Related posts

Breaking News

Hellboy (2019) : Sneakpeek and Trailer BreakdownHi folks..!சமீபத்தில் Hellboy டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனேவே நான் Hellboy பற்றி காட்டு காட்டு என காட்டிய காட்டு உரையை படிக்க கீழே கிளிக் செய்யவும்.

Hellboy (நரக மனிதன்)

கில்லர்மோ டெல் டோரோ என்னும் ஜாம்பாவான் ரோன் பேர்ல் மேனை வைத்து ஏற்கனேவே அட்டகாசமான இரண்டு Hellboy திரைப்படங்களை கொடுத்திருந்தார். பெரியளவிலான சந்தைப்படுத்தல் இல்லாததல் சாதரணமான ஒரு வெற்றியையே இந்த திரைப்படம் பெற்றிருந்தது. எனினும் மேக்கிங்கில் எப்போதும் தான் "கிங்" என நிரூபிக்கும் கில்லர்மோ அதை இந்த படத்தொடரிலும் செய்து காட்டியிருந்தார்.

Hellboy IIக்கு பிறகான வெற்றியில் கில்லர்மோ மூன்றாம் பாகம் இயக்குவது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியே 2017வரை Hellboy மூன்றாம் பாகம் இயக்குவது பற்றி அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தவர் 2017ல் தனது டிவிட்டர் கணக்கின் மூலம் Hellboy 3 இடம்பெறாது என அழுந்ததிருந்தமாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கான காரணங்களில் ஒன்று Hobbit படத்தை டெல் டோரா இயக்குவதாய் இருந்தது. எனினும் பின்னர் ஏற்பட்ட சிக்கல்களினால் அதிலிருந்து அவர் விலகினார். அதேபோல் Pacifc Rim Uprising நல்ல வசூலை ஈட்டினால் Hellboy  மூன்றாம் பாகத்தை தாம் தயாரிப்பதாக Lengendry Pictures குறிப்பிட்டிருந்தனர். எனினும் அந்த படத்தில் இருந்தும் சில காரணங்களால்  அவர் விலகவேண்டியதாயிற்று.  மேலும் Hellboy கதைகளின் எழுத்தாளரான மைக் மிக்னோலோ தனது கதையை படமாக எடுக்கவே விருப்பப்பட்டார். எனினும் கில்லர்மோ அவரது திரைக்கதையை படமாக எடுப்பதிலேயே முனைப்புடன் இருந்ததால் சில முரண்பாடுகள் மூண்டது.

பின்னர் இந்த புதிய Hellboy திரைப்படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளர்கள் ரொன் பெர்ல்மேனை அணுகிய போது, "கில்லர்மோ அல்லாத Hellboy திரைப்படத்தில் தான் நடிக்க விரும்பவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

எது எவ்வாறெனினும் புதிய ஹெல்போய் வருவாதாக முடிவாயிற்று.  Game of Thrones, West World மற்றும் Constantine போன்ற தொடர்களின் சில எபிசோடுகளை இயக்கிய  Neil Marshall இந்த படத்தை இயக்குகிறார். அதேவேளை Stranger Things புகழ் டேவிட் ஹார்பர் ஹெல்பாயாக நடிக்கிறார்.

இந்த திரைப்படம் ஏற்கனேவே வந்த இரண்டு பாகங்களின் தொடர்சி அல்ல, அதேநேரம் ஹெல்போயின் ஒரிஜின்ஸ் இதில் சொல்லபடபோவதுமில்லை. Hellboy: The Wild Hunt என்னும் கொமிக்ஸ் கதையை அடிப்படையாகக் கொண்டது இத்திரைப்படம்.

                       
                                                 

Hellboy : The Wild Huntயை பற்றிப்பார்ப்போம். Wild Hunt என்பவர்கள் ராட்சச அரக்கர்களை வேட்டையாடும் குழுவினர் ஆவர். இவர்கள் ஒரு தடவை ஹெல்போயின் உதவியை நாட, அவர்களோடு ஹெல்போய் பயணிக்கிறார். அவர்கள் ஹெல்போயையும் அரக்கன் என குறிப்பிட்டு அவனை தாக்குகிறார்கள். ஹெல்போய் அங்கிருந்த காப்பாற்றப்பட்டு கிங் ஆர்தரின் கல்லறையில் கண் முழிக்கிறார்.

