நண்பர்களிடம் பகிர, ஏதோ பிரச்சனை என நினைக்கும் அவர்கள்,பேரி மற்றும் ஒலிவரை சிறை வைத்து விடுகின்றனர். தங்கள் உலகமான Earth-1ல் உள்ள அனைவருமே ஒலிவரை பேரியாகவும் பேரி ஏலனை ஒலிவராகவும் நினைத்துக்கொண்டிருப்பதால் அங்கிருந்து தப்பிக்கும் அவர்கள் Earth-38ல் உள்ள சூப்பர் கேர்ளின் உதவியை நாடுகின்றனர். அவர்களோடு சூப்பர் மேனும் சேர்ந்து கொள்ள அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

Spoiler Alert

இத்தொடர் அடுத்து வருடம் நடைபெறப்போகும் Crossoverன Crisis on Infinite Earthன் சிறு தயார்ப்படுத்தல் மாத்திரமே.

Book of Destiny பற்றியும் Monitor என்ற கதாபாத்திரத்தை பற்றியும் இதில் விளக்கியுள்ளனர்.  அதேநேரம் Batgirlஐ இதில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். தொலைக்காட்சித்தொடர் என்பதால் கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தது அதேநேரம் திரைக்கதையும் சற்றே இழுவை. எனினும் கதை சற்றே அழுத்தமானது. எக்கச்சக்கமான DC கதாபாத்திரங்களை இதில் பார்க்கலாம் மற்றும் பேட் மேன் ஏன் கோதம் நகரில் இல்லை என்பதையும் விளக்க முயற்சித்துள்ளார்கள்.

கிராபிக்ஸ் சினிமாக்களை போல இல்லாவிட்டாலும் தொடருக்கு தேவையான அளவுக்கு உள்ளது. எனினும் முன்பு இருந்ததை விட CG worksன் தரம் இத்தொடர்களில் குறைந்துள்ளதை கண்கூடாக காணமுடிகிறது.

இறுதிகாட்சியில் ஒலிவர் குயின் பேரி மற்றும் சூப்பர் கேர்ளின் உயிரை காப்பாற்ற மொனிடருடன் ஒரு பேரம் பேசுவார். இதைக்கொண்டு சில முடிவுகளுக்கு வரக்கூடியதாக இருந்தது. Green Arrow 7 சீசன்களாக ஓடிகொண்டிருக்கிறது. பேட்கேர்ளுக்கென தனித்தொடர் வேறு வரப்போகிறது. ஆக ஒலிவர் குயின் அடுத்த க்ரொஸ்ஓவரில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.ஒலிவர் குயின் கிளைமேக்ஸுக்கு பின் பேரியுடன் பேசிய சில வார்த்தைகளும் இதை உறுதிப்படுத்துவது போல் இருந்தது.
ஆனால் DC comicsன் Crisis on infinite earthsல் Supergirl மற்றும் Flash ஆகியவர்களே உயிர்தியாகம் செய்வார்கள். இதில் சற்றே மாற்றி எழுதப்போகிறார்கள் என நினைக்கிறேன். 




கறுப்பு சூட் அணிந்த சூப்பர் மேன், எக்ஸ் மென்னில் உள்ள செண்டீனல்ஸை ஒத்த A.M.A.Z.O  என்பவற்றை காண நினைப்பவர்கள் மற்றும் DCயின் திரைப்படங்களை விரும்பிபார்ப்பவர்கள் Elsewordlsஐ ஒரு முறை கண்டுகழிக்கலாம்.

No comments

//]]>