இது இவ்வாறிருக்க இன்னொரு பக்கம் Gruagach என்பவன் Queen of Blood எனப்படும் சூனியக்காரியை உயிர்பித்து விடுகிறான். இதில் Gruagach என்பவன் மனிதாக இருந்து பின்னர் ஒரு சாபத்தினால் காட்டுப்பன்றியாக மாறியவன். இவன் இப்படி அலைவதற்கு Hellboyயும் ஒரு காரணம். பின்னர் Queen of Blood மற்றும் Hellboyக்கு இடையே நடக்கும் சம்பவங்களே கதையாக நீள்கிறது.

                                          


இனி டிரெய்லருக்கு வருவோம்.

" They warned us something was comming, if there is ever an end in this forever war, it will be beacuse of you and your strong right hand " என்ற வொய்ஸ் ஓவரோடு டிரெய்லர் துவங்குகிறது. ஆக மீண்டும் உலகத்தை காப்பாற்ற ஒரு சூப்பர் ஹீரோ கிளம்பப்போகிறார் என்ற அதே பழைய மாவை அரைக்கப்போகிறார்கள் என்பதை அறிந்துக்கொள்கிறோம். வழக்கமாக உலகம் என்ற பெயரில் அமெரிக்காவைதான் காப்பாற்றுவார்கள் ஆனால் இந்த முறை லண்டனை காப்பாற்ற போகிறார்கள் போலும்.

பின்னர் ஒரு இருள் சூழ்ந்த களேபரமான இடத்தில் Hellboy ஒரு ஜீப்பில் இருந்து இறங்கி வருவதை பார்க்கிறோம். அவரை ஒருவன் சுட்டுவிட, Hellboy தான் உங்களின் பக்கம் உள்ளவன் என கூறவும் அவன் மன்னிப்பு கேட்கிறான். ஹெல்போயை புதிதாக பார்ப்பவர்கள், " என்னடா ஒரு அரக்கன ஹீரோவாக காட்டுறாங்களே" என எண்ணுபவர்களுக்காக இந்த காட்சி வைக்கப்பட்டிருக்கலாம்.
அதன்பின்னர் B.P.R.Dயில் நடக்கும் சம்பவங்களை காண்கிறோம்.தன்னை ஆயுதமாக பயன்படுத்தவதாக டிரவரிடம் ஹெல்போய் கூற அதை மறுக்கும் டிரவர் " உன்னை சிறந்தவனாக்கவே தான் உதவி செய்ய எண்ணுகிறேன் " எனக்குறிப்பிடுகிறார்.டிரவர்தான் ஹெல்போயின் வளர்ப்பு தந்தையாவார். நரகத்தில் இருந்து வந்த அரக்கனை உலகில் உள்ள கெட்ட சக்திகளுக்கு எதிராக பயன்படுத்துவது இவரே. இதை Bureau Of Paranormal Paranormal Research and Defense( B.P.R.D) என்ற அமைப்பின் மூலம் செயல்படுத்துகிறார்.அதேவேளை Gruagach உடன் ஹெல்போய் மோதுவதையும் ஹெல்போயின் துப்பாக்கியையும் நாம் பார்க்கிறோம். Injustice 2 வில் உள்ள ஹெல்போயின் துப்பாக்கி நன்றாக இருக்கும். இதுவும் கூட சிம்பிளாக அருமையாகதான் உள்ளது.
Hellboy in Injustice 2
ஒரு வீட்டில் இருந்து ஹெல்போய் விழுவதை பார்க்கிறோம். அது கால்களை கொண்டதொரு நகரும் வீடு. அதில் இருக்கும் சூனியகாரியிடம் ஹெல்போய் உதவிகோருவதாக கொமிக்ஸில் இருக்கும்.
பின்னர் Wild Hunt உடன் ஹெல்போய் செல்வதை பார்க்கிறோம். அதில் மானின் உருவம் கொண்ட முகமூடியை அணிந்து முன்னால் பயணிப்பவர்தான் அக்கூட்டத்தின் தலைவன் ஆவான்.       

பின்னர் காட்டப்படும் பெண்மனி Alice Mongahnனாக இருக்க வேண்டும். " The Corspse " என்னும் கதையில் Gruagachடமிருந்து ஹெல்போய்தான் இவளை காப்பாற்றுவார்.
அதன்பிறகு ஒரு அறையில் கோட் சூட் அணிந்த சிலர் இருப்பதை பார்க்கிறோம். உண்மையில் Wild Huntல் இவர்கள்தான் ஹெல்போயை Wild Hunt குழுவினருடன் கோர்த்து விடுவார்கள் (Wild Huntன் ஆரம்பத்தில் சிவனே என இருக்கும் ஹெல்போயை கடிதமனுப்பி வரவைப்பவர்களும் இவர்களே). Hellboyயின் Right hand of doom பற்றி இவர்கள் கேட்க அதற்கு நகைச்சுவையாக ஹெல்போய் பதிலளிக்கிறார். உண்மையிலேயே இந்த Right hand of doom என்பது நரகத்திற்கான நுழைவாயிலை திறப்பதற்கான சாவியாகும்.


பின்னர், நெருப்பில் வெந்து கொண்டிருக்கும் ஒரு நகரத்தை பார்க்கிறோம். இது இறுதிக்காட்சியில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதில் பறந்துகொண்டிருக்கும் டிராகனை அழிவிற்கான அடையாளமாக குறிப்பிடுவார்கள்.  பின்னர் சில டீமன்கள், அவற்றோடு ஹெல்போய் சண்டையிடுவது ஆகிய காட்சிகளை பார்க்கிறோம்.குறிப்பாக இந்த காட்சியை கவனியுங்கள். எத்தனை குரூரம் அதையும் ரசிக்கதக்க விதத்தில் காட்சிபடுத்தியுள்ளார்கள்.பின்னர் ஆக்ரோஷமான வில்லியான குயின் ஒஃவ் பிளட்டின் அறிமுகம். ரெசிடண்ட் ஈவிலில் சோம்பிக்களை சராமாரியாக சுட்டுத்தள்ளிய மிலாதான் இதில் Queen of blood. வழக்கமான வில்லன்களை போல உலகை அழிப்பதுதான் இவளது நோக்கம்.
பின்னர் மொன்ஸ்டர்கள் ஹெல்போயை புரட்டிப்போடுவது, ஹெல்போயை மொன்ஸ்டர் என்று அழைப்பவரை கலாய்பது என தாறுமாறாக டிரெய்லர் செல்கிறது.

இறுதியில் நெருப்பிலான கீரிடம் மற்றும் கிங் ஆர்தரின் வாளுடன்- வாளும் எரிந்துக்கொண்டிருக்கிறது-ஹெல்போய் ஒரு கிணற்றிலிருந்து எழும்பி வருவதை பார்க்கிறோம்.கிங் ஆர்தர் என்பவர் ஐரோப்பாவை சேரந்த ஒரு மன்னராவார். தோரின் சுத்தியல் போல இவரிடம் ஒரு வாள் உள்ளது. இது இவருக்கும் அரச வம்சத்தினருக்கும் மாத்திரேமே கட்டுப்படும். இந்த வாளை உடைமையாக்குபவர்கள் மாத்திரமே இங்கிலாந்தை ஆளும் தகுதி கொண்டவர்களாக கருதப்படுவார்கள். உண்மையிலேயே, ஹெல்போயும் ஒரு இளவரசன்தான், நரகத்தின் இளவரசன். இந்த காரணத்திற்காகதான் வைல்ட்  ஹண்ட்கள் ஹெல்போயை அழிக்க நினைப்பார்கள் (ஒரு வேளை அவன் இங்கிலாந்திற்கும் அரசனாகிவிடுவானோ என்ற எண்ணத்தில்).
கிங் ஆர்தரின் கத்தி தன்னை கையகப்படுத்துபவர்களின் இயல்புகளுக்கேற்ப சக்தியை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. கிங் ஆர்தரின் கல்லறையில் இருந்துதான் இவ்வாளை ஹெல்போய் கைப்பற்றப்போகிறார். இந்த வாளின் பெயர் Excalibur. 

இந்த டிரெய்லரில் Billy Idolன் "Mony Mony" என்ற பாடல் பிண்ணனியில் ஒலிக்கிறது. இது ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு ரோக்பாணியிலான சிங்கிள் டிராக் ஆகும். இந்த டிரெய்லருடன் மிக இயல்பாக பொருந்தி போகிறது.

அடுத்து,ஹெல்போயின் வடிவமைப்பு உண்மையிலேயே எனக்கு பிடிக்கவில்லை. கில்லர்மோவின் ஹெல்போயினுடைய கம்பீரம் இதில் இல்லை. பழைய ஹெல்போயை ரோடு ரோலருக்கு அடியில் வைத்து எடுத்தாற் போல இருக்கிறது முக அமைப்பு. இருப்பினும் தனுஷ் போல பார்க்க பார்க்க பிடித்து போய்விடும் என நம்புகிறேன்.

Guillermo's Hellboy
Hellboy (2019)
இறுதியாக, கதை மிகவும் இருண்ட தன்மை கொண்டது. அதே நேரம் R rated திரைப்படம் என்பதால் ரத்தம் தெறிக்கும். அலர்ஜியானவர்கள் மற்றும் மார்வல் விசிறிகள் படத்தை பார்க்காமல் ஒதுங்கி கொள்வது சுபம்.No comments

//]]>